ரத்தக்கறை (டைரி பேசுகிறது - பாகம் 1)
ரத்தக்கறை -(டைரி பேசுகிறது - பாகம் 2)
ரத்தக்கறை - (டைரி பேசுகிறது - பாகம் 3)
ரத்தக்கறை - (டைரி பேசுகிறது - பாகம் 4)
ரத்தக்கறை - (டைரி பேசுகிறது - பாகம் 5)
ரத்தக்கறை - (டைரி பேசுகிறது - பாகம் 6)
அக்காள் ஏன் அறைந்தால்.....என்பதை கேட்கவில்லை.....(அவளே பேசினாள்!)
ரத்தக்கறை -(டைரி பேசுகிறது - பாகம் 2)
ரத்தக்கறை - (டைரி பேசுகிறது - பாகம் 3)
ரத்தக்கறை - (டைரி பேசுகிறது - பாகம் 4)
ரத்தக்கறை - (டைரி பேசுகிறது - பாகம் 5)
ரத்தக்கறை - (டைரி பேசுகிறது - பாகம் 6)
அக்காள் ஏன் அறைந்தால்.....என்பதை கேட்கவில்லை.....(அவளே பேசினாள்!)
அவராக தேடி வரட்டும்........நீ ஏன் அங்க போய் அவர அவமானப்படுத்துன.....?
தப்புத்தான் மன்னிச்சிடு...........
அவள் எப்படி மிகப்பெரிய விஷயங்களை கூட மன்னித்து விடுகிறாள்.....புரியவில்லை.......வாழ்கை எடுத்துக்கொள்ளும் மனத்திற்கு ஏற்றவாறு அமைந்து விட்டால் நன்றாக இருந்திருக்குமே......
நான் எதிர் பார்த்த மாதிரியே......மாலையில் மாமா வந்து மன்னிப்பு கேட்டு விட்டார்....
(கொஞ்ச காலம் கழித்து......ஓரளவு குணம் ஆகி தகுதி பெற மீண்டும் என் சேவை மையத்துக்கு சென்றேன்.......அங்கே!)
என்ன நண்பா எப்படி இருக்க.........
இன்னைக்கு வர சொல்லி இருந்தாங்க.......அதான் வந்தேன்....
(அதிகாரி கூப்பிட்டார்.....)
நான் உன்னை பார்த்து பெருமைப்படறேன்யா.........
பரவா இல்லைங்க......இது நான் விரும்பி ஏற்கும் பணி......
என்னை மன்னிச்சிடு..........
ஏன் சார்..........
உன்னோட உடல் தகுதி அறிக்கை வந்துச்சி.....அதுல நீ தகுதி பெறவில்லை......
(அப்படியே கண்ணு கலங்கியது எனக்கு!)
என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க......கடந்த ஒரு வருசமா உடம்ப பின்னி எடுத்து ரெடி பண்ணினேனே........அதுவும் ராடு எடுத்த எடமெல்லாம் வலி தாங்க முடியாம இருந்தப்போ கூட என் கூட இருந்து இறந்து போய் என்னை காப்பதுன அந்த முகங்களின் நினைவு மட்டும் தானே எனக்கு நினைவு வந்துது....இப்போ நீங்க இப்படி சொல்லிட்டா எப்படி......
(மீண்டும் அந்த மருத்தவரை அணுகினேன்.....அவர் சொன்னது.....)
என்னை என்ன செய்ய சொல்றே.....உன்னோட விஷயத்துல எதிர்காலத்துல என்னா வேணா நடக்கலாம்.....மூளை பாதிப்பு ஏற்படலாம்.....அதன் மூலமா நரம்பு மண்டலம் பாதிக்கப்படலாம்.......உடல் எடை ஒரே நிலையில் இருக்காது.....அதிகப்படியா ஏறும்.......திடீர்னு இறங்கவும் வாய்ப்பு இருக்கு......உன்கிட்ட பலமா இருக்கறது இதயம் மட்டும்தான்......இப்போ சொல்லு!
