Followers

Saturday, May 7, 2011

ரத்தக்கறை - (டைரி பேசுகிறது - பாகம் 4)

வணக்கம் நண்பர்களே.......தங்களின் மேலான ஆதரவுடன் தொடர்கிறேன்......


டேய்...........மறைஞ்சி இருந்தாடா சுடுறீங்க.............

கிட்டத்தட்ட இரு பக்கங்களில் இருந்து வந்த தோட்டாக்கள் என்னை நிராயுதபாணியாக்கியது.........ஏனெனில், என் கையை என்னால் எடுக்க முடியவில்லை.........அந்த விஞ்சுக்கு உள்ளே நாலு புறமாக நின்றிருந்த நாங்கள்...ஒரு புறமானோம்........

நான் ராவை குனிந்து பார்த்த போது ரத்தம் என் முகத்தில் தெறித்தது..........நான் நிமிர்ந்து பாக்கும் நேரம்..........மற்ற இரு நண்பர்களும் கல்லாக என்னை நோக்கி சாய்ந்து கொண்டு இருந்தார்கள்........அவர்களின் உடல் பளு என்மேல் அழுத்தியதால்.......என்னால் துப்பாக்கியை எடுக்க முடியவில்லை........

ஒரே நேரத்தில் மூன்று நண்பர்களின் பிரிவு என்னை நிலை குலையசெய்தது......ஒரு நிமிடம் என்ன செய்வதென்று புரியவில்லை...........

என்ன கொடுமை இது......சற்று முன் அளவளாவிக்கொண்டு இருந்த நண்பர்கள் என்னை விட்டு சென்றுவிட்டனர் எனும் போது நெஞ்சு அடைத்தது.......அவர்களின் உயிரற்ற உடலை பார்த்து என்னால் என்னை கட்டுப்படுத்திக்கொள்ள இயலவில்லை.......அதிலும் ராஜேஷ் - இவனுக்கு மூன்று மாததிற்க்கு முன்னே தான் திருமணம் நடந்ததாக கூறி இருந்தான்........எண்ணற்ற கனவுகளுடன் அவனுக்கு கிடைத்த வாழ்கை....நொடிப்பொழுதில் ஒரு சிட்டுக்குருவியின் வேகத்துடன் பிரிந்ததை பார்த்து கொண்டு இருந்த எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.......


அவனுக்கு எதிர் வாடையில் என்மேல் வெட்டிய மரமாக சாய்ந்த இன்னொரு நண்பன் சத்யா...........இது என்ன விதியின் சதியா...........என்னைவிட்டு சென்று விட்டீர்களே.........

மூன்று உயிர் துறந்த வீரர்களுக்கு நடுவில் நான்.........என்னை நோக்கி வந்து கொண்டு இருக்கும் மரணத்தின் ஓசையாகிய தோட்டாக்களை முத்தமிட தயாரானேன்.........

மரணம் என்னை நோக்கி விரைந்து வந்து கொண்டு இருப்பதை உணர முடிந்தது.........அந்த நேரத்தில் எனக்கு தோன்றிய ஒரு விஷயம்........இறப்பது என்பது என்றோ முடிவான விஷயம்........அந்த மரணம் என்னை தொடும் போது என்னுடன் சற்று முன் வரை உயிருடன் இருந்த நண்பர்களின் உயிருக்கு பழிக்கு பழி வாங்கியே தீருவேன் என்று முடிவு செய்தேன்........

முடிந்தவரை என் கைகளை அவர்களின் உடலுக்கு அடியிலிருந்து எடுத்து விட்டேன்........அடுத்து என் கை அந்த இயந்திர துப்பாக்கியின் விசையை இழுக்க..........ஓடி வந்து கொண்டு இருந்த தீவிரவாதிகள் மேல் பாய்ந்தன குண்டுகள்........அதே நேரம் அந்த மூளைச்சலவை செய்யப்பட்டவர்களின் துப்பாக்கியிலிருந்து வந்து கொண்டு இருந்த குண்டுகள்........என் நண்பர்களின் உயிரற்ற உடல்களை தாண்டி என்னிடம் வராமல் நின்றன.........

அவர்களின் உடலே ஒரு கேடயமாக இந்த முரடனைக்காப்பற்றி கொண்டு நின்றது......இப்போது நண்பனின் துப்பாக்கியை பிடித்துக்கொண்டு நான் காத்துக்கொண்டு இருந்தேன் அடுத்த நிகழ்வுக்கு.......

அடுத்த அணி எண்ணி நோக்கி விரைந்து கொண்டு இருந்தது......அவர்கள் பேசியது அந்த பனிக்காற்றிலும் கொஞ்சம் கேட்டது.......


