Followers

Monday, March 21, 2011

இலவசம், இலவசம்(ஹிஹி!)

வணக்கம் நண்பர்களே..............என்னடி ராக்கம்மா பல்லாக்கு.............என்நெஞ்சு குலுங்குதடி..........அடிக்கண்ணாடி மூக்குத்தி.................(கொஞ்சம் பாடுங்கப்பா!)


தேர்தலோ தேர்தல்....................எல்லாம் ஒரு முறை கண்ண மூடி திறங்க............ஹிஹி! அண்டாக்கா கசம் உயிரு போச்சி நெசம்.................இப்போ எல்லாம் ஒரு தரம் கைத்தட்டுங்கோ..............பாருங்கோ மக்களே உங்களுக்காக உழைக்க நாங்க வந்துட்டு இருக்கோம்.............

தேர்தல் முடிஞ்சி நாங்க ஆட்சிக்கு வந்த பிறகு.............யாரும் வேலைக்கு போகவேணாம்.......பெண்களுக்கு கிரைண்டர் குடுக்கப்போறோம்..........அத முறைச்சி பாத்துகிட்டு அடுத்த 5 வருஷம் ஓட்டிடுங்க.........தக்காளி யாராவது மின்சாரத்த பத்தி கேக்க கூடாதுன்னுதான் அந்த சம்மந்தப்பட்ட மன்சன தேர்தல்ல நாங்க நிக்க வைக்கல..........இதுல இருந்தே எங்களோட நேர்மைய நீங்க புரிஞ்சிட்டு இருப்பீங்கன்னு நெனைக்கிறோம் ஹிஹி!............


நம்ம தொப்புள் குடி உறவுன்னு சொல்லியே அவங்க உசிர நாங்க வாங்குனத மறந்துடுங்க..............இனிமே வர்ற காலங்கள்ல கடிதம் எழுதமாட்டோம்னு உறுதியா சொல்லிக்கிறோம் அதுக்கு பதிலா........பயபுள்ள என்னாது அது ஆங் Email அனுப்பறதா போதும்குழுல(பொதுக்குழு அல்ல!) முடிவு பண்ணி இருக்கோம்..........

இனிமே யாரும் சென்னைல இருக்க கீழ்ப்பாக்கத்த கேவலமா பேசாத வண்ணம்.........ஏற்கனவே மண்டகாஞ்சி இருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்காக தங்களோட மூளைய செக் பண்ணிக்க உதவும் பொருட்டு எல்லா மாவட்ட தலைநகரங்களிலும் மன(மூளை!) நல மருத்துவ மனைகள திறக்க இருக்கோம் ஹிஹி!


பெரியவங்க யாரும் இனி மருத்துவமனைக்கு வரவேணாம்........வந்தாலும் அங்க யாரும் இருக்க மாட்டாங்க என்பதை பொதுவில் சொல்லமுடியல என்பதால்.....மாசத்துக்கு ஒருதரம் ஊட்டுக்கே வந்து நீங்க கைல எவ்ளோ வச்சிகிரீங்கலோ அத வாங்கிப்போம்னு சொல்லிக்கிறோம்............

மறுபடியும் வாழ்க சொல்லுங்க ஒருதரம்............ரெண்டு தரம்.............அது அப்படிதான் இருக்கணும் சரியா...............

நம்ம குயந்தைங்களுக்கு Lap top தரப்போறோம் அதுக்காக சிடி எல்லாம் கேக்க கூடாது சரியா..............நெட் கணக்க்ஷனும், அத இயக்க மின்சாரமும் எங்கள கேட்டிங்கன்னா ஞாயம் இல்ல சரியா...............

கந்து வட்டின்னு இனி யாரும் சொல்ல முடியாது.............ஏன்னா நாங்களே கடைய எடுத்து நடத்தலாம்னு முடிவு பண்ணி இருக்கோம் சரியா.............ஏய் யாரு அங்க கை தட்டுறது ஓ நம்ம கட்சிகாரங்களா ஹிஹி!

அரிசி இலவசம் - ஆனா அது சாப்பிட முடியுமான்னு கேட்டிங்க அவ்ளோதான் நான் பொறுப்பு கெடயாது.............

அரசு அலுவலகங்களில் லஞ்சத்த ஒழிப்போம்...........ஆனா எப்பவும்போல நீங்க கொடுக்குற அன்பளிப்ப நிறுத்தக்கூடாது சரியா.................


இதெல்லாம் நாங்க பண்றதனால நீங்க எங்கள சராசரி அரசியல்வாதின்னு நெனச்சிடாதீங்க..................200 வருஷம் ஆண்டவனுங்களால பண்ண முடியாத அடிமைத்தனம் எனும் அரச ஆட்சிய எங்க காலத்துல கொண்டு வந்து சாதனா சேய்........சாதன படைச்சி இருக்கோம்...............இனி வரும் காலம் நம்ம மாநிலம் 4 பங்கா பிரிக்கப்படும் என்பதெல்லாம் உங்களுக்கு சொல்லித்தான் புரியணும்னு இல்ல ஹிஹி!

கொசுறு: நீல சாயம் வெளுத்து போச்சி டும் டும் டும் டும் வாளு போச்சி கத்தி வந்தது டும் டும் டும் டும்................
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

26 comments:

தமிழ் 007 said...

வடை...

டன்...டனா...டன்...

விக்கியுலகம் said...

@தமிழ் 007

வாங்க மாப்ள வாங்க!

தமிழ் 007 said...

இம்புட்டு தர்றீங்க சரி!

அப்படியே வாரத்துக்கு ஒரு "பாட்டிலும்" (புல்) சைடிஸ்யும் கொடுத்தா புண்ணியமா போகும்.