சோகம் தோய்ந்த முகத்துடன் திரும்பி நடக்கலானேன்......
தம்பி ஒன்னு செய்யுறேன்......உங்களுக்கு இந்த முன்னாள் ராணுவத்தினர் பத்திரம் கிடைக்கும்......அதை வச்சி அரசாங்கத்துல....எழுத்தர் மற்றும் பல பணில வாய்ப்பு கிடைக்கும்...........
இல்லங்க......நான் இங்க சேரும்போது சலுகைக்காக சேரலைங்க......எனக்கு சின்ன வயசுல இருந்து ஆர்வம்.....இப்போ நீங்க சொல்ற வேலையில போய் உக்காந்து கிட்டு.......என் கொள்கைய காத்துல பறக்க விட்ட கோழையாகி போயிடுவேனுங்க......வேண்டாமுங்க......நான் பாத்துக்கறேன்........
(வீட்டில் நுழைந்தேன்.......)
என்னடா என்ன ஆச்சி...........அது வந்து இன்னும் கொஞ்ச நாள் ஆகும்னு நெனைக்கிறேன்.........
சரி அது பாட்டு நடக்கட்டும்.......அடுத்து என்ன பண்றதா இருக்க.......
அதான் தெரியல..........
ஒரு வேலையில போய் உக்காரு......நெறய வரன் வருது....நல்ல பொண்ணா பாக்க வேணாமா.........
இல்லக்கா எனக்கு கல்யாணம் பண்ணிக்கற எண்ணம் இல்ல........என்ன விட்ரு.........
இத தான்யா எல்லாரும் சொல்லுவாங்க......வீட்ல இருக்க பெரியவங்க அப்படியே விட்ற முடியுமா...............
இல்லக்கா எனக்கு கல்யாணம் பண்ணிக்கற எண்ணம் இல்ல........என்ன விட்ரு.........
இத தான்யா எல்லாரும் சொல்லுவாங்க......வீட்ல இருக்க பெரியவங்க அப்படியே விட்ற முடியுமா...............
அப்படியில்ல.........இன்னைக்கு என் Medical ரிப்போர்ட் வந்துது......அதுல பல விஷயங்கள் என் எதிர்காலத்துக்கு எதிரா இருக்கு என்ன பண்றது........அப்புறம் அந்த டாக்டரையும் சந்திச்சி கேட்டேன்......(அவர் சொல்லிய விஷயங்களை...சொல்லி முடித்தேன்!)...........
அத விடுடா..........நாளைக்கு பொண்ணு பாக்க போறோம்............
??
தொடரும்...........
கொசுறு: ஒரு மனிதனின் (வாழ்வில் விழுந்த)அடிகளின் தொடர்ச்சியே இந்த தொடர்.....இந்த தொடர் மூலம்.....தோல்விகள் வெற்றிக்கான தொடக்கமே என்பதை உணர்த்தவே பதிவிடுகிறேன்...........

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
21 comments:
பய புள்ள இப்பவெல்லாம் புரியற மாதிரி பதிவு போட ஆரம்பிச்சுட்டான்
>>உன்னோட உடல் தகுதி அறிக்கை வந்துச்சி.....அதுல நீ தகுதி பெறவில்லை......
sari சரி விட்ரா.. நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம்?
உங்கள் மன உறுதி பிரமிக்க வைக்கிறது. அவர்கள் திருப்பி அனுப்பியது வருத்தமாக உள்ளது..தொடர்ந்து சொல்லுங்கள்.
தக்காளி..கொஞ்ச நாளா ப்ளாக் ஒப்பன் ஆகாம பதிவு படிக்கல.. என்னையா ஒரே ரத்த வாடையா இருக்கு?
சி.பி.செந்தில்குமார் said...
