இதுவரை மனிதன்தான் தெய்வங்களை தொழுது வருகிறான்..........................நான் சொல்ல வருவது நம் கண் முன் வாழும் தெய்வங்களான விவசாயிகளைப்பற்றியது..........நேற்று நான் போட்ட பதிவர்களுக்கான கெட்ட செய்தியின் உட்கருத்து வேறு.................
அந்த விஷயத்தை இப்போது தெளிவு படுத்துகிறேன்...........முதல் விஷயம் சமஉ என்றால் என்ன?
சகோதர மக்கள் உலகம் - இப்படி ஓர் அமைப்பு வட மாநிலத்தில் வேரூன்றி இருக்கிறது. இது அரசியல் சார்ந்த அமைப்பல்ல..........நம் நாட்டு மக்கள் வெளி நாடுகளில் சம்பாதிக்கும் பணத்தின் ஒரு பகுதியை தாய் நாட்டு முன்னேற்றத்திட்கு அனுப்பிக்கொண்டு இருக்கின்றனர்.................
அதாவது சிறு மற்றும் குறு விவசாயிகள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தற்கொலை செய்து வருவது தொடர்ந்து கொண்டு வருகிறது..............இதை தடுக்க அரசு என்ன செய்கிறது என்பது வேறு விஷயம்................ஆனால் ஒரு குடிமகனாக நாம் என்ன செய்ய நினைப்போமோ அதை செய்து வரும் மக்கள் தான் இதன் உறுப்பினர்கள்.
அவர்கள் இந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு பண உதவி செய்து அந்த நிலங்களின் விளை பொருள்களை பாது காக்கின்றனர். அது மட்டுமல்லாது நகரங்களில் வாழும் நண்பர்களை வாரத்திற்க்கு ஒரு முறை அதாவது.........ஞாயிற்று கிழமைகளில் குறைந்த பட்சம் 50 கிமி தூரம் சென்று அங்கு அந்த விவசாயிகளுக்கு உதவி புரியுமாறும் பணித்துள்ளனர்.
அரசாங்கத்தை மட்டும் குறை கூறாமல் தங்களால் முயன்ற உதவிகளை சத்தமில்லாமல் செய்து வரும் ஒரு அமைப்பாக இது செயல் படுவதாக நண்பர் கூறினார். அது போல ஒரு விஷயம் நம் தமிழ் நாட்டில் நடந்தால் நல்லதாக இருக்கும் என்ற அவா எழுந்ததால் நேற்றைய பதிவில் அவ்வாறு குறிப்பிட்டு இருந்தேன்.
வழக்கம் போல நம்ம மக்கள் நான் நய்யாண்டி தான் எழுதி இருக்கிறேன் என்று நினைத்து விட்டார்கள். ஆனால் இது தொகுதி சார்ந்த அரசியல் கலக்காத சமூக சேவை என்பதே உண்மை.
கொசுறு: மேல்பட்ட விஷயங்கள் சமூக அக்கறை கொண்டவை. தங்கள் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன.

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
36 comments:
ம்..... விவசாயிகளைப் பேணவேண்டியது நம் அனைவரதும் கடமைதான்! விழிப்புணர்வு மிக்க உங்கள் கட்டுரைக்கு நன்றி நண்பரே!
இந்த வட பாயாசம், இட்லி, தோசை எல்லாம் எனக்குத்தானே!
( நிஜமாவே பதிவ முழுசாப் படிச்சிட்டுத்தான் கமெண்டு போடுறேன் பாஸ்! ஹி...... ஹி.....ஹி.....)
@ஓட்ட வட நாராயணன்
"ம்..... விவசாயிகளைப் பேணவேண்டியது நம் அனைவரதும் கடமைதான்! விழிப்புணர்வு மிக்க உங்கள் கட்டுரைக்கு நன்றி நண்பரே!"
"இந்த வட பாயாசம், இட்லி, தோசை எல்லாம் எனக்குத்தானே!
( நிஜமாவே பதிவ முழுசாப் படிச்சிட்டுத்தான் கமெண்டு போடுறேன் பாஸ்! ஹி...... ஹி.....ஹி.....)"
>>>>>>>>>>>>>>>>
வருகைக்கு நன்று நண்பா
முழுசா படிக்கணும்னு தான் இரத்தின சுருக்கமா பதிவு போட்டேன் ஹி ஹி!
வணக்கம் நண்பரே,
காலையிலேயே இப்படி ஒரு சமூகம் சார்ந்த நல்ல விசயத்தை பகிர்ந்து கொண்டமைக்கு முதலில் பெரிய நன்றி பாஸ்...
