Followers

Sunday, March 6, 2011

நாம் மடையர்களா(!?)

வணக்கம் என் அன்பார்ந்த நண்பர்களே.............உங்களை போல நானும் எதிர் பார்த்துக்கொண்டு இருக்கிறேன் தேர்தல் எனும் விலைவாசி உயர்வை!


தமிழ்நாட்டில் ஒரு சாதாரண விவசாயி முதல் பெரிய பெரிய அப்பாடக்கர் வேலை செய்யும் முதலாளிவரை இந்த தேர்தலை எதிர் பார்க்கின்றனர். காரணம் இது ஒரு வித வியாதி போல் ஆகி விட்டது............என்னமோ மஞ்ச துண்டு தோத்தா எல்லோர் வீட்டுக்கும் பச்சை சேலயம்மா வாழ்வாதாரம் கொடுக்கப்போவது போல எண்ணங்கள் நம்மூடே சென்று கொண்டு இருக்கின்றன..............


நேற்று ஒரு மனிதனை(மகான்!) சந்தித்தேன்..............அவர் ஒரு வியத்நாமிய விவசாயி. அவரிடம் எப்போதும் போல் அப்புறம் உங்க நாட்டுல அரசியல் எல்லாம் எப்படி இருக்குன்னு கேட்டேன்..............அதற்க்கு அவர் அது என்னோட வேல இல்ல தம்பி...........என்னோட வேல என் நிலத்துல நல்ல அறுவடை செய்வது மட்டுமே......................

நீங்க இங்க இருக்க எந்த சாதாரண மக்கள் கிட்ட கேட்டாலும் இதத்தான் சொல்லுவாங்க...............அவங்க அவங்க வேலைய்ப்பாக்கறது தான் இங்க நடக்குது...........எப்படி முன்னேறுவது என்ற சிந்தனை மட்டுமே எம் மக்களுக்கு தோன்றும் இயல்பான விஷயம். இங்கும் 5 வருடத்துக்கு ஒரு முறை தேர்தல் வரும் நாங்களும் சென்று எங்கள் அபிப்ப்ராயத்தை பதிவு செய்வோம். அதன் பிறகு எங்கள் வேலை உண்டு நாங்கள் உண்டு என்று சென்று விடுவோம் என்றார்.

ச்சே என்ன மக்கள் இவங்க..........இதுவே என்னை போன்றவர்கள் சாதாரணமா பேசும்போதே அடுத்து அவரு வருவாரா இல்ல இவரு வருவாரா என்று என்னுகிரோமே......இப்பதான் புரியுது இவங்க எப்படி சந்தோஷமா வாழராங்கன்னு! 


இங்கு வாழும் மக்கள் அரசியல் பேசுவதில்லை ..........நான் கொஞ்ச நாட்களுக்கு முன் என் உதவியாளரிடம்.........என்ன இப்படி திடீர்ன்னு பெட்ரோல் விலை கனிசமா உயர்த்திட்டாங்களே என்றேன்............அதற்க்கு அவள் ஆமாம் சார்...........ஆனா சீகிரதுல எதாவது வரிகள தளர்த்தி இறக்கிடுவாங்க என்றாள்..........என்ன ஒரு நம்பிக்கை இவர்களுக்கு.............அப்படியே நடந்தது......

அரசியல் எனும் மாங்கொட்டையை....****..........நல்லவர்கள் நம் நாட்டில்!......................இங்கோ அது எமக்கு தேவை இல்லை............எமக்கு எது நன்மை என்று அரசாங்கத்துக்கு தெரியும் எனும் மக்கள் இங்கே.............நாம் மாற வேண்டுமா! அன்றி நம்மை வழி நடத்தும் நல்லவர்கள்(!) மாற வேண்டுமா என்பதை காலம் தான் சொல்லவேண்டும்.

கொசுறு: பல அறிவாளிகளின் நடுவே நான் மட்டும் முட்டாளாகவே.......... 
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

29 comments:

sathish777 said...

இப்பதான் புரியுது இவங்க எப்படி சந்தோஷமா வாழராங்கன்னு!//
அருமையான பகிர்வு

sathish777 said...

இணைச்சாச்சு

சி.பி.செந்தில்குமார் said...

>>>.........அதற்க்கு அவர் அது என்னோட வேல இல்ல தம்பி...........என்னோட வேல என் நிலத்துல நல்ல அறுவடை செய்வது மட்டுமே......................

பளார் பளார் ( அறை உங்களுக்கு மட்டுமல்ல. நம்ம எல்லாருக்கும் தான்.)

சி.பி.செந்தில்குமார் said...

>>>அவங்க அவங்க வேலைய்ப்பாக்கறது தான் இங்க நடக்குது...........எப்படி முன்னேறுவது என்ற சிந்தனை மட்டுமே எம் மக்களுக்கு

அழகு...


யோவ் விக்கி.. உருப்படியான பதிவுய்யா

விக்கியுலகம் said...

@ஆர்.கே.சதீஷ்குமார்

நன்றி தலைவரே

♔ம.தி.சுதா♔ said...

////என்னமோ மஞ்ச துண்டு தோத்தா எல்லோர் வீட்டுக்கும் பச்சை சேலயம்மா வாழ்வாதாரம் கொடுக்கப்போவது போல எண்ணங்கள் நம்மூடே சென்று கொண்டு இருக்கின்றன...////

சகோதரம் சாக்கடைக்குள்ள இறங்கி நின்று தவளைக் குஞ்சை பிடிச்சாலென்ன. மீன் குஞ்சைப் பிடிச்சாலென்ன ரெண்டுமே கறிக்குதவாது...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவுலகத்திலிருந்து பாமரர்களுக்கு உதவ வாருங்கள்.

