Followers

Saturday, May 28, 2011

வியட்நாம் - பொம்மலாட்டம்!

வணக்கம் நண்பர்களே...........



ஹனோயிக்கு வரும் வெளி நாட்டவர்களை பெரிதும் ஈர்க்கும் இந்த பொம்மலாட்டத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவே இந்த பதிவு..............இதன் பெயர் Water Puppet Show என்று சொல்றாங்க..........இந்த பொம்மைகள் மரத்தால் செய்யப்பட்டவைகள்..........


இதன் சிறப்பம்சம்..........இந்த ஷோவில் காட்டப்படும் பொம்மைகளை இயக்குபவர்கள் தண்ணிக்கு அடியில் இருந்தே இயக்குகிறார்கள்............எவ்வளவு கஷ்டம் பாருங்க.........தண்ணிக்கு மேலே இந்த பொம்மைகள் போடும் ஆட்டம் காண்பவரை சபாஷ் போட வைக்கும்.......



அதுவும் வியத்னாமியர்களின் பாரம்பரியத்தய்யும்........விவசாயம் மற்றும் மீன்பிடி தொழிலையும் சித்தரித்து இருக்கும் இந்த ஷோ ரொம்ப நல்லா இருக்கும்............


அதே நேரத்தில்........பல வியட்நாமியர்கள் இந்த ஷோக்கு சென்றதில்லைன்னு கூறும்போது வியப்படஞ்சிருக்கேன்..........அப்போ தான் புரிஞ்சிது உள்ளூர் காரனுக்கு எப்பவுமே சொந்த விஷயத்துல ஆர்வம் கம்மின்னு.........(நம்மூரிலும் அதே கதைதானே ஹிஹி!)..........


இந்த பொம்மலாட்டம்......11 வது நூற்றாண்டுல இருந்து வந்தாலும்........90 களில் தான் உலகத்துக்கு தெரிய ஆரம்பிச்சிது.......ஏன்னா போர்களிலேயே தங்கள் வாழ்கையில் பெரும் பகுதிய கழிச்சிட்ட வியட்நாமியர்களுக்கு...........90 களில் இருந்து தான் வாழ்கையின் சந்தோசத்த அனுபவிக்க ஆரம்பிச்சாங்க........


இந்த பொம்மலாட்டத்துல இன்னொரு சிறப்பு இதில் வரும் ட்ராகன் உருவத்திலிருந்து......தீ வரும் அதுவும் ஜுவாலையாக...........அப்போ ஒரு நிமிழம் 3D படம் பாக்குறா மாதிரி இருக்கும்.........குழந்தைங்க முதல் பெரியவங்க வரை அப்போ தன்னை மறந்து பாப்பாங்க.........எவ்ளோ உழைப்பு.........தண்ணிக்கு அடியிலிருந்து இதை செய்வாங்க.............


முழு ஷோவ்வும் தண்ணிக்கு மேலதான் நடக்கும் பார்வையாளர்கள் பார்க்கும்போது.........பொம்மைகள் மனிதர்களின் உருவங்கள் போலவே தெரியும்...........


இந்த ஷோ பல நாடுகள்ல நடத்தி பேமஸ் ஆயிடுச்சி.........அதனால அந்த நாடுகளின் பெயர்களையும் சொல்லுவாங்க..........அப்படி இருந்தும் முதலில் இந்த ஷோவுக்காக இந்தியாவுக்கு போக விரும்பினாங்க கலைஞ்சர்கள்..........அதுக்காக இந்தியா சலுகை கொடுத்து இலவசமா இந்த கலைஞ்சர்கள வரவேற்றது...........இதுல நாம ஞாபகம் வச்சிக்க வேண்டியது(!)..............


கொசுறு: இந்த ஆட்டம் ஆரம்பிக்கும் போது இந்த ஷோவின் வரலாறு சொல்லுவாங்க.........நம்மூரு பொம்மலாட்டதுக்கு..நம்மாளுங்க எப்போ உயிர் கொடுக்கப்போறாங்கன்னு தெரியல(!).........படங்களுக்கு உதவிய Google.com க்கு நன்றி..........

