Followers

Wednesday, August 31, 2011

குட்டிச்சுவர் பாகம் - 6

வணக்கம் நண்பர்களே...


முந்தய பாகங்களுக்கு...சுவர் புராணம் (5)

குட்டிச்சுவர் தொடர்கிறது....

அப்பா: என்ன சார் என்ன தான் ஆச்சி....

போலீஸ் Head: அய்யா கூட்டி வர சொன்னாருங்க....விஷயம் எதுவும் சொல்லல....

அப்பா: டேய் உன்ன தேடி போலீஸ் வந்து இருக்கு...என் வாழ்கைல இன்னும் என்னல்லாம் பாக்க வேண்டி இருக்கோ தெரியல....

டிங்கு: ஒன்னும் பிரச்சனையில்ல போய் என்னன்னு கேட்டுட்டு வர்றேன்...இருங்க....

அப்பா: நான் வேணா வரட்டுங்களா ஏட்டய்யா....

போலீஸ் Head: வேணாமுங்க....அவரு தம்பிய மட்டும் தான் கூட்டி வர சொன்னாரு....

அப்பா: சரிங்க....

(போலீஸ் ஸ்டேஷனில்...இன்ஸ்பெக்டர் பேச ஆரம்பித்தார்)


போலீஸ்: டிங்கு நீங்க கொடுத்த information கரெக்ட் தான்...அந்த இடத்துல யாரையோ அடைச்சி வச்சிருந்தாங்க போல....நான் போறதுக்குள்ள தப்பிட்டாங்க...இன்னொரு விஷயம் என்னை Transfer பண்ணி இருக்காங்க...இனி நீங்க ஜாக்கரதையா இருங்க...நீங்க ஒரு போலீஸ் informer அப்படிங்கற விஷயம் வெளிய தெரிஞ்சா உங்களுக்கு நல்லது இல்ல...

டிங்கு: நான் பாத்துக்கறேன் சார்....

போலீஸ்: இன்னொரு விஷயம் அந்த பேங்க் மேனஜர் கிட்ட ஏதாவது பிரச்சனையா....அவரு உங்க மேல கம்ப்ளைன்ட் கொடுக்க ட்ரை பண்ணாரு...இரவு நேரத்துல அவர நீங்களும் உங்க நண்பர்களும் போய் மிரட்டுனதா....Any problem...ஏன்னா நான் அந்த விஷயத்த சீரியசா எடுக்காம உங்கள கூப்பிட்டு warn பண்றதா சொல்லிட்டேன்...

டிங்கு: அது ஒரு லோன் பிரச்சன சார்...அவரு ரொம்ப யோக்கியஸ்தன் ஹிஹி!


போலீஸ்: சரி நீங்க ஜாக்கரதையா இருங்க அந்த சாராய கோஷ்டி மறுபடியும் பெயில்ல வந்துட்டான்....அடுத்து எனக்கும் உங்களுக்கும் தான் குறி வைப்பான்...எதுக்கும் தயாரா இருக்கணும்....சாயந்தரதுல வெளி இடங்களுக்கு போகாதீங்க....

டிங்கு: சரி சார்....நான் வரேன்....

(வெளியே நண்பர்கள் வந்திருந்தனர்....)

பங்கு: ஏன்டா ஒன்னும் பிரச்சன இல்லையே.....நான் மீனா வீட்டுக்கு கூப்பிட்டு சொல்லவா....

டிங்கு: ஒன்னும் இல்ல வீட்ல பயப்படவேணாம்னு மீனுக்கு போன்ல சொல்லிடுங்க நாம போவோம்....

பங்கு: அம்மா உன்னைய அந்த சிவலிங்க சாமி கோயிலுக்கு போயிட்டு அப்புறமா வீட்டுக்கு வர சொன்னாங்க....

டிங்கு: சரி...வாங்கடா போவோம்...மனசு சரி இல்ல...அந்த அமைதியான இடம் இந்த நேரத்துல தேவைதான்....

(நேரம் மாலை 6 மணியைத்தாண்டியது...நண்பர்கள் கிளம்பினர்!)

டங்கு: மாப்ள நீயும் பங்குவும் அந்த பைக்குல வந்துருங்க...நாங்க முதல்ல கெளம்பறோம்....

டிங்கு: சர்ரா....கோயில் தர்மகர்த்தா பையன் வரான்...ஒரு தாங்க்ஸ் சொல்லிட்டு வரேன் நீங்க முன்னாடி போங்க....

(அந்த நண்பனைப்பார்த்து நன்றி தெரிவித்து விட்டு இருவர் பைக்கில் கிளம்பினர்...வரும் வழியில் திடீரென்று ஒரு வெள்ளை மாருதி வேன் வந்து நின்றது...அதில் இருந்து நாலு தடியர்கள் கையில் பட்டா கத்திகளுடன் இறங்கினர்!....அதில் ஒருவன்....)


