Followers

Friday, March 18, 2011

சுனாமிக்கு மிஸ்ஸான நான்(!?)

வணக்கம் நண்பர்களே...........சமீபத்தில் ஏற்ப்பட்ட ஜப்பான் நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக பல உயிர்கள் பலியானதை நினைக்கும் பொழுது மனம் பதைபதைத்தது...............


இந்தியாவில் அதாவது 2004................அன்று கிறிஸ்மஸ் நாள்............அப்போது வேளாங்கண்ணிக்கு கிட்டத்தில் இருந்தேன்..............அப்போது என் மனைவி வேளாங்கண்ணி கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று கூறினார்கள்............கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அடுத்த நாள் விடியற் காலை செல்லலாம் என்று முடிவு செய்தோம்..........


காலையில் அந்த கடற்க்கரை மிக அழகாக இருக்கும்...........மற்றும் நாகூரில் இருந்த பூங்காவும் அழகா இருக்கும்...........இந்த கடற்க்கரை எழில் என்னையும் என் மனைவியையும் அடிக்கடி அழைத்தவாறு இருந்ததால்...........நாங்கள் அந்த இடங்களுக்கு சென்று வருவது தொடர்ந்தது.................

26 காலை செல்வதாக முடிவு செய்து இருந்தோம்..........நான் இருந்த இடத்தில் இருந்து சரியாக 37 கிமீ தூரமே...............அதனால் எனதருமை Bullet வாகனம் இருந்ததால் கவலை இல்லை...........என் நேரம்......அன்று காலை வெகு நேரம் தூங்கி விட்ட படியால்.................

காலை 7 மணிக்கு தொலைக்காட்சியை பார்த்த பொழுது தான் விஷயமே தெரியும்.............அப்போதும் என் மனைவியை வீட்டில் இருக்க சொல்லி விட்டு அந்த இடத்துக்கு சென்றேன்..............பெரிய அளவிலான படகுகள் சுழட்டி அடிக்கப்பட்டு கட்டிடங்கள் மேல் போய் உற்காந்து இருந்தன.........எங்கு பார்த்தாலும் ஓலம்................


நான் அடிக்கடி சந்திக்கும் நண்பன் என்னிடம் அவனின் நண்பனுக்கு ஏற்ப்பட்ட நிகழ்வை கூறினான்..........அந்த மீனவ நண்பன் தன் இரு குழந்தைகளையும் இழந்ததை கூறினான்...............அலை வரும் போது ஒரு குழந்தை இழுத்துச்செல்லப்பட்டதாகவும்..................ஒரு குழந்தைய கரையை நோக்கி அவன் வீசிய பொழுது மற்றொரு அலை அவன் கண்ணெதிரே அந்த குழந்தையய்யும் தூக்கி சென்றதாகவும் சொல்லும் போது என்னால் என்னை கட்டுப்படுத்திக்கொள்ள இயலவில்லை................


அந்த இடங்களுக்கு சென்று பார்க்கும் பொழுது கீச்சாங்குப்பம் மற்றும் ஒரு கிராமம் முற்றிலும் காணாமல் போயிருந்தது...........எவ்வளவு உயிர்கள் என்று சரியாக கணக்கிடப்பட்டதா தெரியவில்லை..........பல இடங்களில் பல நாட்களுக்கு துர் வாடை வீசியது இன்றும் எனக்கு நினைவிருக்கிறது..........

மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்ப்படுத்திய நிகழ்வு அது...........நான் எப்பொழுதும் எழும் நேரம் கடந்து போனதால் மிஸ்ஸாகிப்போனேன்.............இன்றும் என் மனைவி அதனை குறிப்பிடும் போது ஒரு வித கலக்கம் ஏற்ப்படும்...............

கொசுறு: கடவுள் என்னைப்பார்த்து கேட்க்கிறார்.............உனக்கு எத்தன தடவ உயிர் கொடுக்கறது......நீ அவ்வளவு பாவம் செய்து இருக்கிறாயா ஒரு வேளை நீ அசுரனோ!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

30 comments:

பெம்மு குட்டி said...

It’s really shocking experience

நா.மணிவண்ணன் said...

என்னங்க சொல்றீங்க

விக்கியுலகம் said...

@நா.மணிவண்ணன்

வாழ்கை அவ்ளதான் மாப்ள

விக்கியுலகம் said...

@பெம்மு குட்டி

that is my life experience

THOPPITHOPPI said...

சுனாமினா என்னனு தெரியாம அன்று கடல் தண்ணீரில் நண்பர்களுடன் விளையாடியதுதான் நினைவில் உள்ளது எப்போதும் போல் வரும் கடல் சீற்றம் என்று நினைத்துக்கொண்டு. அன்று இரவு டிவி பார்த்துத்தான் தெரிந்தது நான் விளையாடியது சுனாமியில் என்று. நாங்கலாம் சுனாமியிலேயே சும்மிங் போட்டவுங்க சுனாமின்னு தெரியாமலே.

தமிழ்மணம்- இணைச்சிட்டேன் சந்தோசமா?

விக்கியுலகம் said...

@THOPPITHOPPI

"தமிழ்மணம்- இணைச்சிட்டேன் சந்தோசமா?"

