Followers

Tuesday, May 10, 2011

ரத்தக்கறை - (டைரி பேசுகிறது - பாகம் 5)

வணக்கம் நண்பர்களே...........டைரி பேசுகிறது......


எதிரி என்று ஒருவன் இல்லையேல் வாழ்கை சுவாரஸ்யம் இருக்காது என்பது அனுபவம் கொடுத்த பாடம்...........

சண்டை உக்கிரம் அடைந்த போது........அவர்கள் இறந்து கொண்டே அனுப்பி வைத்த தோட்டாக்கள் என் பின் மண்டையை தாக்கின...........

கிட்ட தட்ட சில நூறு அடிகள் உயரத்திலுருந்து கீழ் நோக்கி பாய்ந்து கொண்டு இருந்த வின்சில் இருந்து.............நிலை குத்திய பார்வையுடன் என் பயணம் சென்று கொண்டு இருந்தது...........

சில நொடிகள் என்ன நடந்தது நினைவில்லை..............

நினைவு வரும்போது..........

ஒரு மருத்துவர் என்னை நோக்கி பார்த்துக்கொண்டு இருந்தார்.......

பேச ட்ரை பண்ணாதீங்க.......

அட ஆண்டவா.........பேசத்தான் முடியலையே (இத எப்படி சொல்றது!)

ஒரு நாள் கழிந்தது..............

நீங்க இப்ப முன்னைக்கு பரவா இல்ல...........ஆனா உங்களால பழைய படி செயல்பட முடியாது......சாரி........

ஏன் முடியாது..........!

கொஞ்சம் நிமிர்ந்து உற்க்காந்தேன்...........ஏய் என்னாச்சி என் காலுக்கு.......என் வயிறு ஏன் இவ்ளோ பெருசா இருக்கு..........

அந்த நர்ஸ் என்னிடம் விளக்கினாள்..........


நீ பெரிய ஆளுதான்யா......அந்த நேரத்துலயும் எதிரிங்கள கொன்னு போட்டுட்டுட்டு விழுந்திருக்க.....இல்லன்ன உன்ன தூக்க 1 மணி நேரம் கழிச்சி வந்த மீட்பு படை கிட்ட உயிரோட கெடச்சி இருப்பியா என்றாள்...

அப்படியா என்று மெல்லிய குரலில் கேட்டேன்.....

நீ 6 மாதத்திற்க்கு மேலாக கோமா நிலையில இருந்திருக்க......உணவை உன் உடம்பு ஏத்துக்கல.........அதுனால வெறும் குளுகோஸ் மற்றும் மருந்துகள் தான் அதிகமா உன் உடம்புல யேத்தப்பட்டது.......அதனால தான் இப்படி..........உரிமையோடு அந்த அக்காள் விளக்கினாள்.......


என் உடல் 145 கிலோ இருக்கிறது என்று அந்த நர்ஸ் சொல்லும்போது உடைந்த கண்ணாடியின் சத்தம் என் இதயத்தில் கேட்டது...........67 கிலோ எடையில் சேர்ந்து 145 கிலோவில் மீண்டு இருக்கிறாய் ஹாஹாஹா.........சிரிப்பு இது மட்டுமாவது இருக்கே........ஓ சத்தம் போட்டு சிரிக்க முடியலையே(எலேய் உனக்கு இந்த நெலமையிலும் நக்கல் போகலையே ஹிஹி!)...........

இப்ப எப்படி இருக்கீங்க............அந்த டாக்டர் கேட்டார்.

நல்லா இருக்கேன்.....இன்னும் எவ்ளோ நாளு இப்படி இருக்கணும்.......எனக்கு ஒரு இடத்துல ரொம்ப நேரம் உக்காந்து இருக்கறது ரொம்ப கஷ்டமா இருக்கு டாக்டர்......என்னுடைய உண்மையான நிலவரத்த நீங்க சொல்வீங்கன்னு நம்புறேன்......என்னை நான் எப்போதும் ஏமாத்திக்க விரும்பல.....ப்ளீஸ் சொல்லுங்க......என் உடல் எப்போ சரி ஆகும்.....


