வணக்கம் நண்பர்களே........
இந்த விஷயத்தை பற்றி பல நாள் சிந்தித்து இருக்கிறேன்........இருந்தாலும் தற்போது பாதிக்கப்பட்டதால்(!) பகிர்கிறேன்.......
வெளிநாட்டில் வேலை நிமித்தம் இருக்கும் பல இந்தியர்கள் தங்கள் குடும்பத்துக்கு எவ்வாறு பணம் அனுப்புகிறார்கள் என்ற விஷயம் பற்றி அலசவே இந்த பதிவு...........
பொதுவாக வங்கி மூலமாக இந்திய வங்கிகளுக்கு அனுப்பும் முறைதான் சிறந்தது என்று நண்பர் அடிக்கடி கூறுவார்...........ஆனால், அந்த முறை பண இழப்பையும் நேர விரயத்தையும் கொண்டு இருக்கிறது என்பதால் நான் "மேல்நாட்டு Union நிறுவனம்" மூலமே அனுப்பி வந்தேன்............
அதாவது ஒரு முறை அனுப்ப $1000 - $ 20 (கமிஷன்!) இதற்க்கு மேற்ப்பட்ட பணத்துக்கு மேலும் $ 5 இலேருந்து $ 10 பெறப்படும்...........
அதே நேரத்தில் நாம் அனுப்பிய பணத்துக்கு ஒரு கோடு நம்பர் கொடுப்பார்கள்......அதனை இந்தியாவில் இருக்கும் நம் உறவுக்கு சொல்லி விட்டால்.........அவர்கள் அந்த நிறுவனம் இயங்கும் இடத்துக்கு சென்று பெற்றுக்கொள்ள முடியும்..........இது வெறும் 30 நிமிட இடைவெளியில் கிடைத்து விடும்.......
இதுவே வங்கிகள் மூலம் அனுப்பும் முறை மூலம் சிறிது அதிகமான பணமும் மற்றும் 1 நாள் கழித்தும் சென்று சேரும்..........இந்த முறையினால் நான் எப்போதும் முதல் முறையின் மூலமே அனுப்பி விடுவேன்...........
தற்போது ரூ 49,999 /- வரை மட்டுமே உடனடியாக பெற முடியும்......இந்தியாவில் இருக்கும் உறவுகள்.......இதற்க்கு மேல் அனுப்பி இருந்தால்......"Union" அந்தப்பணத்தை செக்காக சம்பந்தப்பட்டவரின் வங்கிக்கு எழுதி கொடுத்துவிடுகிறது.....பின்பு அந்த வங்கி அதனை உரியவர்களுக்கு அளிக்கிறது.......
இதில் என் சம்பந்தப்பட்ட விஷயம் என்னவெனில்.......
எனக்கு இதில் பணம் அனுப்பிய பிறகு இடைப்பட்ட நாட்கள் 3 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது.......கேட்டால் அந்த பணம் எந்த முறையில் அனுப்பப்பட்டது......அனுப்பியவரின் முழு விவரம் தெரிவித்தும்..........பயனில்லாமல் அனுப்பியவரின் Contract விவரங்களை கேட்டதாக வீட்டில் சொன்னார்கள்.......
நான் அந்த பொறுப்பான(!)..........அதிகாரியிடம் விசாரித்த போது.......கொஞ்சம் கடிந்து கொண்டு பேச ஆரம்பித்தார்.......ஆரம்பமே அமக்களமாக இருந்தது......
சார்...........உங்களுக்கு பதில் சொல்லத்தான் நாங்க இருக்கோமா...எங்களுக்கு வேற வேலையில்லையா......
அப்படியில்லைங்க நான் எப்பவும் "Union" மூலமாத்தான் அனுப்புவேன்.......ஆனா அவங்க எங்கிட்ட சொல்லல.... அதனால் கொஞ்சம் அதிகமா அனுப்புனா வங்கி கமிஷன் பணம் குறையுமேன்னு அனுப்பிட்டேன்........கொஞ்சம் கொடுத்து விட்டுடுங்க.......
அதெல்லாம் முடியாதுங்க.......அந்த பணத்துக்கான சம்பந்தப்பட்ட குறிப்புகள் கொடுத்திருக்காங்க......பாக்கறேன்.....இப்போ முடியாது......நாளைக்கு பாப்போம்....
