வணக்கம் நண்பர்களே..........
பணம் அனுப்புவது எப்படி - விவாத மேடை! - முதல் பாகம் படிக்க!
நேற்று பகின்ற பதிவின் தொடர்ச்சி.............
அந்த நண்பர் அவ்வாறு சொன்னவுடன்.........நன்றி நண்பரே என்று போனை என் மனைவியிடம் கொடுக்க சொல்லிவிட்டேன்.........
என் மனைவிடம்......அந்த வங்கியின் மேனேஜர் போன் நம்பரை கேட்டு வாங்க சொன்னேன்..........அவர் இன்று விடுமுறையில் இருப்பதாகவும்..........அவரின் பர்சனல் செல் போன் நம்பர் தர இயலாது என்றும் சொல்லி விட்டனர்...........
என் மனைவியிடம் சரி நாளைக்கு போய் பாரு.........நல்லது நடக்கும் என்றேன்!......
உடனே என் நண்பனுக்கு போன் செய்து..........(அவன் அந்த ஏரியாவில் வசிக்கிறான்!)
மாப்ள அந்த பேங்க் மானேஜர் நம்பர் கொடு என்று கேட்டேன்.......
டேய் நம்ம சுந்தர் தான் மேனேஜர்..........இரு தாரேன் என்று கொடுத்தான்......
போன் அடித்தது............
ஹல்லோ யாரு..........
அய்யா வணக்கமுங்க.........என் பேரு குமாருங்க...........
சரி.......
நான் வெளிநாட்டுல இருந்து....அனுப்பிய பணம் ரூவா 50,000 மேலங்கரதால.......உங்க பேங்குல மூணுநாள கொடுக்காம இழுத்தடிக்கறாங்க......தயவு செய்ஞ்சி கொடுக்க சொல்லுங்கய்யா......எங்க வீட்ல அந்த பணத்த நம்பி நெறைய வேலைகள் நிக்குதுங்க............என் மனைவி மூணு நாளா அலைய வேண்டியதா இருக்குங்க......
சார்......தப்பா எடுத்துக்காதீங்க........நான் இன்னிக்கி லீவு......நாளைக்கு போய் விசாரிக்கறேன்..........
அய்யா நீங்க தப்பா எடுத்துக்காதீங்க.......நாளைக்கு சனிக்கிழமைங்க..........
ஓ..........சரி திங்க கிழம பாக்கறேன்..........உங்க மனைவிய தகுந்த ஆதாரங்க.....கொண்டு வர சொல்லுங்க......நான் கொடுக்க சொல்றேன்......நாங்க அரசு அலுவலருங்க.....எங்களால ரூல்செல்லாம் மீற முடியாதுங்க..........
@#@# எலேய் நக்கலு..........என்னை ஞாபகம் இல்லையோ......6 வருசத்துக்கு முன்னாடி உங்க பேங்கு திறந்து ரெண்டு மாசத்துக்கு காத்து வாங்கிட்டு இருந்துது....அப்போ சமுதாயக்கூடத்துல நடந்த கூட்டத்துல..........
"அய்யா நான் இங்க வேலைக்கு இப்போ தான் சேந்து இருக்கேன்......இன்னும் 2 அக்கவுன்ட்டு தாண்டல......அதனால பேங்குக்கும் எனக்கும் கெட்ட பேரு...........முடிஞ்ச வரை உங்க அக்கவுன்ட்ட இங்க வைங்க........நான் எல்லாம் உதவியும் செய்யிறேன்னு சொன்னது .......ஞாபகம் இருக்கா............"
ஓ(ஊ!)........குமார்..........
நானும்.......நீங்க அரசு அதிகாரியா இருந்தும்......இந்த அளவுக்கு பொறுமையா உங்க பேங்குல சேர சொல்லி கேக்கறதால........நாளைக்கே எங்க ஆளுங்க சேருவோம்யா.......கவலைப்படாதீரும் அதே நேரத்துல.......நீரும் சொன்ன படி மக்களுக்கு உதவியா இரும்யா..........என்று சொல்லி 27 அக்கவுன்ட ஒரே நாள்ல நம்ம ஆளுங்க கிட்ட பேசி ஓபன் பண்ண வச்ச முட்டாபயடா நானு...........
