Followers

Wednesday, March 23, 2011

ஜெயித்த வீரன் - 2 - வியத்னாம்

வணக்கம் நண்பர்களே.........ஹோசிமின் எனும் வீரரின் வரலாற்றை பார்த்து கொண்டு வருகிறோம்................

முதல் பாகம் இங்கு செல்லவும் - http://vikkiulagam.blogspot.com/2011/03/1_21.html 


30 வயதில் அவருக்கு திருமணத்திற்க்காக பல பெண்கள் பார்க்கப்பட்டனர்.......ஆனால், தனக்கு என்று ஒரு குடும்பம் தேவையில்லை என்று அவர் முடிவு செய்து இருந்தார்............அதனால் தொடர்ந்து வந்த பல பெண்களையும் வேண்டாம் என்று கூறிவிட்டார்..............அவரு நம்ம ஊரு ஆட்சியாளர்களின் பிள்ளைகள் போல் இருந்திருந்தால் வரலாறே மாறி இருக்கும்.................

ஹோசிமின் தன்நாட்டு விடுதலை அறவழியிலா, ஆயுத வழியிலா என்ற நீண்ட யோசனைக்குப்பின்....................ஆயுத வழியை தேர்ந்தெடுத்தார்.....................மக்களின் உரிமையை மீட்டுத்தர கெரில்லா போர் முறையை உருவாக்கினார்..............மிகப்பெரிய பேரரசை எதிர்க்க தன் மக்களுக்கு வலிமையான வழி வேண்டும் என்பதால் இதனை தேர்ந்தெடுத்தார்.................


மறைந்து இருந்து தாக்கும் இப்போர் முறையால் எதிரிகள் குலை நடுங்கிப்போயினர்.....முதல் முறையாக பிரான்ஸ் படை வியத்னாமியர்களால் தாக்கப்பட்டு பெரும் சேததிற்க்கு உள்ளாகியது..............ஆனால் இந்த அடியை பிரான்சால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை..........தங்களுக்கு ஏற்ப்பட்ட மிகப்பெரிய அவமானமாக கருதியது...............அதே சமயம் இந்த நிகழ்ச்சி வியத்நாமிய மக்களிடம் மிகப்பெரிய ஒற்றுமையையும், எழுச்சியையும் ஏற்ப்படுத்தியது...................

இந்த தாக்குதலுக்கு பிறகு ஹோசிமின் வியத்நாமை தனி நாடாக அறிவித்தார்............விடுமா பிரான்ஸ்.............பொங்கி எழுந்தது பெரும் படையோடு.......அடிபட்ட பேரரசு உண்மை நிலையை எடை போட மறந்தது..............அது என்ன வெனில்...........வியத்னாமியர்களை அப்பாவி மக்கள் என்று தப்பு கணக்கு போட்டதுதான்................


1946 பிரான்ஸ்க்கும் ஹோசிமின் படைக்கும் போர் நிகழ்ந்தது..............இப்போரின் பெயர் இந்தோ - சீனா போர்..........ஒரு தலைவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம் ஹோசிமின்................விவசாயமும், மீன்பிடி தொழில் மட்டுமே தெரிந்த..........நாகரிகத்தில் பின்தங்கிய எளிமையான மக்களை கெரில்லாக்களாக மாற்றிய மூளை அவர்.................


1949 வரை மிதமான கெரில்லா தாக்குதல்கள் மட்டுமே நிகழ்ந்தவன்னமிருந்தன..........அந்த நேரத்தில் கம்மியுனிச துருப்புகள் இம்மக்களுடன் இணைய ஆரம்பித்ததால்.............பலமான போராக இது ஆனது..........மின்னுக்கு பின் புலமாக கம்மியுனிச அண்ணனும் உதவினார் .................அதே நேரத்தில் பெரியண்ணன் எதிர் தரப்புக்கு உதவியது.....................இப்போரின் தாக்கம் 1954 ல் ஜெனீவா ஒப்பந்தம் மூலமாக முடிவுக்கு வந்தது.................அதில் இரு பெரும் நாடாக பிரிந்தது வியத்னாம்................

தொடரும்.......................

