Followers

Thursday, August 25, 2011

குட்டிச்சுவர் - பாகம் 2

வணக்கம் நண்பர்களே...


குட்டிச்சுவர் தொடர்கிறது.....

முதல் பகுதி - குட்டிச்சுவர் - பாகம் 1

மீனா: இதுதான் Form இத நிரப்பி கிண்டில(!) இருக்க இந்த இடத்துக்கு கொண்டு போய் கொடு....இதுல இருக்க ஜாதி சான்றிதழ் உற்பட எல்லா Certificate காப்பியும் இணைசிடுடா....கண்டிப்பா ரெண்டு இல்ல மூணு மாசத்துல கெடச்சிடும் பணம்....கவலைப்படாதே...

டங்கு: நீங்க சொல்லி முடியாதுன்னு சொல்ல முடியுமா...ரெடி பண்றேன்...


(ஒரே நாளில் தேவையான எல்லா சான்றிதழ்களின் நகல்களையும் எடுத்துக்கொண்டு அடுத்த நாள் அந்த Office போய் சேர்ந்தான் டிங்கு!)

அலுவலர்: தம்பி..உங்க படிவம் மற்றும் இணைக்கப்பட்ட எல்லாத்துக்கும் சரியானபடி அரசு அலுவலர் கிட்டயும் லெட்டர் வாங்கி இருக்கீங்களே...ரைட்டு...கவலைப்படாதீங்க சீக்கிரத்துல கெடச்சிடும்....

டங்கு: அண்ணே நன்றிண்ணே....ரொம்ப நாளாகம இருந்தா சரி....நான் வரண்ணே....

(கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு பிறகு....டிங்குவின் நண்பி அவனை நோக்கி ஓடி வந்து கொண்டு இருந்தாள்....!)

சாந்தி: டேய் உன்னைய எங்கெல்லாம் தேடுறது...அம்மா இந்த போஸ்ட உன்கிட்ட கொடுக்க சொன்னாங்க....

டங்கு: நான் இந்த குட்டிசுவத்துல(!) தானே உக்காந்து இருப்பேன்....மறந்துட்டியா...ஹிஹி...

சாந்தி: ஆமாம் என்னாது இது வேலை கெடைசிடுச்சா....

டங்கு: இரு பாக்குறேன் என்ன லெட்டர் அது...இல்ல...Loan Approval லெட்டர் இது...

(டேய் வாங்க நாளைக்கு பேங்குக்கு போக வேண்டி இருக்கும்!....சந்தோஷத்துடன் பீர்(!) அடிக்க கிளம்பினார்கள் நண்பர்கள்!...இதுக்கு மட்டும் எங்கிருந்து தான் துட்டு கெடைக்குமோ!)

மறு நாள் பேங்கில்:


மேலாளர்: தம்பி நீங்க கொடுத்திருக்க எல்லாத்தையும் பார்த்தேன்....சரி கடன் 5 லட்சம் கேட்டு இருக்கீங்க....அதுக்குரிய Collateral அதாவது ஜவாப் யாரு...அதப்பத்தி எதுவும் உங்க மனுவுல இல்லையே....

டங்கு: என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க....நேத்து கூட பேப்பர்ல பாரதப்பிரதமரோட இந்த கடன் வழங்கும் திட்டத்துக்கு ஜவாப் 5 லட்சம் வரைக்கும் தேவை இல்லன்னு அமைச்சர் பேட்டி கொடுத்திருந்தாரே....

மேலாளர்: அப்போ நீங்க அந்த அமைச்சர் கிட்ட தான் போய் கேக்கணும்...

டங்கு: ஐயோ!

மேலாளர்: தம்பி....இதுக்கு 10 அல்லது குறைஞ்ச பட்சம் 8 லட்சம் பெறுமானமான வீடோ நிலமோ இருக்கவங்க ஜவாப் கொடுக்கனும்பா...இல்லைன்னா no chance!...


மீனா: சார்...பெரியவங்க நீங்க இப்படியெல்லாம் சொல்லக்கூடாது...ஏழ்மையில இருக்க பையன்...கொஞ்சம் கருணை காட்டுங்க....நான்தான் இந்த படிவத்த படிச்சி நம்பிக்கையுடன் செய்ய வச்சேன்....இதுக்கு அப்படி எதுவும் rules கேக்கலையே!

மேலாளர்: ஏய் யாரும்மா நீ....நீங்கல்லாம் ஒரு கும்பலா துட்டு வாங்கிட்டு போயிருவீங்க...பேங்குக்கு யாரு பொறுப்பு....Rules அப்படித்தான் இருக்கு....அத எல்லாம் உங்ககிட்ட காட்ட வேண்டிய அவசியம் இல்ல...வெளிய போங்க....

