Followers

Sunday, March 27, 2011

போட்டி வாங்கலையோ குடல் போட்டி(!) - இப்படிக்கு ரவுடி(!)

எனது தமிழ் மற்றும் அனைத்து விதமான மொழி பேசும் கண்மணிகளுக்கு என் தமிழ் வணக்கம்...............மத்த மொழில எங்க தலீவர்கள திட்டும் கோடான கோடி ஆயிட்டங்காரங்களுக்கும் வணக்கம்.................


மச்சி மன்னாரு உன் மனசுக்குள்ள பேஜாரு ட்டச்சி பண்ணாரு மெர்சலாயி போனாரு...............

என்னபா யார பாக்க வந்து கீற..............

நிருபர்: அண்ணாத்தைய தாங்க.................

ரவுடி: என்னா செல்லம் எப்டி கீற...............

நிருபர்: ங்கனா தேர்தலு வருது அதான் உங்க பேட்டி போடாலமுனு.............

ரவுடி: எது போட்டி எடுக்கப்போறியா...........டேய் *&^%$#@!

நிருபர்: இல்லைங்கண்ணா உங்க கருத்துகள கவ்விட்டு போலாம்னு வந்து இருக்கேன்..........

ரவுடி: சரி மாமு கேளு...............

நிருபர்: ஆம்மன்னே இந்த முறை யாருக்காக வேல செய்யப்போறீங்க.............


ரவுடி: அத ஏன் கேக்குற.............முன்னெல்லாம் எங்கள பாத்த உச்சா போற பசங்கல்லாம் இப்போ ரிச்சா போறானுங்க...........பய புள்ளைங்களுக்கு பயம் போயிருச்சி.............இப்போ ரொம்ப உசாராயிட்டாங்க............நேரா போயி நிக்கற சோமாறி கிட்டயே கட்டிங் பேசிடரானுங்க...............ஒரே மெர்சலா கீது பா............

நிருபர்: சரி தல அப்போ என்னதான் பன்றதா இருக்கீங்க...............

ரவுடி: நம்ம பய புள்ளிங்கள கூட்டிகினு போயி மம்மி கட்சில சேர்ந்துடலாம்னு கீறேன்..........ஏன்னா அங்க தான் என்ன மாதிரி நெறைய பேரு சேர்ந்து கீறாங்க.............

நிருபர்: ரொம்ப மனசு கஷ்டப்பட்டு பேசராப்புல தெரியுது..............


ரவுடி: பின்ன என்னாய்யா அந்த மவராசி ஜெயுக்குதோ இல்லையோ எப்படியும் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரந்தான் சீரியசா வேல பாக்கும் ஆனா மஞ்ச மன்சன் கிட்ட போனா ஒரு பெரிய கூட்டமே இருக்குய்யா............அந்த கூட்டத்துல நாம எங்க போயி போட்டோல நிக்கறது............அதுவும் அவரு தூங்குற நேரம் கூட முதல கணக்கா கண்ணா தொரந்துகினே தூங்குவாரு...........

நிருபர்: இப்போ போற போக்க பாத்தா அவரு தானே ஜெயிப்பாரு போல.............


ரவுடி: நம்ம மக்களை சொல்ல முடியாது.............துட்ட வாங்கி போட்டுகுனு எப்படியும் இவரு அடிச்சது போதும்...........அவங்க வந்து மீதிய அடிசிக்கட்டும்னு நெனப்பாங்க...........நம்ம தோஸ்துங்க நெறைய பேரு ஏற்க்கனவே சமஉ வா வேற இருக்காங்க................

நிருபர்: உங்களுக்கு எதாவது கொள்கை இருக்கா?

ரவுடி: எப்பவும் நான் போட்டி தான் சாப்பிடுவேன்............அது தான் சரக்கடிக்கும்போது உள்ள போய் என் போட்டிய காப்பாத்துது...............

நிருபர்: இல்லன்னே நீங்க என்னதான் பண்றதா இருக்கீங்க.............


ரவுடி: இந்த தொழிலு ரொம்ப போரடிச்சி போச்சி பா.............அதுனால நம்ம தோஸ்துங்க போல காலேஜி ஆரம்பிக்கலாம்னு கிறேன்..............

ஏன்னே உங்களுக்கு அந்த கஷ்டமான வேல.............

இன்னா அப்டி சொல்லிட்ட..........நாம தான் படிக்கல..............நாலுபேரு படிக்கறத பாத்தாவது குஷியாயிக்கலாம்னு தான்.................

ஆக மொத்தம் இந்த தேர்தல்ல நீங்க இறங்கல அதானே..............

அப்படி சொல்ல முடியாது ஏன்னா..............எப்போ என்னா நடக்கும்னு தெரியல ஹிஹி!

கொசுறு: இந்த மனிதர் உங்களுக்குள்ளும் உலவலாம் ஜாக்கிரதை............யாருப்பா அது ஆர்ட் பிலிம் கணக்கா பதிவு போட முடியாதுன்னு சொன்னது................!!!!!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

14 comments:

சி.பி.செந்தில்குமார் said...

தக்காளி திடீர்னு திருந்தீட்டியா? ஒரு கில்மா ஃபோட்டோவையும் காணோம்?

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

நீர் என் கருத்துக்களை கவ்வாமல் கில்மா படங்களைத்தேடி வருவதை கனிவுடன் கண்டிக்கிறேன்......பயபுள்ள கொசுறு படிச்சியா இல்லையா ஹிஹி!

டக்கால்டி said...

நடக்கட்டும்...

தமிழ் 007 said...

ரைட்டு....

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

மாப்ள என்ன தலைப்பு அது...

ரஹீம் கஸாலி said...

யோவ்.....உன்னை.....நற....நற....(குமுதம் வாசகர் கடிதம் பாணியில ஒரு பின்னூட்டம் )

MANO நாஞ்சில் மனோ said...

கொய்யால திருந்திட்டீராவேய் ஜொள்ளு போட்டோவை காணோம்....??

MANO நாஞ்சில் மனோ said...

//ரவுடி: எப்பவும் நான் போட்டி தான் சாப்பிடுவேன்............அது தான் சரக்கடிக்கும்போது உள்ள போய் என் போட்டிய காப்பாத்துது...............//

பாரு அண்ணாத்தேக்கு அனுபவம் என்னமா பேசுது....

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@விக்கி உலகம் said...

மாப்ள நீ எப்படியாப்பட்ட வைட்டான ஆளா இருந்தா இந்த மேட்டர வச்சே ஒரு பதிவ உசார் பண்ணி இருப்ப நடத்துய்யா ஹிஹி! / / /

வா மச்சி வா , உன்ன வம்பு இழுத்துதான் அடுத்த பதிவு , ரெடி அஹ இரு ஹி ஹி ஹி . . . கொய்ய ஒரு நாளைக்கு 3 பதிவ போடுற நீ ? இருக்கு உனக்கு கச்சேரி ...

செங்கோவி said...

தக்காளியைக் காணோமே..

விக்கியுலகம் said...

@டக்கால்டி

வருகைக்கு நன்றி மாப்ள!

விக்கியுலகம் said...

@ரஹீம் கஸாலி

வருகைக்கு நன்றி மாப்ள!

பதில் "திரு திரு" ஹிஹி!

விக்கியுலகம் said...

@தமிழ் 007

வருகைக்கு நன்றி மாப்ள!

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

வருகைக்கு நன்றி மாம்ஸ்!

"கொய்யால திருந்திட்டீராவேய் ஜொள்ளு போட்டோவை காணோம்....??"

>>>>>>>>>>>>>

அப்படின்னா என்னா மக்கா
...........................