கொசுறு: வரலாற்றில் இம்மாதிரி எளிமையான மனிதரை என் நாட்டில் காண்பேனோ என் வாழ்நாளில்...........நீங்கள் பார்க்கும் படங்கள் 1. அவர் வாழ்ந்த வீடு இப்போது நினைவாலயமாக....3. இந்த மரவீட்டில் வாழ்ந்த அந்த மனிதரின் இதயம் வைரத்தைப்போன்றது.............
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

16 comments:

# கவிதை வீதி # சௌந்தர் said...

முதல் மழை...

# கவிதை வீதி # சௌந்தர் said...

தமிழ் மணத்தில் இணைத்து விட்டேன...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

என்ன மாப்ள.. இவ்ளோ சீக்கிரத்தில் ரெண்டாவது ஷோ?

தமிழ்வாசி - Prakash said...

கட்டுரை நல்லா போய்கிட்டு இருக்கு....தொடர்ந்து கலக்குங்க...


எனது வலைபூவில் இன்று: தனபாலு...கோபாலு.... அரட்டை மூணு!

கக்கு - மாணிக்கம் said...

தொடருங்கள். தமிழர்கள் நாம் இவைகளை தெரிந்து கொள்ளவேண்டும்.நன்றி.

சி.பி.செந்தில்குமார் said...

தக்காளி.. திருந்தீட்டியா/

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
தக்காளி.. திருந்தீட்டியா///

நடக்குற காரியமாய்யா அது....

MANO நாஞ்சில் மனோ said...

//கொசுறு: வரலாற்றில் இம்மாதிரி எளிமையான மனிதரை என் நாட்டில் காண்பேனோ என் வாழ்நாளில்...........நீங்கள் பார்க்கும் படங்கள் 1. அவர் வாழ்ந்த வீடு இப்போது நினைவாலயமாக....3. இந்த மரவீட்டில் வாழ்ந்த அந்த மனிதரின் இதயம் வைரத்தைப்போன்றது//

தமிழினத்தின் ஒரே தானை தலைவன் [நாசமா போவ] கலைஞர், அவர் குடும்பம் வாழ்க...

தமிழ் 007 said...

தூள் கிளப்புங்க....

விக்கியுலகம் said...

"# கவிதை வீதி # சௌந்தர் said...
தமிழ் மணத்தில் இணைத்து விட்டேன.."

>>>>>>>>>>>>>

வந்ததுக்கும் தமிழ்மணத்துல இனச்சதுக்கும் நன்றி மாப்ள

விக்கியுலகம் said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

"என்ன மாப்ள.. இவ்ளோ சீக்கிரத்தில் ரெண்டாவது ஷோ?"

>>>>>>>>>>>

வாங்க மாப்ள இன்னிக்கி மொல்லாளிகூட ஒரே சண்ட அதான் ஹிஹி!

விக்கியுலகம் said...

@கக்கு - மாணிக்கம்

வருகைக்கு நன்றி தலைவரே

விக்கியுலகம் said...

@தமிழ்வாசி - Prakash

வருகைக்கு நன்றி நண்பா

வாழ்த்துக்கும் நன்றி

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

"தக்காளி.. திருந்தீட்டியா/"

>>>>>>>>>>>

மாப்ள யாரப்பாத்து இப்படி ஒரு கேள்வி கேட்ட

- இதுக்கு நீ என்ன திட்டியே இருக்கலாம் ஹிஹி!

விக்கியுலகம் said...

@தமிழ் 007

நன்றி மாப்ள

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

"தமிழினத்தின் ஒரே தானை தலைவன் [நாசமா போவ] கலைஞர், அவர் குடும்பம் வாழ்க..."

>>>>>>>>>>>>>>>

ஏம்மக்கா இப்படி யாரையோ திட்டுறீங்க போல ஹிஹி!
அவருக்கு காது கேட்டு ரொம்ப வருசமாச்சி!
.........................

//சி.பி.செந்தில்குமார் said...
தக்காளி.. திருந்தீட்டியா///

நடக்குற காரியமாய்யா அது....

>>>>>>>>>>>>>>>

அதானே பாருங்க மாம்ஸ் he he!