//அதாவது சிறு மற்றும் குறு விவசாயிகள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தற்கொலை செய்து வருவது தொடர்ந்து கொண்டு வருகிறது..............இதை தடுக்க அரசு என்ன செய்கிறது என்பது வேறு விஷயம்................ஆனால் ஒரு குடிமகனாக நாம் என்ன செய்ய நினைப்போமோ அதை செய்து வரும் மக்கள் தான் இதன் உறுப்பினர்கள்.//
உண்மைதான் இன்றைய சூழலில் அழிந்து வரும் விவசாயங்களும் குறைந்து வரும் விவசாயிகளின் நிலைமை அதிகமாகிக்கொண்டே செல்கிறது..இதை தடுக்க நீங்கள் சொல்வது ஏதாவது செய்யனும் பெருசா செய்யனும் பாஸ்....
@மாணவன்
"உண்மைதான் இன்றைய சூழலில் அழிந்து வரும் விவசாயங்களும் குறைந்து வரும் விவசாயிகளின் நிலைமை அதிகமாகிக்கொண்டே செல்கிறது..இதை தடுக்க நீங்கள் சொல்வது ஏதாவது செய்யனும் பெருசா செய்யனும் பாஸ்...."
>>>>>>>>>>>
வருகைக்கு நன்றி
நம்மளால முடியும் செய்வோம் நண்பா
தமிழ்மணத்தில் இணைத்து வாக்களித்துவிட்டேன் நண்பா
@ரஹீம் கஸாலி
"தமிழ்மணத்தில் இணைத்து வாக்களித்துவிட்டேன் நண்பா"
>>>>>>>>>>>>>>>>>>
வருகைக்கும் இனச்சதுக்கும் நன்றி நண்பா
அவர்கள் இந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு பண உதவி செய்து அந்த நிலங்களின் விளை பொருள்களை பாது காக்கின்றனர். அது மட்டுமல்லாது நகரங்களில் வாழும் நண்பர்களை வாரத்திற்க்கு ஒரு முறை அதாவது.........ஞாயிற்று கிழமைகளில் குறைந்த பட்சம் 50 கிமி தூரம் சென்று அங்கு அந்த விவசாயிகளுக்கு உதவி புரியுமாறும் பணித்துள்ளனர்.
.....நெகிழ்ந்தேன். மனித நேயம் இன்னும் இருக்கிறது. பலரை சென்று அடைய வேண்டிய விழிப்புணர்வு பதிவுங்க. முக்கியமான இந்த தகவல் பகிர்வுக்கு, நன்றிங்க.
@Chitra
".....நெகிழ்ந்தேன். மனித நேயம் இன்னும் இருக்கிறது. பலரை சென்று அடைய வேண்டிய விழிப்புணர்வு பதிவுங்க. முக்கியமான இந்த தகவல் பகிர்வுக்கு, நன்றிங்க"
>>>>>>>
வருகைக்கு நன்றி சகோ
மிகவும் நல்ல விஷயம்..//வழக்கம் போல நம்ம மக்கள் நான் நய்யாண்டி தான் எழுதி இருக்கிறேன் என்று நினைத்து விட்டார்கள்.// கெட்ட செய்தின்னு போட்டா, வேற எப்படி நினைப்பாங்களாம்..
நல்ல முயற்சிதான் விக்கி..இது எந்த அளவுக்கு தமிழ்நாட்டில் சாத்தியம் என்று தெரியவில்லை, இயற்கை விவசாயி நம்மாழ்வார் செய்யாததா? அமைப்பு என்று வரும் போது காலப்போக்கில் அதில் பணமும் அரசியலும் விளையாடும்.. இதில் தமிழனை சொல்லவேவேண்டாம்! நான் தனிப்பட்ட முறையில் ஒரு பாதிக்கப்பட்ட விவசாயியையோ அல்லது அவர்களின் குடும்பத்தையோ தத்தெடுத்து உதவிகள் செய்தாலே போதும் என்று நினைக்கிறேன்!
//முழுசா படிக்கணும்னு தான் இரத்தின சுருக்கமா பதிவு போட்டேன் ஹி ஹி/
இதை நான் வரவேற்கிறேன்...உண்மையும் கூட
@செங்கோவி
"மிகவும் நல்ல விஷயம்..//வழக்கம் போல நம்ம மக்கள் நான் நய்யாண்டி தான் எழுதி இருக்கிறேன் என்று நினைத்து விட்டார்கள்.// கெட்ட செய்தின்னு போட்டா, வேற எப்படி நினைப்பாங்களாம்.."