>>உன்னோட உடல் தகுதி அறிக்கை வந்துச்சி.....அதுல நீ தகுதி பெறவில்லை......
sari சரி விட்ரா.. நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம்?//
தக்காளிக்கு கவலையே அதான் பாஸ்!
சி.பி.செந்தில்குமார் said...
பய புள்ள இப்பவெல்லாம் புரியற மாதிரி பதிவு போட ஆரம்பிச்சுட்டான்//
அது எப்பிடி பாஸ்?. பதிவ படிச்ச மாதிரியே கமென்ட் போடறிங்க?
இப்போ ஒட்டு மட்டும் தான் பாஸ்..கொஞ்ச நேரத்தில் முக்கிய பரீட்சை ஒன்று..முடித்து விட்டு வந்து மிச்சம் பார்க்கிறேன் ஹிஹி
நல்லா போகுது, ரொம்ப ஆச்சர்யமாவும் இருக்கு....!
ம்ம்ம்...சொல்ல மறந்துட்டேன்....தமிழ்மணம் ஏழாவது ஹி...ஹி...ஹி.... நாந்தாம்லேய்
மாம்ஸ்...தொடர் கதை செம டாப்பு டக்கர். கதையை நீங்க டீல் பண்ற விதம் செம கலக்கல்.
ரொம்ப நாளாக நான் மிகவும் எதிர்பார்த்த பதிவு.மிக்க நன்றி.
வலிகள் நிறைந்த பதிவு. உங்க்ள் மன வலிமைக்கு பாராட்டுக்கள்.
வருத்தமாகவும் இருக்கிறது, நீங்கள் கடந்து வந்த பாதைகள் பற்றி கேள்வியுறும்போது. எனினும், இளைய சமுதாயத்திற்கு, ஊக்கம் தரும்.
அப்படியில்ல.........இன்னைக்கு என் Medical ரிப்போர்ட் வந்துது......அதுல பல விஷயங்கள் என் எதிர்காலத்துக்கு எதிரா இருக்கு என்ன பண்றது........அப்புறம் அந்த டாக்டரையும் சந்திச்சி கேட்டேன்......(அவர் சொல்லிய விஷயங்களை...சொல்லி முடித்தேன்!)...........
அத விடுடா..........நாளைக்கு பொண்ணு பாக்க போறோம்............///
யோவ் என்னய்யா ரொம்ப நீட்டா கதை சொல்லிக்கிட்டு இருந்தே ! திடீருன்னு வேறபக்கம் போய்ட்டே?
உள்ளேன் மாம்ஸ்...
இல்லங்க......நான் இங்க சேரும்போது சலுகைக்காக சேரலைங்க......எனக்கு சின்ன வயசுல இருந்து ஆர்வம்.....இப்போ நீங்க சொல்ற வேலையில போய் உக்காந்து கிட்டு.......என் கொள்கைய காத்துல பறக்க விட்ட கோழையாகி போயிடுவேனுங்க......வேண்டாமுங்க......நான் பாத்துக்கறேன்........//
உங்களின் கடமை உணர்ச்சிக்கும், தேசப் பற்றுக்கும் சான்றாய் இவ் வரிகள் அமைந்து கொள்கின்றன.
இப் பதிவில் சோகம் இழையோடிக் காணப்பட்டாலும், நீங்கள் பதிவை நகர்த்தும் விதம், அடுத்த பதிவினைப் படிக்க வேண்டும் என்கின்ற ஆவலைத் தூண்டுகிறது.
அசத்தல் மாம்ஸ்!
இன்னும் கொஞ்சம் பெரிசா போடு மாப்ள சுவாரஸ்யத்தை அடக்க முடியல
நல்ல சுவாரஸ்யமா இருக்கு சார்....!!!
தோல்விகள் வெற்றிக்கான தொடக்கமே என்பதை உணர்த்தவே பதிவிடுகிறேன்...........
:)
ஒருவருக்கு பல முகம்
=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
USB செல்லும் பாதை
http://speedsays.blogspot.com/2011/05/usb.html
Post a Comment