உங்களுக்கு சில விஷயங்கள் சொல்றேன்......நீங்க ரொம்ப அதிர்ஷ்ட சாலி(எதிர்மறை!)........அதே நேரம் உங்களுக்கு இந்த உண்மைகள சொல்றது என் கடமை.........உங்களால ரொம்ப நேரம் ஒரு இடத்துல இருக்க முடியலன்னா......அந்த வீல் சேர்ல நீங்க கொஞ்ச தூரம் போய் வரலாம்.......இன்னும் உங்க தலைப்பகுதி காயம் ஆறல.......அங்க இருக்கும் நொறுங்கிய தோட்டாக்களின் பகுதிகள் எடுக்கப்படல.......அப்படி எடுக்கப்பட்டா......அது உங்க மூளைய பாதிக்கும் என்பதால் அறுவை சிகிச்சையில் முழுசா நீக்கப்படல......(உள்ள மூளை உண்மைல இருக்கோ டவுட்டு!)..............நீங்க நம்பிக்கையோட இருங்க நோ டென்ஷன்.......

உங்க நல்ல மனசுக்கு நன்றி.......பொதுவா யாரும் இந்த அளவுக்கு உண்மைகள சொல்ல மாட்டாங்கன்னு நெனைக்கிறேன்........நன்றி.........நான் எப்பவும் என் தைரியத்த விட்டதில்ல.........இப்பவும் விட மாட்டேன்........

வீல் சேரில் தானாக உட்கார முடியாதவனாக...........இரண்டு நாள் வரை அந்த தமக்கையின் உதவியுடன் உட்காரலானேன்.........அந்த அக்காள் எனக்காக அவள் வணங்கும் தெய்வத்தை அடிக்கடி வேண்டினாள்..........தம்பி நீயும் வேண்டிக்கோ......உனக்கு நல்லது நடக்கும் என்றாள்.......தெய்வம் என்ற ஒரு விஷயமே எப்போது ஒரு மனிதன்.......தனக்கு எந்தவித சொந்தமும், நட்பும் இல்லை என்று நினைக்கிறானோ அப்போதுதான் அவனுக்கு தோன்றும் ஒரு விஷயமாக எனக்கு தோன்றியது...........(இதில் குடும்ப உறுப்பினர்கள் ஏன் வரவில்லை வேண்டாமே.....அந்த சோகம் ஹிஹி!)

திமிராக நடந்த நடை ஏனோ அடிக்கடி ஞாபகம் வந்தது......தூக்க முடியாத அளவுக்கு கால்கள் பெருத்து இருந்ததை எண்ணி சிரித்துக்கொண்டேன்......

தம்பி..உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு...அந்த வயதான டாக்டர் சொன்னார்.......நீ வேனா பாரு ஒரு நாளு முன்னமாதிரி ஒடுவ......!...உன்னால முடியும்..எங்க முயற்சி பண்ணு பாக்கலாம்......என்றார்.

உங்க நம்பிக்கை நிறைஞ்ச வார்த்தை எனக்கு டானிக் போல இருக்கு......எழ முயற்சிக்கிறேன்.........ம் ம் ம் .........(தாயின் மணிக்கொடி....சொல்லுங்க ஜெய்ஹிந்த்!..பாடல் கேக்குதே!)...........

தொடரும்...........

கொசுறு: தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ் சிறு கதைகள் பேசி வாடிதுன்ப மிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக்கிழப்பருவம் யெய்தி கொடுங் கூற்றுக்கிரை எனப்பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப்போல நானும் இங்கு வீழ்வேன் என்று நினைத்தாயோ - நன்றி பாரதி..................படங்களுக்கு நன்றி Google.com

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

19 comments:

MANO நாஞ்சில் மனோ said...

தோட்டா....

MANO நாஞ்சில் மனோ said...

வெடி

MANO நாஞ்சில் மனோ said...

குண்டு...

MANO நாஞ்சில் மனோ said...

