Followers

Thursday, August 11, 2011

மல்லிகையே மல்லிகையே - வியட்நாம்(Vietnam!)

வணக்கம் நண்பர்களே....

 நம்மூரு பெண்கள் என்ன தான் அழகா உடை உடுத்தினாலும்(!) பூக்கள் சூடி இருந்தால் தான் அழகுக்கு அழகு சேர்ப்பது போல் இருக்கும்....இதை எல்லா நாட்டிலும் எதிர்பார்க்க முடியாது தானே....அதைப்பற்றிய பதிவு இது...(!)

 இங்கு பூக்களை தினமும் வாங்கி செல்வோர் உண்டு(!)...அதனை தங்கள் வரவேற்ப்பறையில் வைக்கும் பழக்கம் இங்கு நகரத்தில் வாழ்பவர்களிடம் மிகுதியாக காணப்படுகிறது....எனவே தினமும் நடைப்பயிற்சியில் இருந்து வீடு திரும்பும்போது வரும் வழியெங்கும் பூக்கள் நிறைந்து இருக்கும்....நாங்களும் இதை பின்பற்றி வீட்டில் பூக்களை ஒரு சிறிய உயரிய ஜாடியில் வைத்து வீடு முழுதும் மனம் பரப்பி வந்தோம்(!)....

என் மனைவிக்கு என்னை சற்று அலைய விட வேண்டும் என்று தோன்றி இருக்க வேண்டும்....திடீரென்று என்னை பார்த்து...


"என்ன இருந்தாலும் தமிழ் நாட்டில் வாங்கும் மல்லிகைக்கு நிகராகுமா"என்றாரே பார்க்கலாம்...

"ஏன் அப்படி என்று நான் கேட்க்க"...

அதான் இந்த சுற்று சுற்றி வருகிறீர்களே(!)....முடிந்தால் ஒரு முழம் மல்லிகைப்பூ வாங்கி வாருங்கள் பார்க்கலாம் என்று கூறிவிட்டார்கள்.....


நானும் "ஒரு மல்லிகையே மல்லிகை கேற்ப்பது ஞாயமா" என்று கூற....(ஐஸ்!)

இந்த சமாளிப்பு தேவை இல்லை என்று எதிர் தரப்பு(!) கூற....

நானும் அதற்கென்ன வாங்கி தருகிறேன் என்று வாய் வார்த்தையாக கூறிவிட்டேன்....பிறகுதான் தெரிந்தது அந்தப்பூ மட்டும் இங்கு கிடைப்பதில்லை என்று(!).....இருந்தாலும் ஒரு முடிவு செய்தேன்...எப்படியாவது தேடி கண்டுபிடிப்பது என்று(!)....ஒரு காபி கடையில்(cafe!) நான் மற்றும் என் மனைவியும் உட்க்காந்து இருக்கும் போது மல்லிகையை ஒரு சிறிய கண்ணாடி டப்பாவில் தண்ணீரில் மிதக்க விட்டு இருந்தார்கள்...விடுவேனா(!) உடனே அந்த கடைக்கார பெண்ணை அழைத்து இந்த பூ வேண்டும் கூற....(!)


அவள் என்னிடம் நாளை வாங்கி வருகிறேன் என்று கூறினாள்....மற்றும் இந்தப்பூ மிக அரிதாக பூக்கும் வகையை சேர்ந்தது...உங்களுக்கு எதற்கு என்று கூறவே...நானும் எம் குல பெண்கள் இந்த பூவை தலையில் சூடும் பழக்கமுடையவர்கள் என்று கூற(!)...அவள் ஆச்சரியத்துடன் பார்த்து விட்டு சென்றாள் எங்கள் இருவரையும்...


அடுத்த நாள் 100 கிராம் மல்லிகை கிடைத்தது($3)...நன்றி கூறினேன் அந்த அன்பிக்கு(!)...எப்படியோ மனைவி கேட்டு இல்லை என்று சொல்லாமல் தப்பித்து விட்ட மகிழ்ச்சி எனக்கு....

சுயபுராணம் தவிர்த்து....இங்கு பலவித பூக்கள் அழகுடன் ஜொலிப்பதை எண்ணி வியக்கிறேன்....அதுவும் ஆள் உயர செடிகளுடன் கூடிய பூக்களும் விற்ப்பனைக்கு வருகின்றன....

என்னதான் சொல்லுங்க நம்மூர்ல பெண்கள் தலையில் சூடிவரும் அழகுக்கு இணை ஏது(!)


கொசுறு: எங்க போனாலும் நம்ம ஊரு(!) போல தேடுறதே பொழப்பா போச்சி ஹிஹி!  
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

30 comments:

ஜீ... said...