>>>>>>>>>>>>

பாருய்யா நீங்க உண்மையிலேயே தொப்பி போட்டவரா நண்பா சூப்பரு

இணைச்சதுக்கு நன்றி ஹி ஹி!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

தமிழ்மணத்தில நான்தானே பொதுவா இணைப்பேன்... தொப்பி முந்திட்டார்ன்னா நான் லேட்டு...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

பதிவுலக சுனாமி - ன்னு பட்டம் கொடுத்தா என்ன பண்ணுவீங்க?

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

பதில் சொல்லுங்க அப்புரம் வரேன்... நீங்க ஆன்லைனில் வந்தவுடன் என் பிளாக்குக்கு வாங்க...

MANO நாஞ்சில் மனோ said...

// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
பதிவுலக சுனாமி - ன்னு பட்டம் கொடுத்தா என்ன பண்ணுவீங்க?////

ஹே ஹே ஹே ஹே நான் வீட்டுக்கு போறேன்....

MANO நாஞ்சில் மனோ said...

த்ரில்லிங்கா இருக்கே....

அமுதா கிருஷ்ணா said...

நல்லவேளை.லேட்டா எழுந்தீங்க இல்லைன்னா லேட்.விக்கி ஆகியிருப்பீங்க. மறக்க முடியாத நிகழ்வு.

ரஹீம் கஸாலி said...

உண்மையில் நெஞ்சை கனக்க செய்தது

மைந்தன் சிவா said...

என்ன தான் இருந்தும் தவிர்க்க முடியாதது ஆகி விடுகிறது தானே...
கொஞ்ச நாளைக்கப்புறமா வருகிறேன்...
தப்சி பத்தி சி.பி எழுதக்கூடாது!!

http://kaviyulagam.blogspot.com/2011/03/blog-post_18.html

செங்கோவி said...

//நல்லவேளை.லேட்டா எழுந்தீங்க இல்லைன்னா லேட்.விக்கி ஆகியிருப்பீங்க// super!

மதுரை சரவணன் said...

சுனாமி பீதி இன்னும் பலரை விடவில்லை...கடவுள் இருக்கிறார் அதனால் தான் நீங்கள் தப்பித்தீர்...

டக்கால்டி said...

வந்தேன் வந்தேன் மீதும் நானே வந்தேன்...அட என் வருகையை சொல்லலீங்..சுனாமியை சொன்னேன்...

சி.பி.செந்தில்குமார் said...

அட.. தக்களி எஸ்கேப்பா? அட போங்கப்பா..

டக்கால்டி said...

அட.. தக்களி எஸ்கேப்பா? அட போங்கப்பா.//

என்னே! உங்கள் கொலை வெறி...

விக்கியுலகம் said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

"தமிழ்மணத்தில நான்தானே பொதுவா இணைப்பேன்... தொப்பி முந்திட்டார்ன்னா நான் லேட்டு..."

>>>>>>>>>>>>>>
மாப்ள எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குய்யா........
இதுதான்யா வேணும் பதிவர்களுக்கு இடையில!

...................................
"பதிவுலக சுனாமி - ன்னு பட்டம் கொடுத்தா என்ன பண்ணுவீங்க?"

>>>>>>>>>>>
வேனாம்யா நமக்கு எதுக்கு ஹி ஹி!

அந்தப்பேருக்குள்ள எவ்ளோ சோகம் இருக்குய்யா!

.............

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ
வாங்க மாம்ஸ்........என்ன இந்தியா போறீங்களா!

விக்கியுலகம் said...

@அமுதா கிருஷ்ணா

"நல்லவேளை.லேட்டா எழுந்தீங்க இல்லைன்னா லேட்.விக்கி ஆகியிருப்பீங்க. மறக்க முடியாத நிகழ்வு"

>>>>>>>>>>>

நல்லா சொன்னீங்க அதே அதே!

விக்கியுலகம் said...

@ரஹீம் கஸாலி

வருகைக்கு நன்றி நண்பா

விக்கியுலகம் said...

@மைந்தன் சிவா

வருகைக்கு நன்றி நண்பா

விக்கியுலகம் said...

@மதுரை சரவணன்

அதே அதே!

விக்கியுலகம் said...

@செங்கோவி

//நல்லவேளை.லேட்டா எழுந்தீங்க இல்லைன்னா லேட்.விக்கி ஆகியிருப்பீங்க// super!

>>>>>>>>>>>>>>>>>>

அதே அதே!

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

வருகைக்கு நன்றி நண்பா

விக்கியுலகம் said...

@டக்கால்டி

வருகைக்கு நன்றி நண்பா

அஞ்சா சிங்கம் said...

அட மாப்பு நீயாவது 37 கீ.மீ. தூரம் நான் தினமும் பீச்சில் வாலிபால் ஆடுவேன் அன்றும் காலை விளையாடிவிட்டு நாங்கள் வீட்டுக்குவந்து பத்து நிமிடத்தில் சுனாமி தாக்குதல் அந்த இடமே காணாமல் போயிருந்தது .....

விக்கியுலகம் said...

@அஞ்சா சிங்கம்

மாப்ள பல பேர் தப்பி இருக்கோம் போல!