Followers

Tuesday, March 29, 2011

ஈமச்சடங்கு - பாவமன்னிப்பு உண்டா(!?)


என்னுடைய அடிவருடிகள் என்னை சாணக்கியன் என்பார்!?


நன்றி கெட்ட என்னை மன்னியுங்கள். உங்கள் கால்களுக்கு செருப்பாய் பிறந்தாலும் எனக்கு கிடைத்த பழி போகாது. என் சுயநலத்துக்காக உங்களை கொன்றேன். உங்கள் நல் ஆவி என்னை விடாது என்று தெரிந்தும் என் வயது என்னை இந்த கொடுமையான செயலை செய்ய வைத்தது.நான் இன்று நான் அல்ல என்று சொன்னாலும் என்னை யாரும் மதியார். எனக்கு முன் இருந்த என் நண்பன் உங்களுக்கு செய்த காரியங்களை எண்ணி மனம் வெதும்பி இருக்கும்போது, எப்படியேனும் நான் உங்களுக்கு தலைவனாக காட்டிகொள்ள முயற்சித்தேன். பதவி எனும் மகுடத்தை எத்தனை முறை என் தலை மேல் வைத்து அழகுபார்தீர்கள். நான் அதற்க்கு தகுதியானவனாக நடந்து கொண்டேனா என்று காலம் போனபின் இன்று நினைத்து பார்க்கிறேன்.

என்(பலரை முட்டாளாக்கி என் மூளைபலம் கொண்டு வாங்கிய) பதவி எனும் போதை தலைகேறிவிட்டது. மன்னியுங்கள் என்று கேட்டாலும் மன்னிக்கும் மனப்பான்மை கொண்ட நல்லோரே. நான் வரும் போது எனக்கு விருந்தோம்பல் முறையில் "வாருங்கள்" என்று கூறி  உடகாரவைத்து பேசும் பண்பு உங்களிடம் இருக்கும் என்று எனக்கு தெரியும். ஆனாலும் என் செய்வேன் நான் அறிவு கெட்டு ஒன்று பெற்காமல் ஊருக்கு நாலு பெற்றதால் என் தலை இன்று பல இடங்களில் உருண்டு கொண்டே இருக்கிறது.


மற்றும் நான் ஊழ்வினை உருத்து வந்து வூட்டும் என்பதை அறிந்து வைத்து இருப்பதால் எனக்கு சிறிது பயமாக உள்ளது. என் மக்களே நீங்கள் என்னை மன்னிப்பீராக. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் இது என் அடுத்த பிறவிக்கு அடிக்கோளியுள்ளது.

மக்களே நான் என்னால் முயன்ற்றதைசெய்தேன் என்று சொல்லி உங்களை இப்போது ஏமாற்ற விரும்பவில்லை. அப்படிசொல்லித்தான் உங்களை ஏமாற்றினேன் என்பதை என் மனசாட்சி எனக்கு அடிக்கடி கூறிக்கொண்டு இருக்கிறது. நான் செய்த பாவங்கள் அடுத்த பிறவியில் அனுபவிக்க முயன்று தோற்று இப்பிறவியிலேயே என் மூலமாக வந்தவர்களாலே அனுபவித்துக்கொண்டு இருக்கிறேன். என் தமிழினமே என்னை மன்னிக்காதே.


என் பால் கொண்ட அன்பால், நான் ஏதாவது முயற்சி செய்து உங்களை காப்பாற்றுவேன் என்று இருந்து மாண்ட என் அன்புக்கினியோரே. அன்று நான் உங்கள் அவஸ்தை தெரியாமல் என்(பெற்ற)மக்களுக்காக மத்தியில் போராடிக்கொண்டு இருந்ததால் எனக்கு
உங்கள் நினைவு வராமல் போனது. மன்னியுங்கள் என்று என் மனம் சாதாரணமாக கூறினாலும் என் உடல் அந்த விஷயத்தால் ஏற்பட்ட கலக்கத்தால் துவண்டு போனது.

மன்னிக்காதீர் என்னை மறந்து விடுங்கள்...............

