Followers

Monday, August 29, 2011

குட்டிச்சுவர் - பாகம் - 4

வணக்கம் நண்பர்களே...


தொடர்கிறது........

முந்தய பாகங்களுக்கு - சுவர் புராணம் (4)


டிங்கு: போலீசுக்கு உதவரத்துக்காக இரவு நேரத்துல ரோந்து போக மன்றத்துல(!) இருந்து ஆள் கேட்டு இருந்தாங்க....அதுக்கு போறேன்....குடியிருப்போர் சங்கத்துல இருந்து பணம் கலெக்ட் பண்ணி கொடுப்பாங்க....அதுல இருந்து வேலை கிடைக்கற வரைக்கும் இந்தப்பணம் வீட்டுக்கு உதவியா இருக்கும்னு நெனச்சேன்....


அப்பா: வீட்டுக்கு உதவறது சரி....நேத்து நைட்டு எங்க தூங்குனே ஞாபகம் இருக்கா.....

டிங்கு: ஏன்?

அம்மா: என்னங்க....அப்படி எங்க போயிட்டான்....

அப்பா: சுடுகாட்டுல படுத்து தூங்குராண்டி.....வெட்டியான் சொன்னான்....அந்த கொடுமைய.......

அம்மா: ஏன்டா உம்புத்தி இப்படிப்போகுது....


டிங்கு: இதுல என்ன தப்பு கடைசில அங்க தானே போகப்போறோம்....அதான் என்னதான் இருக்குன்னு தூங்கிப்பாத்தேன்....நல்லாத்தான் இருக்கு....அமைதியா எந்த காசு தொந்தரவும் இல்லாம......

அம்மா: டேய் நீ அந்தப்படிப்ப எடுத்து படிக்கும் போதே உங்கப்பாரு பயந்தாரு ...இவன் என்ன ஆகப்போரானொன்னு......

அப்பா: நீ ஏன்டா அவன அடிச்ச...

டிங்கு: நீங்க தேர்தல்ல நிக்க போறதா என்னைய கேட்டான்...நான் அதுக்கு "எங்கிட்ட ஏன் கேக்குற எங்கப்பாரு கிட்ட கேளுய்யான்னு சொன்னேன்" இது தப்பா....அவனோட ரவுடித்தனத்த காமிக்கப்பாத்தான்....என்னைய காப்பாத்திக்க அடிச்சேன்.....

அப்பா: நான் நிக்கறேன்னு இன்னும் சொல்லவே இல்லையே!...இதுக்கெல்லாம் காரணம் அந்த வாத்தியாரு பயலும்....அந்த அடிதடி வித்தைகளும் தானடா.....பாத்தில்ல அந்த பயல போலீசு காலு நரம்ப கட் பண்ணி முடவனா ஆக்கிடுச்சி...நான் படிச்சி படிச்சி சொன்னேன் அவன் கேக்கல.....இப்போ நடக்க முடியாம திரியிறான்......அவன பாத்தாவது உனக்கு அறிவு வர வேணாம்....அத விட்டு புட்டு அவனுக்கு எடுப்பு வேல செய்ஞ்சிட்டு திரியிற....

டிங்கு: அவருக்கு உதவிக்கு யாரும் இல்ல...நீங்க தானே கஷ்டப்படுறவங்களுக்கு உதவனும்னு சொல்வீங்க...இப்போ இப்படிப்பேசுறீங்க....



அப்பா: அடேய் அது நல்லவங்களுக்கு....அவன் அந்த அளவுக்கு நல்லவன் இல்ல....இன்னிக்கும் அவன் தான் செய்ஞ்ச போக்கிரித்தனங்கள நெனச்சி வருந்துராப்போல தெரியல...எனக்கென்னமோ உன்னைய தயார் பண்றான்னு தோணுது....விட்ரு வேணாம்...அந்தப்பைய சகவாசமும் வேணாம் போலீசு சகவாசமும் வேணாம்...சொல்றத கேளு..

டிங்கு: இன்னும் எத்தன நாளைக்கு தான் இப்படி பயந்து வாழ்வீங்க...தப்பு கண்ணு எதிர்க்க நடக்கும் போது தட்டிக்கேக்குரவண(!) ரவுடிங்கறீங்க.....அரசாங்கத்தால அனுப்பட்டவங்க கூடையும் சகவாசம் வேனாம்ங்கறீங்க...

அப்பா: அடேய் இது சினிமா இல்ல நிஜம்.....ஒரு முறை உனக்கு ஏதாவது நடந்துட்டா யாரு காப்பாத்த வருவா....நீ கத்து வச்சிருக்கியே குராத்தே(!) அது காப்பாத்துமா....