(வெளியே வந்தவுடன் அந்த பேங்கு பியூன் டங்குவை மறித்தான்!)

பியூன்: ஏன் தம்பிகளா...சின்ன விஷயம்கூட உங்களுக்கு புரியலியே...நீங்க எப்படித்தான் இந்த நாட்டுல பொழைக்க போறீங்களோ தெரியல...

டங்கு: ஏன்னே...என்ன விஷயம் சொல்லுங்க....

பியூன்: அவரு உங்க கிட்ட துட்டு எதிர் பாக்குறாரு....ஒரு லட்சம் கொடுத்திட்டீங்கன்னா 15 நாள்ல பணம் கைக்கு வந்திடும்....

சாந்தி: என்னன்னே அநியாயம்....5 க்கு 1 ரொம்ப அநியாயமுங்க....


பியூன்: என்னப்பாப்பா பண்றது...இங்க அதான் நடைமுறை(!)....நீங்க வேற என்ன பண்ணாலும் உங்களால வாங்க முடியாது....

தொடரும்....

கொசுறு: ஆப்புகள் யாரும் வைப்பதில்லை...நாமே வைத்துக்கொள்கிறோமோ - டவுட்டு!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

23 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

தொடருங்கள் ...

Chitra said...

the last picture is profound.

FOOD said...

ஆப்பு வைக்க வேற ஆளையெல்லாம் நாம் நம்புவதில்லை1

தமிழ்வாசி - Prakash said...

ஒரு சில வங்கிகளில் இந்த லஞ்சம் பழக்கம் உள்ளது

சி.பி.செந்தில்குமார் said...

தக்காளீக்கு ஆர்ட் ஃபிலிம் எடுக்க நல்லா வரும், ஹி ஹி

சங்கவி said...

மாப்ள 7 வது ஓட்டு என்னுது....

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

நான் லோன் வாங்க அலைஞ்ச ஞாபகம் வருது விக்கி...

ராஜி said...

மேலாளர்: தம்பி....இதுக்கு 10 அல்லது குறைஞ்ச பட்சம் 8 லட்சம் பெறுமானமான வீடோ நிலமோ இருக்கவங்க ஜவாப் கொடுக்கனும்பா...இல்லைன்னா no chance!...

>>>
அப்பவாது நீங்க உஷாராயிருக்கனும் சகோ

MANO நாஞ்சில் மனோ said...

பியூன்: அவரு உங்க கிட்ட துட்டு எதிர் பாக்குறாரு....ஒரு லட்சம் கொடுத்திட்டீங்கன்னா 15 நாள்ல பணம் கைக்கு வந்திடும்....//

நாசமாபோச்சு போ.....

MANO நாஞ்சில் மனோ said...

கொசுறு: ஆப்புகள் யாரும் வைப்பதில்லை...நாமே வைத்துக்கொள்கிறோமோ - டவுட்டு!//

எலேய் சொம்பு பலமா எங்கேயோ நசுங்கி இருக்குறா மாதிரி தெரியுதே....!!!

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்மணம் பத்தாவது ஓட்டு ஹி ஹி....

சசிகுமார் said...

சூப்பர் மாப்ஸ்

koodal bala said...

இதோ ...மறு படியும் வந்துட்டேன் ....போராட்டத்துக்கு கொஞ்சம் ரெஸ்ட் ...

ஜீ... said...

தொடர் நல்லா போகுது மாம்ஸ்!

இரவு வானம் said...

என்ன ஒரு வில்லத்தனம் மாம்ஸ் பேங்க்காரனுக்கு, நம்ம மனோ சார்கிட்ட சொல்லி அருவாளாலயே போட சொல்லுங்க

vidivelli said...

நல்லாயிருக்குங்க....
பாராட்டுக்கள்..

ஆமினா said...

சூப்பர்....

தொடருங்க

செங்கோவி said...

ஒரு லட்சமா..........

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

ப்ளஸ் ல ஓட்டு போடமுடியலையே..

மாய உலகம் said...

thamil manam 16


குட்டி சுவர் - கலக்கிக்கொண்டிருக்கிறது தொடர்

Seshadri said...

For me also it happened one time. but i used my heavy weight friends circle (went to manager home at 11.00 pm in the presence of his family members warned him about his expectation and given the time frame also for sanction ) to get the loan.

i settled the loan amount also in the desired time.

adi uthavara mari vera yethum uthvathu sir.

ரெவெரி said...

கலக்குங்க...

நிரூபன் said...

குட்டிச் சுவர் பாகம் இரண்டைச் சுவாரஸ்யமாக நகர்த்துறீங்க.

விரிவான பின்னூட்டமிட முடியவில்லை, மன்னிக்கவும் பாஸ்.