Followers

Thursday, March 31, 2011

அய்யய்யோ அப்புறம்...........!

வணக்கம் நண்பர்களே.............ஆயிரம் ஆயிரம் ஆசைகளை தாங்கிய வீடு இது...........அந்த ஆண்டவன் வாழத்துடிக்கும் குடும்பம் எனும் கோயிலிது................

கொஞ்சம் இந்த அரசியல் பரக்காவேட்டிகளை மறந்து என்னோட சிறு வயது காலத்திற்கு பின்னோக்கி போகிறேன்(நீங்களும் கொசுவத்திய எடுத்துக்கங்க ஹிஹி!)....................பள்ளி படித்த காலங்கள் இன்றும் மறக்க முடியாத பாதிப்புகள நம் மனதில் ஏற்ப்படுத்தியிருக்கும் என்று நம்புகிறேன்...............


அந்த நேரங்களில்......என் அப்பா அம்மா திடீர் திடீர்ன்னு எதாவது வாங்கி வா என்றோ அல்லது போய் விளையாடு என்றோ கூறுவார்கள்.............ஏனென்று தெரியாமல் சென்று இருக்கிறேன்..............பொதுவா என்தந்தைக்கு விளையாட்டு பிடிக்காது என்றே சொல்லலாம்(இன்னிக்கு விழுந்து விழுந்து மேட்சு பாக்குறாரு அதுவேற விஷயம் ஹிஹி!)...........அதனால் என்னை படி என்று நித்தம் நித்தம் சொல்லிட்டு இருப்பாரு(டார்ச்சர் என்று நினைத்திருக்கிறேன்!).............ஏன் நம்மள அடிக்கடி இப்படி திடீர்னு வெளிய அனுப்புறாங்கன்னு பார்க்க போனா...............வீட்டுல இருவருக்கும் கருத்து வேறுபாடு வந்து பெரிய சண்ட நடக்கும்...........அது எனக்கு வெகு நாட்களுக்கு தெரியாமலே இருந்தது...................


பெரியவர்களின் கருத்து வேறுபாடு நமக்கு தெரியக்கூடாதுன்னு நெனச்சித்தான் என்னை இப்படி வெளியில் அனுப்பி விடுகிறார்களா என்று எனக்கு புரிந்த போது அதிர்ச்சியாக இருந்தது................ஆனால் அதே நேரத்தில் பள்ளி தோழர்களில் பலர் என்னுடன் பேசிக்கொண்டு இருக்கும்போதே அழுவதை கண்டு இருக்கிறேன்.............ஏன் என்று கேட்டால் வீட்டுல அம்மாவுக்கும், அப்பாவுக்கும் சண்டை அதான் என்று அழுது கொண்டே கூறும்போது நானும் வருந்தி இருக்கிறேன்...................


இன்று என் மகன், என் மனைவியின் தந்தைக்கும் தாய்க்கும் சில மன சங்கடங்கள் வந்து சண்டையிடும்போது ...........ஏன் தாத்தா இவ்ளோ வயசாவது இப்ப போய் சண்ட போடுறியே.........எங்க அம்மாவையும் அப்பாவையும் பாத்து கத்துக்க..............அய்யோ அய்யோ உன்ன கொண்டு போய் ஸ்கூல சேர்க்கணும் போல என்று சொல்வதாக என் மனைவி கூறினாள்.............எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.........


குடும்பத்தில் கருத்து வேறுபாடு என்று வரும்போது குழந்தைகள் முன் சண்டையிடுவதை தவிருங்க.............இல்லன்னா நம்மைப்பற்றிய தவறான அபிப்ராயம் ஏற்ப்பட்டு அதுவே நம்மை விட்டு விலகிப்போக அதிக வாய்ப்பு கொடுக்கும் விஷயமாகிப்போகும்................

கொசுறு: தலைப்போட விளக்கம் என்னன்னா..........அடிக்கடி பள்ளில பேசிக்கும் போது சக மாணவர்கள் கேற்கும் விஷயம் ஹிஹி!.........எல்லா வித பதிவும் போடுற பழக்கம் வேணும் ஹிஹி (மனசாட்சி!!)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

34 comments:

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

vadai...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

குடும்பத்தில் கருத்து வேறுபாடு என்று வரும்போது குழந்தைகள் முன் சண்டையிடுவதை தவிருங்க ----மாப்ள உருப்படியா ஒன்னு சொல்லியிருக்க இன்னைக்கு...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நேத்து வீட்டுகாரம்மாக்கிட்ட சண்டையா?

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

பதிலையே கானோம்?

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

யோவ் பதிவை போட்டு எங்கய்யா போன?

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

காலையிலே இதுமாதிரி பதிவுன்னா யோசிக்க வேண்டியிருக்குள்ள..

சி.பி.செந்தில்குமார் said...

>>குடும்பத்தில் கருத்து வேறுபாடு என்று வரும்போது குழந்தைகள் முன் சண்டையிடுவதை தவிருங்க........

உனக்கும் உன் சம்சாரத்துக்கும் சண்டைன்னா எங்களை ஏன்யா உசுரை எடுக்கறே,,?

விக்கியுலகம் said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

மாப்ள இப்போத்தான் உன் கடைக்கு போயிட்டு வாரேன் ஹிஹி!

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

எல்லாம் உன்னைப்போல இருக்க முடியுமா ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

>>விக்கி உலகம் said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

மாப்ள இப்போத்தான் உன் கடைக்கு போயிட்டு வாரேன் ஹிஹி!

ஓஹோ 2 பேரும் எக்ஸேஞ்ச் பண்ணிக்கறீங்களாக்கும்..

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

எல்லாம் உன்னைப்போல இருக்க முடியுமா ஹிஹி!

நீ உண்மைலயே நல்லவனா இருந்தா உன் ஆஃபீஸ் ஸ்டெனோவை கருணுக்கு விட்டுக்கொடுய்யா பார்க்கலாம்..

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

அது என்ன என் பரம்பர சொம்பா நான் கொடுக்கறத்துக்கு ஹிஹி!

கே.ஆர்.பி.செந்தில் said...

//குடும்பத்தில் கருத்து வேறுபாடு என்று வரும்போது குழந்தைகள் முன் சண்டையிடுவதை தவிருங்க//

நானும் வரவேற்க்கிறேன்..

வைகை said...

குடும்பத்தில் கருத்து வேறுபாடு என்று வரும்போது குழந்தைகள் முன் சண்டையிடுவதை தவிருங்க///


அய்யய்யோ அப்புறம்...........!?

வைகை said...

இல்லன்னா நம்மைப்பற்றிய தவறான அபிப்ராயம் ஏற்ப்பட்டு அதுவே நம்மை விட்டு விலகிப்போக அதிக வாய்ப்பு கொடுக்கும் விஷயமாகிப்போகும்///

அதென்ன தவறான அபிப்ராயம்? குழந்தைகள் முன் சண்டை போட்டாவே நாம் தவறானவர்கள்தானே?

விக்கியுலகம் said...

@கே.ஆர்.பி.செந்தில்

கருத்துக்கு நன்றி தலைவரே

விக்கியுலகம் said...

@வைகை

மாப்ள சண்டைன்னு வந்தா நாம எப்போ இடம் பொருள் பாக்கறோம் அதேன் ஹிஹி!

MANO நாஞ்சில் மனோ said...

அய்யய்யோ அப்புறம்.....

MANO நாஞ்சில் மனோ said...

நானும் என் மகளை வெளியே போயி விளையாடுன்னு சொல்றது உண்டு. ஆனா கருத்து வேறுபாடு அல்ல அது சென்சார். என் மகள் ஒரு நாள் என்னோடு சண்டைக்கே வந்து விட்டாள். ஏன் நான் வெளியே போனதும் கதவை பூட்டுரீங்கன்னு ஹா ஹா ஹா ஹா....

நா.மணிவண்ணன் said...

அண்ணே இது கல்யாணம் ஆனவுங்களுக்கான மேட்டர்ல ஸ்கூல்

லைப் அப்படின்னு படிச்சவுடனே எண்ணையை மாதிரி யூத் மேட்டரா இருக்கும்னு வந்தேன்

சரி ஓகே கல்யாணம் ஆனதுகப்பறம் நீங்க சொன்ன மாதிரி இருக்கேன்

போளூர் தயாநிதி said...

//குடும்பத்தில் கருத்து வேறுபாடு என்று வரும்போது குழந்தைகள் முன் சண்டையிடுவதை தவிருங்க//

நானும் வரவேற்க்கிறேன்..

மாலதி said...

அதென்ன தவறான அபிப்ராயம்? குழந்தைகள் முன் சண்டை போட்டாவே நாம் தவறானவர்கள்தானே?

செங்கோவி said...

பரவாயில்லையே..விக்கி ஒரு நல்ல விஷயத்தையும் போட்ருக்காரே!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அய்யய்யோ ஆமாங்க, ஆமா..........

bandhu said...

அதாவது உங்கள் மனைவியிடம் சொல்ல நினைப்பதை பதிவாக போட்டிருக்கிறீர்கள்! அவருக்கு ஒரு லிங்க் அனுப்பிவிடுங்கள்!

JOTHIG ஜோதிஜி said...

குழந்தைகளின் மனதில் நஞ்சு உருவாவது பெறேறோர்களின் சண்டைகளில் இருந்து தான்.

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

"நானும் என் மகளை வெளியே போயி விளையாடுன்னு சொல்றது உண்டு. ஆனா கருத்து வேறுபாடு அல்ல அது சென்சார். என் மகள் ஒரு நாள் என்னோடு சண்டைக்கே வந்து விட்டாள். ஏன் நான் வெளியே போனதும் கதவை பூட்டுரீங்கன்னு ஹா ஹா ஹா ஹா.."

>>>>>>>>>>>

மக்கா இருந்தாலும் நீர் ரொம்ப நல்லவன்யா ஹிஹி!

விக்கியுலகம் said...

@போளூர் தயாநிதி

வருகைக்கு நன்றி நண்பா

விக்கியுலகம் said...

@நா.மணிவண்ணன்

மாப்ள நன்றிய்யா!

விக்கியுலகம் said...

@malathi in sinthanaikal

"அதென்ன தவறான அபிப்ராயம்? குழந்தைகள் முன் சண்டை போட்டாவே நாம் தவறானவர்கள்தானே?"

>>>>>>>>>>>>

வருகைக்கு நன்றி சகோ...சில நேரங்களில் நம்மையும் அறியாமல் நடக்கக்கூடாது என்பட்க்கே இந்த பதிவு

விக்கியுலகம் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

வருகைக்கு நன்றி மாப்ள

விக்கியுலகம் said...

@செங்கோவி

வருகைக்கு நன்றி மாப்ள

விக்கியுலகம் said...

@bandhu

"அதாவது உங்கள் மனைவியிடம் சொல்ல நினைப்பதை பதிவாக போட்டிருக்கிறீர்கள்! அவருக்கு ஒரு லிங்க் அனுப்பிவிடுங்கள்!'

>>>>>>>

வருகைக்கு நன்றி சகோ...அவங்க என்னோட பதிவ தொடர்ந்து பாத்துட்டு தான் இருக்காங்க ஹிஹி!

விக்கியுலகம் said...

@ஜோதிஜி

வருகைக்கு நன்றி நண்பா கருத்துகளுக்கும் நன்றி