கொசுறு: ஓர் மனசாட்சியின் குரல்
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

30 comments:

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ் இனத்தலைவரை தாக்குவது நண்பனே என்றாலும் விடேன்.. ஹி ஹி

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

யாரப்பா அவரு ஹிஹி!

# கவிதை வீதி # சௌந்தர் said...

ஒரு நாளைக்கு எத்தனை...

அஞ்சா சிங்கம் said...

இது மட்டும் நடக்காது மனம் இருக்கிறவங்களுக்கு தான் மனசாட்சி இருக்கும்

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நாங்களும் வந்துட்டோமில்ல...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

அருமையான பதிவு மாப்ள...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

10
10
10
10
10
10
10
10
10
10

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

அப்புரமா வரேன்..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

பதிலையேக் கானோம்..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நேத்து என்னோட மெயில் பாத்தியா ராசா?

ஜீ... said...

சும்மா போங்க பாஸ்! கற்பனைக்கு ஒரு அளவே இல்லையா? அவரு இப்பிடியெல்லாம் யோசிச்சா...நடக்குற காரியமா?

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
தமிழ் இனத்தலைவரை தாக்குவது நண்பனே என்றாலும் விடேன்.. ஹி ஹி//

நானும் இதை வழி[லி] மொழியுறேன் கொய்யால....

sathish777 said...

என்(பலரை முட்டாளாக்கி என் மூளைபலம் கொண்டு வாங்கிய) பதவி எனும் போதை தலைகேறிவிட்டது//
sUppar

நிரூபன் said...

நான் இன்று நான் அல்ல என்று சொன்னாலும் என்னை யாரும் மதியார். எனக்கு முன் இருந்த என் நண்பன் உங்களுக்கு செய்த காரியங்களை எண்ணி மனம் வெதும்பி இருக்கும்போது, எப்படியேனும் நான் உங்களுக்கு தலைவனாக காட்டிகொள்ள முயற்சித்தேன். பதவி எனும் மகுடத்தை எத்தனை முறை என் தலை மேல் வைத்து அழகுபார்தீர்கள். நான் அதற்க்கு தகுதியானவனாக நடந்து கொண்டேனா என்று காலம் போனபின் இன்று நினைத்து பார்க்கிறேன்.//

இப்படியொரு வார்த்தையினை ஐயா உதிர்த்தால் பூமி திசை மாறிச் சுற்றும் என நினைக்கிறேன்.

நிரூபன் said...

வணக்கம் சகோ, தத்துவங்களை முத்துக்களாக உதிர்த்திருக்கிறீர்கள்.


நன்றி கெட்ட என்னை மன்னியுங்கள். உங்கள் கால்களுக்கு செருப்பாய் பிறந்தாலும் எனக்கு கிடைத்த பழி போகாது. என் சுயநலத்துக்காக உங்களை கொன்றேன். உங்கள் நல் ஆவி என்னை விடாது என்று தெரிந்தும் என் வயது என்னை இந்த கொடுமையான செயலை செய்ய வைத்தது.//

இது நம்ம ஐயா இலங்கை மக்களுக்குச் சொல்வது போல இருக்கே.

நிரூபன் said...

"வாருங்கள்" என்று கூறி உடகாரவைத்து பேசும் பண்பு உங்களிடம் இருக்கும் என்று எனக்கு தெரியும். ஆனாலும் என் செய்வேன் நான் அறிவு கெட்டு ஒன்று பெற்காமல் ஊருக்கு நாலு பெற்றதால் என் தலை இன்று பல இடங்களில் உருண்டு கொண்டே இருக்கிறது.//

என்ன தலையா இல்லை 2G விவகாரமா?
இல்லை குடும்ப அரசியலா. இது இரு பொருள் தரும் தத்துவம். பதிவின் சொந்தக்காரர் தான் இதனை விளக்க வேண்டும்.

நிரூபன் said...

மற்றும் நான் ஊழ்வினை உருத்து வந்து வூட்டும் என்பதை அறிந்து வைத்து இருப்பதால் எனக்கு சிறிது பயமாக உள்ளது. என் மக்களே நீங்கள் என்னை மன்னிப்பீராக. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் இது என் அடுத்த பிறவிக்கு அடிக்கோளியுள்ளது.//

மக்கள் மன்னிப்பதால் தான் மன்னர் இன்றும் வாழ்கிறாரோ!