கொசுறு: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.......தாங்கள் தங்களின் கருத்துகள் சொல்லும்போது தங்களின் தற்போதைய பதிவின் லிங்கை அளித்து விட்டு செல்லும்படி கேட்டுக்கொள்கிறேன்.....ஏனெனில், என்னுடைய ரீடரில் சரியாக வருவதில்லை..........நன்றி....... 
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

22 comments:

சி.பி.செந்தில்குமார் said...

பய புள்ள திடீர்னு கலாச்சாரப்பதிவா போடறானே.. சம்சாரம் ஊர்ல இருந்து வந்துட்டாங்க போல.. நடிக்கிறான்

சி.பி.செந்தில்குமார் said...

>>
கொசுறு: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.......தாங்கள் தங்களின் கருத்துகள் சொல்லும்போது தங்களின் தற்போதைய பதிவின் லிங்கை அளித்து விட்டு செல்லும்படி கேட்டுக்கொள்கிறேன்.....ஏனெனில், என்னுடைய ரீடரில் சரியாக வருவதில்லை..........நன்றி....

vaayyaa வாய்யா அறிவுக்கொழுந்து.. கமெண்ட்டுபவரின் பெயரை க்ளிக் பண்ணி போனா போச்சு? ஏஹ்ஹே ஹேஹேய்

# கவிதை வீதி # சௌந்தர் said...

இரண்டாவது டிக்கட்...

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

" சி.பி.செந்தில்குமார் said...
>>
கொசுறு: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.......தாங்கள் தங்களின் கருத்துகள் சொல்லும்போது தங்களின் தற்போதைய பதிவின் லிங்கை அளித்து விட்டு செல்லும்படி கேட்டுக்கொள்கிறேன்.....ஏனெனில், என்னுடைய ரீடரில் சரியாக வருவதில்லை..........நன்றி....

vaayyaa வாய்யா அறிவுக்கொழுந்து.. கமெண்ட்டுபவரின் பெயரை க்ளிக் பண்ணி போனா போச்சு? ஏஹ்ஹே ஹேஹேய்"

>>>>>>>>>

நான் கொஞ்சம் சோம்பேறிங்க அதான்..உங்க அளவுக்கு அறிவாளியோ நேரம் உடையவரோ இல்லீங்க ஹிஹி!

விக்கியுலகம் said...

" # கவிதை வீதி # சௌந்தர் said...
இரண்டாவது டிக்கட்..."

>>>>>>>>>>>>

அண்ணே வாங்க எப்படி இருக்கீங்க!

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

" சி.பி.செந்தில்குமார் said...
பய புள்ள திடீர்னு கலாச்சாரப்பதிவா போடறானே.. சம்சாரம் ஊர்ல இருந்து வந்துட்டாங்க போல.. நடிக்கிறான்"

>>>>>>>>>>>>>>

இன்னும் வரலீங்க........வந்த அப்புறம் தானுங்க பதிவு போட முடியுமான்னு தெரியும்.....ஹிஹி!

# கவிதை வீதி # சௌந்தர் said...

////
விக்கி உலகம் said...

" # கவிதை வீதி # சௌந்தர் said...
இரண்டாவது டிக்கட்..."

>>>>>>>>>>>>

அண்ணே வாங்க எப்படி இருக்கீங்க!////

நல்லா இருக்கேன் விக்கி..

# கவிதை வீதி # சௌந்தர் said...

உண்மையில் ஆச்சரியம் தான்..
இந்தியால் இந்த கலை தற்போது முழுவதுமான அழிந்தே விட்டது...


காலையில் நல்லசெய்தி மற்றும் பதிவு
வாழ்த்துக்கள்.. விக்கி...

நிரூபன் said...