தடி குரல்: டேய் என்னையா ஜெயுளுக்கு அனுப்பற...உன்ன இன்னைக்கு கொல்லாம விடமாட்டேண்டா.....என்றான்...

பங்கு: மாப்ள வண்டிய திருப்பு மாந்தோப்பு வழியா போ.....

(வண்டியை அவசர கதியில் திருப்பி கொண்டு விரைவு படுத்தினர் நண்பர்கள்...சர்ரென்று...இன்னொரு சிகப்பு மாருதி வந்து நண்பர்கள் வந்த பைக்கை இடித்தது....இருவரும் சில நொடிகள் அந்தரத்தில் பறந்து பல அடிதூரம் போய் விழுந்தனர்!)

தடி குரல்: டேய் முடிஞ்சா இன்னைக்கு உசுரோட போங்கடா...பாப்போம் என்று சொல்லிக்கொண்டே அவன் வீசிய அருவா பங்குவின் கையை பதம் பார்த்தது...

(அம்மா என்று கத்திக்கொண்டே சரிந்தான் பங்கு...அதுவரை தங்களை காப்பற்றி கொள்ள ஓட வேண்டிய கட்டாயத்தில் இருந்த டிங்கு....கீழே விழுந்த அருவாளை கையில் எடுத்தான்....தன்னையும் தன்னை நம்பி வந்திருந்த நண்பனின் உயிரும் மட்டுமே இப்போது அவனுக்கு கண்ணுக்கு முன் வந்து நின்றன....!)

டிங்கு: எலேய்...என்னைய பாத்தா உங்களுக்கு பயந்து ஓடுற நாய் போல இருக்கா....வெடக்காளி வாங்கடா இன்னிக்கி எத்தன பேரு உசுரோட திரும்ப போறீங்கன்னு பாக்குறேன்....


விசுக் விசுக்கென்று அருவாள்கள் மோத ஆரம்பித்த சில நிமிடங்களில் டிங்கு அணித்திருந்த சட்டை முழுக்க ரத்தக்கறை...அவனிடம் மோதியவர்களில் பலரும் ஓட்டமெடுத்து ஓடிக்கொண்டு இருந்தனர்..ஒருவனைத்தவிர....

தொடரும்.....

கொசுறு: உலகத்தை நேசி ஒருவரையும் நம்பாதே...உறங்கிய போதும் ஒரு கண்ணை மூடாதே....!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

17 comments:

செங்கோவி said...

ஏன்யா பேய் மாதிரி இந்நேரம் பதிவு போடறீங்க..போங்கய்யா..போய் தூங்குங்க.

விக்கியுலகம் said...

@செங்கோவி

யோவ் எனக்கு காலை 6 மணி ஹிஹி!

செங்கோவி said...

தமிழ்மணம்...இப்பவும் நான் தான் வந்து இணைக்க வேண்டியிருக்கு.

செங்கோவி said...

அப்போ நான் தான் பேய் மாதிரி உட்கார்ந்திருக்கனா..அவ்வ்!

FOOD said...

//செங்கோவி
தமிழ்மணம்...இப்பவும் நான் தான் வந்து இணைக்க வேண்டியிருக்கு.//
அது நீங்க நல்லா இணைப்பீங்கன்னுதான்!

மகேந்திரன் said...

//உலகத்தை நேசி ஒருவரையும் நம்பாதே...உறங்கிய போதும் ஒரு கண்ணை மூடாதே....!///


நெத்தியடி மாம்ஸ்

M.R said...

thamil manam 7

நல்ல தொடர் தொடருங்கள் தொடர்கிறேன்.

டிஸ்கி கருத்து அருமை மாம்ஸ்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Kalakkal story boss . . .

தனிமரம் said...

தொடருங்கள் யார் ஓடாத ஒருத்தன்?

தனிமரம் said...

தொடருங்கள் யார் ஓடாத ஒருத்தன்?

சசிகுமார் said...

அருமை

சசிகுமார் said...

அருமை

இரவு வானம் said...

மாம்ஸ் அப்பவே கொலவெறியா இருந்திருப்பீங்க போல :-)

ஜீ... said...

சூப்பர் மாம்ஸ்! டிங்கு நீங்கதானே? கடைசில ரெட் பாட்டெல்லாம் போட்டு! :-)

இராஜராஜேஸ்வரி said...

உலகத்தை நேசி ஒருவரையும் நம்பாதே...உறங்கிய போதும் ஒரு கண்ணை மூடாதே....!/

தத்துவம்??

ராஜா MVS said...

அருமை..

ரம்ஜான் வாழ்த்துகள்.. மாம்ஸ்..

நிரூபன் said...

ஜெயில் வாழ்க்கை, அடி தடி,
அருவா சண்டை என்று கதை சுவாரஸ்யமாக நகர்கிறது பாஸ்.

அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்.