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

நன்றி தலைவரே

விக்கியுலகம் said...

@♔ம.தி.சுதா♔

வருகைக்கு நன்றி நண்பா

# கவிதை வீதி # சௌந்தர் said...

அரசியல் அறிவு அனைவருக்கும் இருக்க வேண்டும் நண்பா..

ஆனால் நம்நாட்டில் தான் அதை வேலையாக கொணடவரல்லாம் உண்டு..

உழைப்புக்கு முக்கியத்துவம் தராத யாரும் தழைத்ததாக சரித்திரம் இல்லை..

MANO நாஞ்சில் மனோ said...

என்ன வோய் இன்னைக்கு ஜொள்ளு படம் ஒன்னும் கிடைக்கலையா....
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

MANO நாஞ்சில் மனோ said...

//என்னமோ மஞ்ச துண்டு தோத்தா எல்லோர் வீட்டுக்கும் பச்சை சேலயம்மா வாழ்வாதாரம் கொடுக்கப்போவது போல எண்ணங்கள் நம்மூடே சென்று கொண்டு இருக்கின்றன..............//

அதானே......
என்ன அநியாயம்டா இது...

தமிழ் 007 said...

//நாம் மடையர்களா(!?)//

இதில் என்ன சந்தேகம் நண்பரே!

எவன் எவன் கூட சேர்ந்தாலும், என்ன தில்லு முல்லு பண்ணினாலும் நாம் ஓட்டுப்போடாம இருக்கப்போகிறோமா?

மாணவன் said...

செம்மயா எழுதியிருக்கீங்க பாஸ்... :)

வைகை said...

நாமதான் வேலைய தவிர எல்லாம் செயுரமே?

விக்கியுலகம் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...
அரசியல் அறிவு அனைவருக்கும் இருக்க வேண்டும் நண்பா..

ஆனால் நம்நாட்டில் தான் அதை வேலையாக கொணடவரல்லாம் உண்டு..

உழைப்புக்கு முக்கியத்துவம் தராத யாரும் தழைத்ததாக சரித்திரம் இல்லை..
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

நீங்க சொல்றத ஏத்துக்கறேன் நண்பா!

இங்கே மக்கள் தலைவர்களை நம்புறாங்க.............அதே தலைவர்களும் அதுக்கேத்தா மாதிரி நடந்துக்கறாங்க!

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ
"என்ன வோய் இன்னைக்கு ஜொள்ளு படம் ஒன்னும் கிடைக்கலையா....
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..."

>>>>>>>>>>>

சீரியஸா பதிவு போட்டா தக்காளி வர்றவங்க எல்லாம் பிகரு கேட்டு ஜொள்ளு விட இது என்ன சிபி தளமா ஹி ஹி!

விக்கியுலகம் said...

@மாணவன்

நன்றி நண்பா

விக்கியுலகம் said...

@தமிழ் 007
"எவன் எவன் கூட சேர்ந்தாலும், என்ன தில்லு முல்லு பண்ணினாலும் நாம் ஓட்டுப்போடாம இருக்கப்போகிறோமா?"

>>>>>>>>>>>>>>>>>

ஓட்டுபோடனும் ஆனா யாருக்கு என்பது அவரவர் விருப்பமுங்க.............

விக்கியுலகம் said...

@வைகை

"நாமதான் வேலைய தவிர எல்லாம் செயுரமே?"

>>>>>>>>

அதே அதே

அஞ்சா சிங்கம் said...

.எப்படி முன்னேறுவது என்ற சிந்தனை மட்டுமே .............../////////////அவங்களுக்கு இலவசம் குடுத்து இன்னும் யாரும் அவங்க மனச கெடுக்கலைன்னு தெரியுது

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

அருமையான விழிப்புணர்வு கட்டுரை நண்பா..

டக்கால்டி said...

யோவ் விக்கி.. உருப்படியான பதிவுய்யா

March 6, 2011 9:35 PM//

வழிமொழிகிறேன்

டக்கால்டி said...

கொஞ்ச நாட்களுக்கு முன் என் உதவியாளரிடம்...//

ஆனா சீகிரதுல எதாவது வரிகள தளர்த்தி இறக்கிடுவாங்க என்றாள்....//

புரிஞ்சு போச்சு, எனக்கு புரிஞ்சு போச்சு...
என்றாள் ள் ள் ள்...நாட் பண்ணிட்டேன்
சாரி நோட் பண்ணிட்டேன்

விக்கியுலகம் said...

@வேடந்தாங்கல் - கருன்

நன்றி நண்பா

விக்கியுலகம் said...

@அஞ்சா சிங்கம்

அதே அதே

விக்கியுலகம் said...

@டக்கால்டி

நன்றி நண்பா

விக்கியுலகம் said...

@டக்கால்டி

"புரிஞ்சு போச்சு, எனக்கு புரிஞ்சு போச்சு...
என்றாள் ள் ள் ள்...நாட் பண்ணிட்டேன்
சாரி நோட் பண்ணிட்டேன்"

>>>>>>>>>>>

தக்காளி என்னா புரிஞ்சி போச்சி ஹி ஹி!

Speed Master said...

அருமையான மக்கள்
நல்ல நாடு

விக்கியுலகம் said...

@Speed Master

வருகைக்கு நன்றி நண்பா!