Followers

Sunday, March 27, 2011

அதிமேதாவியா பெண்கள்(!?)

வணக்கம் நண்பர்களே..................சில நினைப்புகள் மீண்டதினால் இந்த பதிவு................நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன்........



கொஞ்ச கொஞ்சமாக தரை இறங்கும் விமானம் போல சராசரி மனநிலைக்கு வந்துகொண்டு இருக்கிறது என் மனம். இந்த நேரத்தில் என்னைப்பாதித்த தோழிகளைப்பற்றி கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என்று தோன்றியதின் விளைவே இந்தப்பதிவு.

என் சிறுவயது முதல் கடந்து வந்த பாதையில்(முட்கள் எனும் அனுபவங்களின் கோர்வைக்கு நன்றி) பல பெண்கள் என்னை மனதளவில் பாதித்துள்ளார்கள். அவர்களின் ஒரு பகுதி தொகுப்பு இந்தப் பதிவு.


அ. சித்ரா (ஹாக்கி சித்ரா):

எங்க கேங்குல இருந்த பசங்க எப்பவுமே ஒரு புனைபெயருடன் தான் சுத்துவோம். அதுவும் நமக்கு நண்பி ஆயிட்டா கேக்கவே வேணாம்!?. அவங்களுக்கு ஆளுக்கு ஒரு பட்டப்பேரு வச்சி ஓட்டுவோம்(பட்டப்பேர மட்டும்).

இவங்க சாதாரண ஆள் இல்லீங்க பயங்கர வேகமா ஹாக்கி விளையாடக்கூடிய பெண் சிறுத்தை(புலின்னு சொல்லப்படாதுள்ள!?). இவளுடைய மேட்சுக்கு மறக்காம லீவு போட்டுட்டாவது போயிடுவோம். இல்லன்னா வீட்டுக்கே வந்து அவளோட ஹாக்கி ஸ்டிக்கால மண்டயப்பொலந்திடுவா! அவ்ளோ பொறுமைசாளின்னா பாத்துக்கங்க. சும்மா சொல்லப்படாது இவளோட ரிவர்ஸ் ப்ளேக்கு நாங்க அடிமை(கூட்டாளிங்க கூட்டுத்தொகை 12).


ஆ. ஆனந்தி (கதை, கவிதைப்புயல்- ரீல் ஆனந்தி)

இவங்க கத சொல்ல ஆரம்பிச்சாங்கன்ன நம்ம டைரடக்கருங்க கெட்டாங்க போங்க. சீன் சீகுவன்செல்லாம் சொல்லுவா. அப்போ நமக்கிருந்த அறிவுக்கு இவ தான் எங்க கேங்குலையே பெரிய கவிப்பேரரசு. எவன் வந்து கேட்டாலும் அவன் ஆள மடக்கரத்துக்கு என்கந்து சுட்டு கொண்டு வருவா தெரியாது, சும்மா கவிதைய கேட்ட அந்தப்பய்யன்னுடைய ஆளு அப்பிடியே மயங்கி விழுந்துடுவான்னா பார்த்துக்கோங்க. யாரு சொன்னா கட்டடிக்கரதுல பசங்கதான் பெரிய ஆளுன்னு!?

இவ சூப்பரா ப்ளான் பண்ணிக்குடுப்பா, எப்படி வீட்டுல, காலேஜுல மாட்டிக்காம கட் அடிக்கறதுன்னு ஒரு புக்கே போடக்கொடிய தகுதி இவளுக்கு உண்டு.


இ. லக்ஷ்மி (வரைகலை நிபுணி- zoo லக்ஷ்மி)

இவங்க பெரிய வரைகலை நிபுனிங்க. எங்க ரெகார்டு புக்கு காலத்துல இருந்து எங்களுக்ககாவே சேவை செய்ய வந்தவுங்க. யார் எத சொல்லி வரையசொன்னாலும் சும்மா அரைமணில வரைஞ்சி அசத்திப்புடுவாங்க. இந்த அம்மணியாலதான் ஸ்கூல்ல விலங்கியல் பிரிவுல அதிக மார்க்கே வந்தது. கொஞ்சம் கூட அடுத்தவங்க மனச புண் படுத்த தெரியாத அப்பாவி. படிப்புல பயங்கர சுட்டி மற்றும் விளையாட்டுலயம் தான்.

மிச்சம்: இவங்க மூவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டுன்னா அது இந்த மூணு அறிவாளிகளும் காதல்ங்கிற அரக்கனால எங்கள விட்டு பறந்து போன பட்டாம்பூச்சிக்கள். உயிர் எனும் மிகப்பெரிய விஷயத்த ரொம்ப மலிவா நினச்சி தற்கொலைப்புரிந்துகொண்ட அதி மேதாவிகள். காலம் எனும் காலன் என்னைப்பற்றி என்ன நினைத்து கொண்டு இருக்கிறான் என்று தெரியவில்லை. எத்தன இழப்புகள தான் நான் தாங்குறது................. அவ்வளவு கொடியவனா நான்....................
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

13 comments:

தமிழ் 007 said...

டன்...டனா...டன்...

தமிழ் 007 said...

அடக் கடவுளே!

எனக்கு இந்த மாதிரி பெண் தோழி ஒருத்திய கூட நீ தரலையே?

(மாப்ள வாழ்ந்திருக்காருப்பா!)

பதிவுலகில் பாபு said...

உங்களுடைய இழப்புகளுக்கு வருந்துகிறேன் நண்பா... ரொம்பக் கஷ்டமாயிடுச்சு..

நிலாமகள் said...

காதலும் கல்யாணமும் அவர்களின் அதிமேதாவித்தனத்தைக் கூறு போட்டதோ .... ஆனாலும் தற்கொலை மடத்தனம்தான்... ஹ்ம்ம்ம் .....

செங்கோவி said...

வருந்துகிறேன் நண்பா!

டக்கால்டி said...

நண்பா சென்டிமென்ட்ல கண் கலங்க வெச்சுட்டீங்களே?

விக்கியுலகம் said...

@பதிவுலகில் பாபு

வருகைக்கு நன்றி மாப்ள

விக்கியுலகம் said...

@தமிழ் 007

வருகைக்கு நன்றி மாப்ள

விக்கியுலகம் said...

@டக்கால்டி

வருகைக்கு நன்றி மாப்ள

விக்கியுலகம் said...

@செங்கோவி
வருகைக்கு நன்றி மாப்ள

விக்கியுலகம் said...

@நிலாமகள்
வருகைக்கு நன்றி சகோ

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கண்கலங்க வெச்சுட்டீங்களே தல!

விக்கியுலகம் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

வருகைக்கு நன்றி மாப்ள