விக்கியுலகம் said...

@தமிழ் 007
"இம்புட்டு தர்றீங்க சரி!

அப்படியே வாரத்துக்கு ஒரு "பாட்டிலும்" (புல்) சைடிஸ்யும் கொடுத்தா புண்ணியமா போகும்"

>>>>>>>>>>>>>

என் ஊட்டு காசா ஹி ஹி குடுத்துட்டா போச்சி!

நிரூபன் said...

வணக்கம் சகோதரம், இலவசத்தின் மீதிருக்கும் நையாண்டி, கோபம், ஆக்ரோசம் முதலிய உணர்வுகளைப் பதிவில் கொட்டியிருக்கிறீர்கள்.
தூண்டிலைக் குடுத்து மீனைப் பிடிக்கிறமாதிரி- மிக்ஸி, கிறைண்டரைக் கொடுத்து மின்சாரத்தை மட்டும் கொடுக்காமல் விடுறாங்க..
எப்புடி நம்மாளுங்க. இது தான் அரசியல் சாணக்கியம்.

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

இலவசங்களின் மீது உங்களின் உணர்வுகளை வெளிபடுத்தி இருக்கிறீர்கள்..
நன்றி...

Pari T Moorthy said...

அப்படியாவது மக்கள் அவங்களுக்கு ஓட்டு போடுவாங்களானு பாக்குறாங்க....

வைகை said...

கிரைண்டர வாங்கிக்க மனைவி இல்லாதவங்களுக்கு என்ன பாஸ் தருவாங்க?

டக்கால்டி said...

இட்டிலிக்கு மாவு ஆட்டையிலே என்னையும் சேர்த்து ஆட்டிப்புட்டா

சி.பி.செந்தில்குமார் said...

தக்காளி.. எல்லாம் போச்சு.. மீண்டும் அய்யா தான் சி எம்.. மக்கள் மனசு மாறிட்டாங்க

டக்கால்டி said...

கிரைண்டர வாங்கிக்க மனைவி இல்லாதவங்களுக்கு என்ன பாஸ் தருவாங்க?

March 21, 2011 9:24 AM//

முதல்லையே அந்த 14th கேள்வி கேட்டுடீங்கன்னா 1 கோடி ரூபாய் வாங்கிட்டு இப்படியே ஓடி போயிடுவேன்...
இதுனால தான் தமிழ்நாட்டை பார்த்து வேர்ல்ட் நடுங்குது

விக்கியுலகம் said...

@நிரூபன்

"எப்புடி நம்மாளுங்க. இது தான் அரசியல் சாணக்கியம்"
>>>>>>

இதுக்கு பேரு சாணித்தனம்னும் சொல்லலாம் நண்பா ஹிஹி!

விக்கியுலகம் said...

@Pari T Moorthy

வருகைக்கு நன்றி என்னமோ போங்க!

விக்கியுலகம் said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

வருகைக்கு நன்றி என்னமோ போங்க!

விக்கியுலகம் said...

@வைகை

"கிரைண்டர வாங்கிக்க மனைவி இல்லாதவங்களுக்கு என்ன பாஸ் தருவாங்க?"

>>>>>>>>>

அதுக்கும் ஏற்பாடு பன்றாங்கலாம்யா ஹிஹி!

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

"தக்காளி.. எல்லாம் போச்சு.. மீண்டும் அய்யா தான் சி எம்.. மக்கள் மனசு மாறிட்டாங்க"

>>>>>>>>>>
எப்படியும் கும்மி அடிக்கத்தான் போறாங்க ஹிஹி!

விக்கியுலகம் said...

@டக்கால்டி

"இட்டிலிக்கு மாவு ஆட்டையிலே என்னையும் சேர்த்து ஆட்டிப்புட்டா"

>>>>>>>>>
அடப்பாவி அப்படியா சொல்லவேல்ல!

சங்கவி said...

இலவசம், இலவசம் ஓட்டு இலவசம்...

ரஹீம் கஸாலி said...

ஹி....ஹி...ஹி...

விக்கியுலகம் said...

@சங்கவி

குத்துங்க எசமான் குத்துங்க!

விக்கியுலகம் said...

@ரஹீம் கஸாலி

ஹி....ஹி...ஹி...

>>>>>>>>>>>>>

யோவ் ஏதாவது சொல்லுய்யா ஹிஹி!

Jayadev Das said...

உங்க மாதிரி கரெக்டா சிந்தனை பண்றவங்க ரொம்ப கம்மி. அதேசமயம், ஏதாவதொரு வழியில் இது மக்களை அடைந்து அவர்கள் திருந்தினால் நிச்சயம் இலவசத் திருடர்களிடமிருந்து தமிழகம் தப்பிக்கும். ம்ம்ம். அது எங்கே நடக்கப் போவுது.

விக்கியுலகம் said...

@Jayadev Das

வருகைக்கு நன்றி நண்பரே இல்லாததை தேடுவதே நம் பொழப்பா போச்சி ஹிஹி!

Speed Master said...

நலமா
வேலைவிசயமாக வெளியூரில் இருப்பதால் உங்கள் பக்கம் வரமுடியவில்லை
நம்ம பதிவு

பிரலபல பதிவரும் அவரின் ஃபலோயர்களும்
http://speedsays.blogspot.com/2011/03/blog-post_22.html

விக்கியுலகம் said...

@Speed Master

வருகைக்கு நன்றி நண்பா வேலை கிடைத்ததா......தெரிவிக்கவும்

Speed Master said...

//விக்கி உலகம் said...
@Speed Master

வருகைக்கு நன்றி நண்பா வேலை கிடைத்ததா......தெரிவிக்கவும்

not yet still looking
thanks for the care