இல்லங்க ஏற்கனவே மூணு நாளாயிடுச்சி!........எனக்கு உங்க பேங்குல 6 வருசமா அக்கவுன்ட் இருக்கு.......
சரி அதுக்கு என்ன.......
வந்து......
நான் சொல்றது புரியலையா......Computer வேல செய்யல....என்ன பண்ண சொல்றீங்க......
தொடரும்......
கொசுறு: நடந்தவைகளை விட தங்களுக்கு தெரிந்தவைகளை பகிரலாமே......நட்புகளே.....உங்களை அழைக்கிறேன்.....

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
38 comments:
முதல் பணம்....
இதைபற்றி நானும் ஒரு பதிவு போடப்போறேன், எனக்கு நடந்தவை பற்றி....
@MANO நாஞ்சில் மனோ
போடும்யா....நாலு பேருக்கு உபயோகமா இருக்கும்ல!
பேங்க் வேலை செய்வோர்கள் எல்லாம் தங்களால்தான் இந்த நாட்டின் பொருளாதாரமே சிறப்பாக இருக்கிறதென்று மமதை புடித்தவர்கள் ,இது போல் அனுபவம் எனக்கும் உண்டு
@நா.மணிவண்ணன்
வருகைக்கு நன்றி மாப்ள!....இதுக்கு என்ன தான் சரியான முறை....ஆட்சில தப்பு பண்ணா மாத்திபுடுறோம்......இந்த மாதிரி ஆளுங்கள என்ன பண்றது..!
விழிப்புணர்வு பதிவு
விழிப்புணர்வு பதிவு
பேச வேண்டிய விஷயம்தான். எல்லா அலுவலகங்களிலும் சிடு மூஞ்சிகளும் உண்டு, சிரிப்புடன் உதவுபவர்களும் உண்டு.
@FOOD
தலைவரே வருகைக்கு நன்றி!
@ஆர்.கே.சதீஷ்குமார்
வருகைக்கு நன்றி நண்பா!
ரைட்டு
"மேல்நாட்டு Union நிறுவனம்" மூலமே அனுப்பி வந்தேன்............//
ஆகா..என்ன ஒரு தமிழ்ப் பற்று..
Western Union...
அரங்கினுள் இப்போது தான் வந்திருக்கிறேன் நடுவர் அவர்களே!
@நிரூபன்
வாங்க மாப்ள!
பணம் செலுத்தும் நிலையத்தில் உள்ள ஒரு சில அதிகாரிகளின் விஷமத்தனப் போக்குத் தான் இது,
மக்களுக்கான சேவை என்று கூலி வாங்கும் இவர்கள் உரிய நேரத்தில், உரிய முறையில் பணத்தினை வழங்காமல் விடுவது, தரமான சேவை வழங்காமல் அலைக்கழிப்பது முதலியவை விசனத்திற்குரிய செயல்கள்.
@நிரூபன்
நாட்டு மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் நண்பர்கள்......தங்கள் உழைப்பின் பலனை மாதம் முடியும் முன்னே கிடைக்கபெறும் நண்பர்கள் ஏன்...வாழ்கையை risk எடுத்து வாழும் மனிதர்களின் உள்ளங்களை புண் படுத்துகிறார்கள் நண்பா!
அந்த அதிகாரி கட்டிங் எதிர்பார்க்கிறார் போலும்!
@ரம்மி
லஞ்சம் கொல்லப்படவேண்டிய கிருமி நண்பா!
பொறுத்தது போதும் , இனி பொங்கி எழுவோம் . . already விக்கி முந்தைய பதிவில் பொங்கி விட்டார் . .
விக்கி மச்சி , அப்படியே ரெண்டு பொங்கல் , வடை சொல்லேன் . .
அப்புறம் , விக்கி மச்சி சாப்பிட்டியா? அங்க வேற என்ன விஷேசம்?
அது எப்படி ஒரு நாளைக்கு மூணு பதிவு போடுற? எனக்கும் கொஞ்சம் சொல்லேன் . . .
///@ரம்மி said...
அந்த அதிகாரி கட்டிங் எதிர்பார்க்கிறார் போலும்! ///
விக்கி பாரு , சார் எவ்வளவு தெளிவ சொல்லுறாரு . கேட்டு தெரிஞ்சுக்கோ . .
இனிமேவாவது அந்த அதிகாரிக்கு டாஸ்மாக் ல ஒரு கட்டிங் சொல்லு ,
அப்படியே எனக்கும்
மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன் . .