//உங்க நம்பிக்கை நிறைஞ்ச வார்த்தை எனக்கு டானிக் போல இருக்கு......எழ முயற்சிக்கிறேன்.........ம் ம் ம் .........(தாயின் மணிக்கொடி....சொல்லுங்க ஜெய்ஹிந்த்!..பாடல் கேக்குதே!)...........//

ஜெயஹிந்த்....

MANO நாஞ்சில் மனோ said...

//நீ பெரிய ஆளுதான்யா......அந்த நேரத்துலயும் எதிரிங்கள கொன்னு போட்டுட்டுட்டு விழுந்திருக்க.....இல்லன்ன உன்ன தூக்க 1 மணி நேரம் கழிச்சி வந்த மீட்பு படை கிட்ட உயிரோட கெடச்சி இருப்பியா என்றாள்...//

நீ என் இனமடா தம்பி, "நம்மை கொல்ல வர்றவனை கொன்னுட்டுதான் நாம சாகணும்" இது எங்கள் நண்பர்களின் தாரக மந்திரம்....
ஒரு ராயல் சல்யூட் மக்கா...

# கவிதை வீதி # சௌந்தர் said...

பாரதியில் வரிகள் போல் எப்போதும் கம்பீரமாய் இருக்க என் வாழ்த்துக்கள்..

# கவிதை வீதி # சௌந்தர் said...

மிக தைரியம் வேண்டும் அத்தருணங்களை கடக்க...

கந்தசாமி. said...

அண்ணே படிக்கும் போதே உடம்பு சிலிர்க்கிறது உங்கள் வீரத்தையும் தைரியத்தையும் எண்ணி...

நா.மணிவண்ணன் said...

அண்ணே உண்மைலே சிலிர்க்குது ,ஏதோ காமெடிக்கு சொல்றான்னு நெனக்காதீங்க

FOOD said...

வார்த்தைகளால் உங்கள் காயங்களுக்கு மருந்திட முடியாது.வாழ்த்துக்கள் உங்கள் வலிமைக்கு.

ஜீ... said...

ச்சே! சான்சே இல்ல! என்ன சொல்றதுன்னே தெரியல!

ரஹீம் கஸாலி said...

ok....raittu

செங்கோவி said...

கலக்கல் விக்கி..இந்தத் தொடரில் நக்கலைத் தவிர்க்கலாமே..

சி.பி.செந்தில்குமார் said...

செங்கோவி அண்ணன் சொல்வதை நான் ஆமோதிக்கிறேன். இந்த பதிவில் கும்மியை தவிர்க்கவும்

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நானும் இங்கு வீழ்வேன் என்று நினைத்தாயோ ---
மாப்ள நம்ம யானை இல்லை குதிரை..

கக்கு - மாணிக்கம் said...

ஒரு ராயல் சல்யூட் எப்போதுமே விக்கி.

Chitra said...

தம்பி..உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு...அந்த வயதான டாக்டர் சொன்னார்.......நீ வேனா பாரு ஒரு நாளு முன்னமாதிரி ஒடுவ......!...உன்னால முடியும்..எங்க முயற்சி பண்ணு பாக்கலாம்......என்றார்.

உங்க நம்பிக்கை நிறைஞ்ச வார்த்தை எனக்கு டானிக் போல இருக்கு......எழ முயற்சிக்கிறேன்.........ம் ம் ம் .........(தாயின் மணிக்கொடி....சொல்லுங்க ஜெய்ஹிந்த்!..பாடல் கேக்குதே!).........


......ஜெய்ஹிந்த்! Salute!!!!

NKS.ஹாஜா மைதீன் said...

முதல்ல குத்திட்டேன்...ஓட்டைத்தான் சொல்றேன்..அப்புறமா படிச்சுக்கிறேன்.........மாம்ஸ்...

நிரூபன் said...

சகோ இந்த இடுகையினைப் படிக்கையில் மனதினுள் ஒரு இனம் புரியாத வலி ஏற்படுகிறது,

ஆனாலும், இந்த அவலங்கள், குண்டடிப்பட்ட காயங்களுக்குப் பின்னரான உங்களின் தன்னம்பிக்கை வியப்பாக இருக்கிறது சகோ. இது எங்களைப் போன்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும்.