வியட்னாம் பொம்மலாட்டம் பற்றிய சுவையான தகவல்களைப் பகிர்ந்திருக்கிறீங்க நன்றிகள் சகோ.

நிரூபன் said...

வியட்னாம் நாட்டின் கலாச்சாரத்தோடு ஒன்றித்துள்ள பொம்மலாட்டம் பற்றிய விந்தையான தகவல்களைத் தந்ததற்கு நன்றிகள் சகா.

சசிகுமார் said...

பொம்மலாட்டங்கள் மறந்து விட்ட அற்புத கலை ஸ்கூலில் படிக்கும் போது எங்கள் பள்ளிக்கே வந்து மதிய வேளையில் இது போன்று நடத்துவார்கள் நாங்கெல்லாம் ஒரே ஜாலியா முன்வரிசையில் உட்கார சண்டை போட்டு ஆட்டத்தை ரசிப்போம். ஒருவரே பல குரலில் பேசியும் அதே சமயம் பொம்மைகளை நடிக்க வைத்தும் பிரம்மிக்க வைப்பார். இந்த கலை தற்போது 90% அழிந்து விட்டது. பல கலைஞர்கள் பாதிக்க பட்டு வேறு பொழப்ப தேடி போய்விட்டதால் இந்த கலை முற்றிலும் அழியும் தருவாயில் உள்ளது அரசு இது போன்ற நலிவடைந்த கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும். காலையில் நல்ல செய்தி கொடுத்த மாப்ள மிக்க மகிழ்ச்சி

sathish777 said...

வியட்நாம் பற்றி நிறைய தெரிந்துகொள்ள முடிகிறது தொடருங்கள்..இதைத்தான் எதிர்பார்த்தேன்..வியட்நாம் பற்றி தெரிந்துகொள்ள உங்கள் ப்ளாக் வரவேண்டும் என்ற நிலை வர வேண்டும்

ஷர்புதீன் said...

மாமா., தயவு செய்து என்னுடை போன வருடத்து இடுக்கைக்கு வோட்டு போட்டுவிட்டு செல்லவும்!

பார்க்க - www.naathaariand oothaari .com சும்மா அதிருதா...........

:)

NKS.ஹாஜா மைதீன் said...

படங்களும் பதிவும் அருமை....வியட்நாம் வாசிகள் இதை ரசிக்க மாட்டார்களா?உள்ளூரு மாடு விலை போகாதுன்னு சும்மாவா சொன்னாங்க...தத்துவம் சரியா மாம்ஸ்...

Jana said...

ஒரு பொம்லாட்டம் நடக்குது ரொம்ப புதுமையாக இருக்குது :)
வியட்நாம் பொம்மலாட்டம் அழகு

MANO நாஞ்சில் மனோ said...

// தண்ணிக்கு அடியில் இருந்தே இயக்குகிறார்கள்.//

ஆத்தா நான் பாசாகிட்டேன்....

MANO நாஞ்சில் மனோ said...

// தண்ணிக்கு அடியில் இருந்தே இயக்குகிறார்கள்.///

ஓ அப்பிடியா....???

கந்தசாமி. said...

போட்டோக்களை பார்க்கவே கலக்கலாய் தான் இருக்கு ...

கந்தசாமி. said...

///இந்த ஷோவில் காட்டப்படும் பொம்மைகளை இயக்குபவர்கள் தண்ணிக்கு அடியில் இருந்தே இயக்குகிறார்கள்///என்ன தண்ணி என்று சொல்லவேஇல்லையே பாஸ் ;-)

FOOD said...

பொம்மலாட்டம் மிக சிறந்த ஒரு கலை. அதை கண் முன் கொண்டு வந்து நிறுத்திய தங்கள் பதிவுக்கு பாராட்டு!

செங்கோவி said...

வியட்னாமுக்கு ஒரு டூர் போடலாம் போலிருக்கே!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வெரிகுட் தக்காளி.... இப்படியே கலக்குய்யா..!