Me the first?

ஜீ... said...

யாரையுமே காணோம்?
பூவுக்காக மாம்ஸ் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்காரு! வாழ்த்துக்கள் அடிக்கடி இப்பிடி மாட்டுவதற்கு! :-)

தமிழ்வாசி - Prakash said...

tamilmanam attached maams

பாரத்... பாரதி... said...

இது பூக்கள் மணக்கும் பதிவு...

பாரத்... பாரதி... said...

நல்லவேளை எந்த ஊரு மல்லினாலும் , மதுரை மல்லி மாதிரி வருமா-னு யாரும் சொல்லாமல் விட்டதற்காக சந்தோஷப்படுங்கள்.

தமிழ்வாசி - Prakash said...

malligaiyil enakku pottiyaa?

சி.பி.செந்தில்குமார் said...

பிரகாஷ் கூ ட சேர்ந்தாலே இப்படித்தான்.. மல்லி ஜொள்ளி

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

வியட்நாம் மல்லி அழகு...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

ரைட்டு...

செங்கோவி said...

ஆமா விக்கி..மல்லிக்கு தனி அழகு உண்டு.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பேசாம நம்ம தமிழ்வாசிக்கு ஒரு போன் அடிச்சிருந்தா ஒரு கப்பல் புல்லா மல்லி வாங்கி அனுப்பிச்சிருப்பாரே?

மாய உலகம் said...

உண்மை தான்... மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ.... பூக்களில் மல்லிகைக்கு இருக்கும் அழகு வேறு எந்த பூவுக்கும் இல்லை... வாசம் தூக்கும் பாருங்க ஒரு தூக்கு.... அப்பா...சூப்பர் பதிவு பாஸ்

ஸாதிகா said...

மல்லிகை பற்றி மணமான ஒர் பகிர்வு.

குணசேகரன்... said...

nice post.pictures are nice.

! சிவகுமார் ! said...

//இதை எல்லா நாட்டிலும் எதிர்பார்க்க முடியாது தானே//

உங்கள் சோகம் புரிகிறது......

# கவிதை வீதி # சௌந்தர் said...

பதிவு மணக்கிறதையா...

கோகுல் said...

நீங்க மல்லின்னு சொல்றது கொத்தமல்லியா சுக்கு மல்லியா?
ஐயோ பாவம் அவரே கன்பியுஸ் ஆயிட்டாரு?

காட்டான் said...

மாப்பிள நாங்களும் போடுவோமில்ல வோட்டு...
காட்டான் குழ போட்டான்..

தமிழ்வாசி - Prakash said...

இன்டலி, tamil10 ஓட்டு இப்ப தான் போட்டேன்

Chitra said...

எப்படியோ மனைவி கேட்டு இல்லை என்று சொல்லாமல் தப்பித்து விட்ட மகிழ்ச்சி எனக்கு....

...How sweet!

Chitra said...

Nice pics.

Chitra said...

எங்க போனாலும் நம்ம ஊரு(!) போல தேடுறதே பொழப்பா போச்சி


..... தாய்மண் பாசத்தின் வெளிப்பாடு. :-)

M.R said...

.இதை எல்லா நாட்டிலும் எதிர்பார்க்க முடியாது தானே

மாப்ளைக்கு ஏக்கமோ ?

M.R said...

மல்லிகையை பத்தி மணக்க மணக்க சொல்லி இருக்கீங்க .

பகிர்வுக்கு நன்றி

FOOD said...

”மல்லிகை என் மன்னன் மயங்கும்” என்ற பாடல் ஒலித்திருக்குமே!

N.Manivannan said...

அண்ணே சரிதான் மல்லிகை பூவா வச்சே ஒரு பதிவா ,எங்க ஊருபக்கம் வாங்கன்னே ஓசிலே அள்ளிட்டு போகலாம்

ஷீ-நிசி said...

மல்லிகைப்பூ இங்கே லேசில் கிடைக்கிறது... வியட்நாமில் அரிது..

எப்படியோ வாங்கி கொடுத்துட்டீங்க :)

இராஜராஜேஸ்வரி said...

நானும் "ஒரு மல்லிகையே மல்லிகை கேற்ப்பது ஞாயமா" என்று கூற....(ஐஸ்!)


மல்லிகையே மல்லிகையே
மாலையிட்ட மன்னனுக்கு
மல்லிகை கிடைக்க
மனம் வைத்த அன்பிக்கு
மனம் நிறைந்த வாழ்த்துக்கள். பாராட்டுகள்....

sathish777 said...

மல்லிகைப்பூ மணக்குதய்யா

சசிகுமார் said...

அருமை