நிரூபன் said...

மற்றும் நான் ஊழ்வினை உருத்து வந்து வூட்டும் என்பதை அறிந்து வைத்து இருப்பதால் எனக்கு சிறிது பயமாக உள்ளது. என் மக்களே நீங்கள் என்னை மன்னிப்பீராக. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் இது என் அடுத்த பிறவிக்கு அடிக்கோளியுள்ளது.//

மக்கள் மன்னிப்பதால் தான் மன்னர் இன்றும் வாழ்கிறாரோ!

நிரூபன் said...

உங்கள் நினைவு வராமல் போனது. மன்னியுங்கள் என்று என் மனம் சாதாரணமாக கூறினாலும் என் உடல் அந்த விஷயத்தால் ஏற்பட்ட கலக்கத்தால் துவண்டு போனது.

மன்னிக்காதீர் என்னை மறந்து விடுங்கள்...............

கொசுறு: ஓர் மனசாட்சியின் குரல்//

இது மானமுள்ள மக்களின் குரல்.
உங்களின் பதிவு எங்கள் சமூகத்தில் தமிழகத்தின் எதிர்காலத்தை நிஜமாகவே நேசிக்கும், ஒவ்வோர் உள்ளங்களிலும் புதைந்துள்ள உண்மைகளின் வெளிப்பாடாய் ஒலித்து நிற்கிறது.

செங்கோவி said...

தமிழினத் தலைவர் கதையா..இப்படி எல்லாம் யோசிக்க அவருக்கு நேரம் இருக்கா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் எங்க தலைவரு அடுத்த படத்துல இந்த சீனை வெச்சிடப் போறாருய்யா....!

விக்கியுலகம் said...

@அஞ்சா சிங்கம்

வாஸ்தவம் தான் மாப்ள!

நிலாமகள் said...

மறப்போம் மன்னிப்போம் என்ற அசாத்தியத் துணிவோ....?!

விக்கியுலகம் said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

"நேத்து என்னோட மெயில் பாத்தியா ராசா?"

>>>>>>>>>>>

மாப்ள உங்க மெயிலு கெடச்சது நேரம் இருக்கும் போது gtalk வாங்க என்னோட id vbvvvmv@gmail.com நன்றி

வேலை கொஞ்சம் அதிகம் மன்னியும் ஹிஹி!

விக்கியுலகம் said...

@ஆர்.கே.சதீஷ்குமார்

வருகைக்கு நன்றி தலைவரே

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

"நானும் இதை வழி[லி] மொழியுறேன் கொய்யால...."

>>>>>>>>>>

மாம்ஸ் நீயுமா சரிங்கய்யா ஹிஹி!

விக்கியுலகம் said...

@செங்கோவி

வருகைக்கு நன்றி மாப்ள............இந்தப்பதிவு நம்ம மக்கள் நடநதவைகள மறந்துடக்கூடாது என்பதர்க்கானதே.........

விக்கியுலகம் said...

@நிரூபன்

வருகைக்கு நன்றி மாப்ள....உங்க மேலான கருத்துக்களுக்கு நன்றி...........இந்தப்பதிவு நம்ம மக்கள் நடநதவைகள மறந்துடக்கூடாது என்பதர்க்கானதே.........

விக்கியுலகம் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி
"யோவ் எங்க தலைவரு அடுத்த படத்துல இந்த சீனை வெச்சிடப் போறாருய்யா....!"

>>>>>>>>>>>

வருகைக்கு நன்றி மாப்ள.........நடந்த சீன்கள மறக்கக்கூடாது என்பதே என் கருத்து!

விக்கியுலகம் said...

@நிலாமகள்

"மறப்போம் மன்னிப்போம் என்ற அசாத்தியத் துணிவோ....?!"

>>>>>>>>>>>>

வருகைக்கு நன்றி சகோ!

இந்தப்பதிவு நம்ம மக்கள் நடநதவைகள மறந்துடக்கூடாது என்பதர்க்கானதே........