>>>>>>>>
சாரிபா சாரி நான் வேணா பூ மிதிக்கவா(only rose ok!)
@மைந்தன் சிவா
"முழுசா படிக்கணும்னு தான் இரத்தின சுருக்கமா பதிவு போட்டேன் ஹி ஹி/
இதை நான் வரவேற்கிறேன்...உண்மையும் கூட"
>>>>>>>>>>>>>>>>
ரைட் ரைட் ஓகே ஓகே போலாம் போலாம் அப்படியா!
@வைகை
"நான் தனிப்பட்ட முறையில் ஒரு பாதிக்கப்பட்ட விவசாயியையோ அல்லது அவர்களின் குடும்பத்தையோ தத்தெடுத்து உதவிகள் செய்தாலே போதும் என்று நினைக்கிறேன்!"
>>>>>>>>
அதே அதே செய்யலாமே!
பயனுள்ள விழிப்புணர்வு பதிவு..
raitti ரைட்டு.. நல்ல விழிப்புணர்வு பதிவு.. நான் ரெடி.. களத்துல குதிக்க.. ஆணை இடுங்கள்
@வேடந்தாங்கல் - கருன்
வருகைக்கு நன்றி நண்பா
விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில் இது போன்ற அமைப்பு செயல் படுவது பாராட்டுக்குரியது
@நா.மணிவண்ணன்
வருகைக்கு நன்றி நண்பா
@சி.பி.செந்தில்குமார்
"raitti ரைட்டு.. நல்ல விழிப்புணர்வு பதிவு.. நான் ரெடி.. களத்துல குதிக்க.. ஆணை இடுங்கள்"
>>>>>>>>>>>>
வருகைக்கு நன்றி நண்பா
சீக்கிரத்துல இதுக்கான வழி முறைகளை தெரியப்படுத்துகிறேன் நண்பா
நல்ல விசயம்...
விவசாயிகளுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் இந்த பழக்கம் இருந்தால் நன்றாக இருக்கும்...
////அரசாங்கத்தை மட்டும் குறை கூறாமல் தங்களால் முயன்ற உதவிகளை சத்தமில்லாமல் செய்து வரும் ஒரு அமைப்பாக இது செயல் படுவதாக நண்பர் கூறினார்.////
உலகத்தில நம்மளுக்குத் தெரியாம எத்தனை விசயம் நடக்குது....
இதை முதல்லியே சொல்லியிருக்கலாம் தலை...நல்ல விளக்கம்...இன்னும் சில ஐடியாக்களை கொடுங்கள்
விவசாயிகளை காக்க வேண்டும்....
இந்த விசயத்த எப்படி ஆரம்பிக்கறது எப்படி கொண்டு போறதுன்னு விளக்கமா பதிவு போடுங்க, நானும் ரெடி...
நல்ல விழிப்புணர்வை தரும் பதிவு .வாழ்த்துக்கள்
உங்கள் பதிவுகள் ஆரம்பத்தில் ஏதோ மேலோட்டம்மாக இருந்தது போல் இருந்தது ஆனால் இப்போது மிகப்பெரிய மாற்றம் எழுத்தில் வளர்ச்சி. படிக்க ரசிக்கும் படி எழுத ஆரம்பிச்சிட்டிங்க
@சங்கவி
வருகைக்கு நன்றி நண்பா
முதல்ல சேத்துல கைவைக்கரவங்கள காப்பாத்துவோம் நண்பா!
@♔ம.தி.சுதா♔
"உலகத்தில நம்மளுக்குத் தெரியாம எத்தனை விசயம் நடக்குது...."
>>>>>>>>>>>>
வருகைக்கு நன்றி நண்பா
பாருங்க எவ்ளோ நடக்குதுன்னு!
@MANO நாஞ்சில் மனோ
வருகைக்கு நன்றி தலைவரே
@ஆர்.கே.சதீஷ்குமார்
"இதை முதல்லியே சொல்லியிருக்கலாம் தலை...நல்ல விளக்கம்...இன்னும் சில ஐடியாக்களை கொடுங்கள்"
>>>>>>>>>>>>
வருகைக்கு நன்றி தலைவரே
சீக்கிரத்துல செய்வோம்
@"குறட்டை " புலி
வருகைக்கு நன்றி நண்பா
@இரவு வானம்
வருகைக்கு நன்றி நண்பா
சீக்கிரத்துல செய்வோம்
@THOPPITHOPPI
வருகைக்கு நன்றி நண்பா
உங்க வாழ்த்துரைக்கு நன்றி
இன்னும் முயற்சி செய்கிறேன் நண்பா
Post a Comment