"அங்கேயிருந்து யாரோ சுடுகிறான்........அவர்களில் இன்னும் ஒருவன் உயிருடன் இருக்கிறான்......சுடுங்கள்"

அந்த குரல் வந்த திசையை நோக்கி சுடலானேன்..........

தடட்டட் என்று தொடர்ந்து வந்த தோட்டாக்களில் ஒன்று நெற்றியை உரசிசென்றது......அடுத்து நான் தொடர்ந்து சுடலானேன்.......எனக்கு பின் புறமிருந்தும் என்னை நோக்கி தோட்டாக்கள் வந்து கொண்டு இருந்தன.........

சில நிமிடங்களே என்னால் போக்கு காட்ட முடிந்தது.......அவர்களில் பலர் சுட்ட தோட்டாக்கள் அந்த விஞ்சின் கம்பிகளை அறுத்தன........



அடுத்து வந்த தோட்டாக்கள் பின் மண்டையை பதம் பார்த்தன.......

கிட்ட தட்ட சில நூறு அடிகள் உயரத்தில் நான்..........

தொடரும்.............
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

17 comments:

# கவிதை வீதி # சௌந்தர் said...

படிக்கும் போதே நெஞ்சம் படபடக்கிறது....
அந்த தருணங்கள் மிகவும் கொடியதானது..
நண்பர்களுக்கான உயிரை பணயம் வைத்து பழிவாங்க தாங்கள் எடுத்த முயற்ச்சி நெஞ்சை நிமிர்த்த வைக்கிறது..

தொடருங்கள்...

# கவிதை வீதி # சௌந்தர் said...

ரத்தக்றையுடன் உள்ள டைரிப்பக்கங்களை பகிர்ந்துக் கொள்ளும் போது அந்த தருணங்கள் சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கும்...

ஒரு சல்யூட்...

MANO நாஞ்சில் மனோ said...

கண்ணீர் அஞ்சலி வீரத்தில் உயிரிழந்த சொல்ஜர்களுக்கு....

MANO நாஞ்சில் மனோ said...

வீரன் ராஜேஷ், என் கண்ணீரை அந்த வீரனுக்கும் மற்ற வீரர்களுக்கும் காணிக்கையாக்குகிறேன்...

MANO நாஞ்சில் மனோ said...

எனக்கு ஒரு துப்பாக்கி குடு மக்கா, போட்டு தள்ளிர்றேன். ரத்தமெல்லாம் கொதிக்குது...

MANO நாஞ்சில் மனோ said...

அடங்குங்கடா தீவிரவாதி நாயிங்களா....

கந்தசாமி. said...

மரணத்தே தொட்டு வந்துள்ளீர்கள். உங்கள் நண்பர்களுக்கு எனது வீர அஞ்சலிகள்

சசிகுமார் said...

உண்மைய சொல்லுங்க இது யாரோட டைரி

சி.பி.செந்தில்குமார் said...

ராணுவக்கதைகளை பிரமாதமாக எழுதி புகழ் பெற்றவர் எழுத்தாளர் சுபா..உன் எழுத்து அவருக்கு சவால் விடுகிறது.. ஏன்னா இது உன் சொந்த அனுபவம்.. உன் டைரியை படிக்கிற மாதிரியே இருக்கு,

ரஹீம் கஸாலி said...

ரைட்டு....அகட விகடன்கள் வலைப்பூவின் டைட்டில் சூப்பர்

நிரூபன் said...

சகோ, இந்த இடுகை, சோகங்களையும், உங்களின் சாகசங்களையும் சொல்லுகிறது. அடுத்த இடுகையில் விறு விறுப்பு அதிகமாக இருக்குமென நினைக்கிறேன்.

sathish777 said...

உங்களுக்கு ஒரு சல்யூட்

sathish777 said...

ஃபோட்டொ எல்லாம் பயமுறுத்துது

FOOD said...

இந்திய திருநாட்டின் இறையாண்மை காத்திட தம் இன்னுயிர் ஈந்திட்ட இளவல்கள்- என்றும் அவர்களுக்கு எம் மனதில் மரியாதைகள்.
அந்த தருணத்திலும், பகைவரை அழித்திட துடித்திட்ட உங்கள் துணிச்சல், இன்னும் பல பகைவரை அழிக்க, இந்த பணிக்காய் ஏங்க வைக்கும். சல்யூட், நண்பரே!ஒன்றல்ல, ஓராயிரம் முறை சொல்வேன்.

FOOD said...

ஏங்க வைத்த எதிர்பார்ப்புகளுடன்!

செங்கோவி said...

செம விறுவிறுப்பு!

செங்கோவி said...

யாரு டைரி அது?