குமார் தப்பா எடுத்துக்காதீங்க........நான் இப்போ விசாரிக்கறேன்..........10 நிமிஷம் கழிச்சி கூப்பிடுங்க...........
(சிறிது நேரம் கழித்து கூப்பிட்ட போது)
மன்னிக்கணும்.......உங்க செக்க தொலசிட்டாங்கலாம் தேடிட்டு இருக்காங்க.....கண்டிப்பா நாளைக்கு பணம் கொடுக்க செய்யறேன்..........
ஓ.......இது வேறயா..........எலேய் எனக்கு அதெல்லாம் தெரியாது........ஒரு மணி நேரம் டைம் தர்றேன்........அதுக்குள்ளே எம் பணம் எனக்கு வேணும்.......இல்ல பய புள்ள ஒருத்தன் பேங்குல வேல செய்ய மாட்டீங்க........பாப்போமா...........!
(போனை வைத்து விட்டேன்..........!......ஏன் அப்படி கோவப்பட்டு பேசினேன் என்று யோசித்துக்கொண்டு இருந்தேன்!.........அரை மணி நேரத்தில் என் மனைவியிடம் இருந்து போன்!)..........
பேங்குக்கு தாங்க போயிட்டு இருக்கேன்........அங்க இருந்து ஒரு ஆளு வந்தாரு..........பணம் வந்துடுசிங்கன்னு சொல்லி.........பரவா இல்லைங்க வீட்டுக்கெல்லாம் கூப்பிட்டு சொல்ற அளவுக்கு ஆயிட்டாங்க என்றாள்.....(அந்த குழந்தையின் சந்தோசத்தை கெடுக்க விரும்பாமல் ஏதும் சொல்லாமல் விட்டு விட்டேன்!)
நான் மறுமுறை அவருக்கு போன் செய்தேன்.....!
இல்லங்க இப்போ கெடசிடுச்சாம்.....மன்னிச்சிக்க நண்பா.........
எப்பிடியா அரை மணில ரூவா 85,000 செக் திடீர்னு பணமா மாறிடுச்சி என்றேன்.......
அது விடுங்க நீங்க எப்படி இருக்கீங்க.........
இன்னும் அப்படியே தான் இருக்கேன் நன்றி!.....என்று சொல்லி போனை வைத்து விட்டேன்........
கொசுறு: ஒரு விஷயம் புரிந்தது.......அரசு(அனைத்து அதிகாரிகளும் அல்ல!) பேங்கில் வேலை செய்யும் உயர் அதிகாரி நினைத்தால் "சூ மந்திரக்காளி" போட்டு காணமல் போன செக்கை வர செய்ய முடியுமோ.......(டவுட்டு!)
கொசுறு கொசுறு: நான் ஒரு மாக்கானுங்க இப்படி டீல் பண்றது தப்புதானுங்களே....பதில் சொல்லுங்க நண்பர்ஸ்!.......

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
28 comments:
என்ன கொடுமை டா இது? என் போஸ்ட் இணையலை. இவனுது மட்டும் இணைஞ்சு தொலைச்சிடுச்சே
அடங்கோ
@சி.பி.செந்தில்குமார்
அண்ணே வணக்கம்னே!
அரசு வேலைகளில் இருபவர்களுக்கு அதுவும் பாங்கில் இருபவர்களுக்கு தலையை சுற்றி ஒரு ஒளி வட்டம் இருக்குமே நீங்கள் பார்த்ததில்லை போலும். இவர்களின் சட்டம் எல்லாம் நம் போன்றவர்களிடம்தான். ஆனால் ஆளும் கட்சி வாரிசுகளுக்கு இவர்கள் டைபர் மாற்றி விட்டு வாயில் பால் பாட்டிலையும் வைத்து மிக்க மரியாதையுடன் தூக்கி தோளில் வைத்துகொண்டு ஆடுவார்கள். கோலை எடுத்தால் தான் குரங்காடும்.இந்த டீலிங் பிடிச்சிருக்கு.