டிங்கு: அது கராத்தே.....நான் குழந்தை இல்ல எனக்கு எது சரி எது தப்புன்னு புரியுது...அதுப்படித்தான் செய்யிறேன்...உங்களுக்கு என்ன குடுமபத்துக்கு கெட்ட பேரு வரக்கூடாது அதுதானே....

அப்பா: இதெல்லாம் வக்கனையா பேசு....சொல்ற பேச்சை மட்டும் கேக்காதே....ஆமா அந்த பேங்கு கடன் கொடுக்கறான்னு சொன்னியே என்னாச்சி.....

டிங்கு: நான் சொல்லலியே...உங்களுக்கு எப்படித்தெரியும்....


அப்பா: அதான்டா அப்பேங்கறது...நீ எங்க போறே எங்க வரேன்னு எனக்கு நல்லாத்தெரியும்..


தொடரும்......

கொஸுரூ: அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு இங்கே நீ சிரிக்கும் புன் சிரிப்போ ஆனந்த சிரிப்பு.....

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

32 comments:

Philosophy Prabhakaran said...

தல... முதல் மூணு பாகம் படிக்கலைன்னா புரியுமா...

Philosophy Prabhakaran said...

1

Philosophy Prabhakaran said...

அரைகுறையா புரியுது... இதுல டிங்கு கேரக்டர் நீங்கதானா...

விக்கியுலகம் said...

@Philosophy Prabhakaran

வருகைக்கு நன்றி....மாப்ள இது உலகப்பட ரேஞ்சு அதானால் முந்தய பாகம் படிச்சாத்தான் புரியும் ஹிஹி!

மாய உலகம் said...

அஹா குட்டி சுவர்ல சீன பெருஞ்சவர்லாம் தெரிர்யுதே..தோ வாறன்

மாய உலகம் said...

தமிழ் மணம் 3

மாய உலகம் said...

அதானே... மாம்ஸ் டிங்கு நீங்க தானா... கொசுறு சூப்பர்

விக்கியுலகம் said...

@Philosophy Prabhakaran

" Philosophy Prabhakaran said...
அரைகுறையா புரியுது... இதுல டிங்கு கேரக்டர் நீங்கதானா..."

>>>>>>>>>>

இல்லைய்யா இது ஒரு உண்மை கதை அவ்வளவே....!

விக்கியுலகம் said...

@மாய உலகம்

" மாய உலகம் said...
அஹா குட்டி சுவர்ல சீன பெருஞ்சவர்லாம் தெரிர்யுதே..தோ வாறன்"

>>>>>>>>>>>>

வருகைக்கு நன்றி மாப்ளே...சீனப்பெருஞ்சுவர் தான்யா நம்ம வாழ்கை ஹிஹி!....

.................

"மாய உலகம் said...
அதானே... மாம்ஸ் டிங்கு நீங்க தானா... கொசுறு சூப்பர்

>>>>>>>>>>

இல்லைய்யா இது ஒரு உண்மை கதை அவ்வளவே....!

மகேந்திரன் said...

டிங்குவும் அப்பாவும்
உரையாடல்கள் நல்லா இருக்கு
யதார்த்தமா...

மகேந்திரன் said...

தலைப்ப பார்த்து குட்டிச் சுவர் பார்க்கலாம்னு வந்தா
பெரிய .... நீண்ட ... சுவர்கள் படங்கள்
அசத்துங்க

தமிழ்வாசி - Prakash said...

டிங்கு...டிங்கு...டிங்குச்சா...
டங்கு...டங்கு...டன்குச்சா...

சசிகுமார் said...

தமிழ்மணம் - 7

சசிகுமார் said...

குட்டி சுவர்னு தலைப்பு வச்சிக்கிட்டு பெருஞ் சுவர் படத்தை போட்டு இருக்கியே மாப்பு லாஜிக் மிஸ் ஆகுதே.......ஹீ ஹீ

சி.பி.செந்தில்குமார் said...

Philosophy Prabhakaran Says:
August 29, 2011 7:41 AM

தல... முதல் மூணு பாகம் படிக்கலைன்னா புரியுமா...

aamaa விக்கி பதிவு போட்டா சின்ன குழந்தைக்கு கூட புரிஞ்சிடும், ஆனா என்ன சொல்ல வர்றானு எவனுக்கும் தெரியாது ஹி ஹி

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

தமிழ்மணம் பத்து..

இராஜராஜேஸ்வரி said...

அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு இங்கே நீ சிரிக்கும் புன் சிரிப்போ ஆனந்த சிரிப்பு....

ஹைதர் அலி said...

விக்கி அவர்களூக்கு
சீன சுவரே குட்டிசவருன்ன
பயமா இருக்கு
ஆமா எது பெரிய சுவரு கொஞ்சம் வெளக்குங்கே ப்ளீஸ்

ஜீ... said...