ஹி ஹி . . .
யோவ் vicky எங்கைய போன? அது என்ன நான் கமெண்ட் போட்ட மட்டும் பத்தி கமெண்ட் போடா மாடின்கிற?
ஒரு வேலை அடுத்த பதிவு போடா போயிட்டிய?
ohh my god . . .
அதுக்குள்ளே அடுத்த பதிவா ?
கண்ணா கட்டுது. . .
vikki enakku thara vendiya panaththai eppa tharuva.
தக்காளி உருப்படியா பதிவு போட ஆரம்பிச்சுட்டானே.. எப்படி கும்மரது?
தலைவா எனக்கு நல்லாவே புரிந்தது நன்றி
நான் சொல்றது புரியலையா......Computer வேல செய்யல....என்ன பண்ண சொல்றீங்க......///////////////////
அட புரியாத ஆளா இருக்கியே அந்த கம்ப்யுடர் மேல அஞ்சோ பத்தோ வச்சா எப்படி வேலை செய்யும் தெரியுமா?
//சார்...........உங்களுக்கு பதில் சொல்லத்தான் நாங்க இருக்கோமா...எங்களுக்கு வேற வேலையில்லையா.....//
கஸ்டமருக்கு பதில் சொல்றத விட என்ன பெரிய கழட்டுற வேலை இருக்காம் இவருக்கு. உங்களை போல NRD பணம் மூலம் தான் இங்கு பெரும்பாலான வங்கிகள் லாபகரமாக ஓடிகொண்டிருக்கு என்பதை மறந்து விட்டார் போலும் ஞாபக படுத்தவும்.
வங்கி ஊழியரின் அணுகுமுறை - - - ஆஹா ....ஓஹோ...... கொடுமை!
வங்கி ஊழியரின் பதில்கள்! சூப்பர் மாம்ஸ்! நான் இப்பிடி கேள்விப்பட்டதே இல்ல! :-)
நேற்று மதியத்திற்கு மேல் சில வேலையின் காரணமாக வெளியூர் சென்றுவிட்டு இன்று மாலை தான் திரும்பினேன். இன்றைய என் பதிவைக்கூட என் நண்பனிடம் என் கடவுச்சொல் கொடுத்து வெளியிட சொன்னேன். இப்போது வந்து பார்த்தால் நேற்றைய என்பதிவுக்கு 22/29 என்று 7 மைனஸ் வோட்டு....இன்றைய என் பதிவிற்கு 8/14 என்று 6 மைனஸ் வோட்டு...தக்காளி உனக்கு ஒரு வோட்டுக்கே இப்படி கேள்வி கேட்கறே....விடுய்யா...விடுயா....நம்மெல்லாம் பிரபலம் ஆகிட்டோம்.
விழிப்புணர்வு பதிவு நண்பா!
உங்களை போலவே எனக்கும் அனுபவம் உண்டு, பாவி பயல் bank account நம்பரை கொடுத்தா நம்பர மாறி போட்டுட்டான்...
அவங்க அமெரிக்க ஜனாதிபதி ரேஞ்சுக்குல்ல பேசுவாங்க..நானும் பட்டிருக்கேன்..அவ்வ்.
நமக்கு ஊழியம் செய்யதானே அவர்கள். நிறைய அரசு ஊழியர்கள் இதை உணர்வதே இல்லை.
இதையும் படியுங்கதிரையுலகம் மிரளும் அளவுக்கு கலைஞரின் புதிய படம்
@♔ℜockzs ℜajesℌ♔™
கருத்துகளுக்கு நன்றி மாப்ள......நீ இருக்கும் போது........எனக்கென்ன கவலை சொல்லு!
@சி.பி.செந்தில்குமார்
"சி.பி.செந்தில்குமார் said...
தக்காளி உருப்படியா பதிவு போட ஆரம்பிச்சுட்டானே.. எப்படி கும்மரது?"
>>>>>>>>>>>>>>
டிஷ்யூம்.......இப்படித்தான் ஹிஹி!
@தமிழ்வாசி - Prakash
sollattaa vendaamaa hehe!
@! ❤ பனித்துளி சங்கர் ❤ !
"! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...
தலைவா எனக்கு நல்லாவே புரிந்தது நன்றி"
>>>>>>>>>>
வருகைக்கு நன்றி நண்பா!
Post a Comment