நல்ல நல்ல போஸ்ட்டா போடரானே.. திருந்திட்டானா?
ஓகே நானும் இருக்கேன்
@கக்கு - மாணிக்கம்
வருகைக்கு நன்றி தலைவரே!
@அஞ்சா சிங்கம்
வாங்க சிங்கம் வாங்க!
@சி.பி.செந்தில்குமார்
"சி.பி.செந்தில்குமார் said...
நல்ல நல்ல போஸ்ட்டா போடரானே.. திருந்திட்டானா?"
>>>>>>>>>>>
வையகம் இது தானடா!
@கக்கு - மாணிக்கம்
இதுக்கு முன்னாடி ஒரு முறை கல்விக்கடனுக்காக அவனுக்கு சுளுக்கு எடுத்திருக்கோம் அந்த பயம் தான் அந்தப்பயளுக்கு!
நான்காவது ஆளு நானு, கருத்துக்களோடு இரவு வருகிறேன்.
@விக்கி உலகம்
நீங்க நல்லவரா கெட்டவரா????
@விக்கி உலகம்
நீங்க நல்லவரா கெட்டவரா????
@Carfire
"Carfire said...
@விக்கி உலகம்
நீங்க நல்லவரா கெட்டவரா????"
>>>>>>>>>>>>
தெரியலப்பா.......
அதத்தான் தேடிட்டு இருக்கேன்!
@நிரூபன்
வருகைக்கு நன்றி மாப்ள!
anaivarum ariya vendiya vishayam.
சூப்பர்.......
///எலேய் எனக்கு அதெல்லாம் தெரியாது........ஒரு மணி நேரம் டைம் தர்றேன்........அதுக்குள்ளே எம் பணம் எனக்கு வேணும்.......இல்ல பய புள்ள ஒருத்தன் பேங்குல வேல செய்ய மாட்டீங்க........பாப்போமா...........!/// பய புள்ளைகள் பயந்துட்டாங்க போல )))
தமிழ்மணம் ஏழாவது ஓட்டு நான் தான்..
கொசுறு: ஒரு விஷயம் புரிந்தது.......அரசு(அனைத்து அதிகாரிகளும் அல்ல!) பேங்கில் வேலை செய்யும் உயர் அதிகாரி நினைத்தால் "சூ மந்திரக்காளி" போட்டு காணமல் போன செக்கை வர செய்ய முடியுமோ.......(டவுட்டு!)
.......என்ன மாயமோ என்ன மந்திரமோ ..... எத்தனை பொது மக்கள் - ஏமாந்து போறாங்களோ.... நுகர்வோர் கோர்ட்ல முறையிட முடியாதா?
//Blogger சி.பி.செந்தில்குமார் said...
நல்ல நல்ல போஸ்ட்டா போடரானே.. திருந்திட்டானா?//
சிபி திருந்தவே மாட்டாரைய்யா!
//Blogger சி.பி.செந்தில்குமார் said...
என்ன கொடுமை டா இது? என் போஸ்ட் இணையலை. இவனுது மட்டும் இணைஞ்சு தொலைச்சிடுச்சே//
அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணுமில்ல!
ஆனாலும் எல்லோருக்கும் இப்படி அன்பா(!) மிரட்டத் தெரியாதில்ல!
ஹி ஹி அப்படியா நந்துச்சூ
ரௌத்ரம் பழகு! இது பாரதியின் ஆணை!
//நல்ல நல்ல போஸ்ட்டா போடரானே.. திருந்திட்டானா?// ஹா..ஹா..வீட்ல இருந்து வந்துட்டாங்களோ?
நான் சிடி பாங்கின் NRI அக்கௌன்ட் மூலம் அனுப்புகிறேன். இணையம் மூலம், ஒரு வங்கி கணக்கிலிருந்து இன்னொரு வங்கி கணக்குக்கு எலேக்ட்ரோனிக் முறையில் பணத்தை அனுப்பலாம். Pretty convenient!
கொய்யால வச்சிங்க பாரு ஆப்பு, மாப்ள இவனைப்போல ஆளுங்களுக்கு தடிய கையில எடுத்தே ஆகணும்
Post a Comment