சூப்பர் மாம்ஸ்! டிங்கு காரெக்டர் உங்கள மாதிரியே பேசுதே?

FOOD said...

//அப்பா: சுடுகாட்டுல படுத்து தூங்குராண்டி.....வெட்டியான் சொன்னான்....அந்த கொடுமைய...//
காத்து கருப்பு அண்டலயே?

விக்கியுலகம் said...

@மகேந்திரன்

" மகேந்திரன் said...
தலைப்ப பார்த்து குட்டிச் சுவர் பார்க்கலாம்னு வந்தா
பெரிய .... நீண்ட ... சுவர்கள் படங்கள்
அசத்துங்க"

>>>

வருகைக்கு நன்றி மாப்ளே....அது நம் வாழ்கையை குறிப்பது...நன்றி

விக்கியுலகம் said...

@தமிழ்வாசி - Prakash

"தமிழ்வாசி - Prakash said...
டிங்கு...டிங்கு...டிங்குச்சா...
டங்கு...டங்கு...டன்குச்சா..."

>>>>>>>>>>>

எலேய் மாப்ள நல்லாத்தானே போயிட்டு இருக்கு....!

விக்கியுலகம் said...

@சசிகுமார்

" சசிகுமார் said...
குட்டி சுவர்னு தலைப்பு வச்சிக்கிட்டு பெருஞ் சுவர் படத்தை போட்டு இருக்கியே மாப்பு லாஜிக் மிஸ் ஆகுதே.......ஹீ ஹீ"

>>>>>>>>>

நீதி: வாழ்கைன்னா நெடிய பயணம்...ஸ் ஸ் இதுவும் விளக்கனுமா மாப்ள!

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

"சி.பி.செந்தில்குமார் said...
Philosophy Prabhakaran Says:
August 29, 2011 7:41 AM

தல... முதல் மூணு பாகம் படிக்கலைன்னா புரியுமா...

aamaa விக்கி பதிவு போட்டா சின்ன குழந்தைக்கு கூட புரிஞ்சிடும், ஆனா என்ன சொல்ல வர்றானு எவனுக்கும் தெரியாது ஹி ஹி"

>>>>>>>>>>>>

ஏன்யா ஏன்...ஏன் இப்படி பேசிப்பழகர ஹிஹி!

விக்கியுலகம் said...

@ஜீ...

" ஹைதர் அலி said...
விக்கி அவர்களூக்கு
சீன சுவரே குட்டிசவருன்ன
பயமா இருக்கு
ஆமா எது பெரிய சுவரு கொஞ்சம் வெளக்குங்கே ப்ளீஸ்"

>>>>>>

நீதி: வாழ்கைன்னா நெடிய பயணம்...ஸ் ஸ் இதுவும் விளக்கனுமா மாப்ள!

விக்கியுலகம் said...

@ஜீ...

" ஹைதர் அலி said...
விக்கி அவர்களூக்கு
சீன சுவரே குட்டிசவருன்ன
பயமா இருக்கு
ஆமா எது பெரிய சுவரு கொஞ்சம் வெளக்குங்கே ப்ளீஸ்"

>>>>>>

நீதி: வாழ்கைன்னா நெடிய பயணம்...ஸ் ஸ் இதுவும் விளக்கனுமா மாப்ள!

விக்கியுலகம் said...

@இராஜராஜேஸ்வரி

வருகைக்கு நன்றி மேடம்

விக்கியுலகம் said...

@FOOD

" FOOD said...
//அப்பா: சுடுகாட்டுல படுத்து தூங்குராண்டி.....வெட்டியான் சொன்னான்....அந்த கொடுமைய...//
காத்து கருப்பு அண்டலயே?

>>>>>>>>>>>>

அண்ணே பிசாச இன்னொரு பேய் புடிக்குமா டவுட்டு!

விக்கியுலகம் said...

@ஜீ...

" ஜீ... said...
சூப்பர் மாம்ஸ்! டிங்கு காரெக்டர் உங்கள மாதிரியே பேசுதே?"

>>>>>>>>>>>

அடடா நீங்க அப்படி நெனசிகிட்டீன்களா மாப்ள...But ஆனா why ஏன்?

நிரூபன் said...

சுவாரஸ்யமாக நகர்த்தியிருக்கிறீங்க தொடரை,
அடுத்த பாகத்தில் சந்திக்கிறேன்,

கும்மாச்சி said...

ஒன்னியும் பிரிலபா, டிங்கு யாரு மாப்ள

ரெவெரி said...

நல்லாயிருந்திச்சு....தொடருங்கள்...