இந்தப்பதிவு......நம்ம பதிவுலகத்தில் இணைந்து கொண்டு இருக்கும் புதிய பதிவர்களுக்கு என்னோட வாழ்த்துக்கள சொல்லிக்கிட்டு......அப்படியே கொஞ்சம் புரிய வைக்க வேண்டிய விஷயங்களுக்குமான பதிவு இது.......(ஹிஹி!)...........
நண்பர்களே........இந்த பதிவுலகம் ஒரு காட்டாறு(மோட்டாரு அல்ல!) மாதிரி........அதனால நீங்கள் வந்த உடனே சேந்துக்கலாம்(அடிமை சிக்கிட்டான் ஹிஹி!)......ஆனா உங்க கருத்துக்கள திணி திணின்னு திணிக்கனும்..........அத தான் உண்மையில கருத்து திணிப்புன்னு சொல்லுவாங்க.........(அப்பாடி கருத்து சொல்லிட்டேன்!)
நாலு கூட்டாளிகள உருவாக்கிகங்க.........அப்பத்தான் கும்ம முடியும்......இந்த கும்மி மூலமா பலரோட வயித்தெரிச்சல கொட்டிக்கலாம்........அப்போ தான் கண்ணு மண்ணு தெரியாம உங்களால பதிவு போட முடியும்.......
அப்புறம் கமன்ட் ரொம்ப முக்கியம்....முடிஞ்ச வரைக்கும் பதிவுக்கு சம்பந்தமில்லாம கமன்ட் போடுங்க.......அதத்தான் இப்போ இருக்க நவீன மனுசங்க ஒத்துப்பாங்க..............என்னதான் உங்க கருத்த சொல்ல வர இடமா இருந்தாலும்....புதுசா பாத்த பிகருக்கிட்ட ஒப்பிக்கிறா மாதிரி ஒப்பிக்க கூடாது.......அத வச்சே உங்களுக்கு சூனியம் வெப்பாங்க.....(சிபி உன்ன சொல்லல!)
இப்போ என்னை பத்தி தெரிஞ்சிக்க வேண்டிய கட்டாயம் உங்களுக்கு வருது........பாருங்க...........உங்க பதிவுக்கு வந்து பாத்த உடனே ஏன் follower ஆகிடறேன் தெரியுமா.........ஏன்னா புத்சா ஒரு ஓட்டு... கூட கெடைக்காதா(மானம் கெட்ட பொழப்புன்னு சொல்லிப்பாங்க பெரியவங்க!) ........அப்படியே நாலு பேரு புத்சா வந்து நம்ம பதிவ பாக்க மாட்டாங்களான்னு ஒரு நப்பாசை.......
நீங்க என்னமோ உங்க பதிவ பாத்து impress ஆகி சேர்றேன்னு நெனசிடப்போறீங்க(அய்யோ அய்யோ!)..........அதே நேரம் நீங்க பிரதி உபகாரமா என் ப்ளோக்ல சேர்றது கட்டாயமாகுது.......ஆனா உங்களுக்கு ஏன் அது இன்னும் புரியல.........please note this points!.........நான் சரியாதான் பேசுறனா.......ரைட்டு.......
அப்புறம் நீங்க சட்டு புட்டுன்னு பெரியாளா வரணும்னா சிபின்னு ஒரு பய இருக்கான்........யாரு கொண்டு போய் அடிச்சாலும் தாங்குவான்...........அவன ஒரே கிழி..........கிழிச்சி பதிவு போடுங்க..........இல்லைன்னா இன்னொருத்தன் இருக்கான் பேரு மனோ.......இவன் பதிவு போடுறத விட கமண்ட்டு போடுறது பாவமா இருக்கும்!...........இவனையும் கிழிங்க..........அப்ப தான் ஊரே உங்கள கொண்டாடும்.........இந்த வழில நான் இல்ல.........ஏன்னா நானும் உங்கள போல ஜூனியர்........!
அப்புறம் இந்த கதை, கவிதை போடுங்க, நெறைய மொக்கை போடுங்க....தலைப்புக்கு சம்பந்தமே இல்லாம பதிவு போடணும்.....கடைசில ஏமாந்திங்கலான்னு சொல்லிக்கணும்(!)..........அப்பிடியே காப்பி அடிச்சி பதிவு போட்டீங்கன்னா............உங்க சொந்த மூலையில இருந்து சில கருத்துக்களயும் தெளிங்க........அப்போ தான் எல்லாருக்கும்.....நீங்க இருக்கறது தெரியும்........
சில பேரு சில விதம்..........பல பேரு பல விதம்...........அதனால நீங்க எந்த விதம்னு யோசிச்சிகங்க ...........இருக்குற பத்திரிகைங்க சைட்ட எல்லாம் நுனு விரல்ல இருக்கணும்.......அப்பத்தான்.......பல பதிவுகள் தேத்த முடியும்.......
நீங்க என்னதான் நல்லவரா இருந்தாலும் கெட்டவன்(நான் அவன் இல்லை!) கணக்கா கொஞ்சம் பதிவு போடணும்...அப்பத்தான் உங்களுக்கு விஷயம் புரிஞ்சிருக்குன்னு அர்த்தம் இல்லைன்னா கும்மிடுவாங்க.....
நீங்க என்னதான் நல்லவரா இருந்தாலும் கெட்டவன்(நான் அவன் இல்லை!) கணக்கா கொஞ்சம் பதிவு போடணும்...அப்பத்தான் உங்களுக்கு விஷயம் புரிஞ்சிருக்குன்னு அர்த்தம் இல்லைன்னா கும்மிடுவாங்க.....
கொசுறு; மன்சூ அடிசிகிச்சிபா அதான் சொல்லிபுட்டேன்....ஹிஹி!.......

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |