வணக்கம் நண்பர்களே......
ஒரு சாதாரண மனிதனின் மன குமுறலே இந்த பதிவு.......
வாழ்கையின் பாதையில் எவ்வளவோ இழக்கிறோம்.........ஆனால் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது என்பார்கள்..........இந்த துரோக நிகழ்வை என்ன சொல்வது........
இந்த குடும்பம் இப்போ அழுகுதாம்..........கேட்டா மகளை சிறையில் அடைத்து விட்டார்களே.......என்று ஒப்பாரி வைக்கிறது....இதுக்கு பல பல்லக்கு தூக்கிகள் சோக கீதம் பாடுகிறார்கள்............(அடபாவிகளே.....என்னதான்டா கொடுத்தாரு!)
மேலே ஒருவன்.....எல்லாவற்றையும் பார்த்து கொண்டு தான் இருக்கிறான்..........துரோகம் செய்து ஒரு இனத்தையே கருவறுக்க செய்தவனை கூட இருந்து தூக்கி பிடித்த ஒரு தந்தை இன்று சொல்கிறார்........உங்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்தால் நீங்கள் எந்த அளவுக்கு துன்பம் அடைவீர்கள் என்று..........!
பாத்தோமே.......நாடே......விலைவாசி ஏறியதால் கொந்தளிச்சிட்டு இருக்கும் போது.......படத்துக்கு விழா கொண்டாடிட்டு.....இருந்த நல்ல மனசு(!) யாருக்கு வரும்..........
கொத்து கொத்தா உயிர்களை பலி வாங்கினீர்களே.........எதிரிகளை விட துரோகிகள் நல்ல கதி அடைய முடியாது(!)...........சிங்கப்பூரில் ஒரு அரசியல் வாதி இருந்தார்........அந்த குட்டி தீவை செதுக்கி உருவாக்கி விட்டு.........தனக்கு வயதாகிவிட்டது என்று ஒதுங்கி கொண்டார்...........அவர் மனிதர்...........!
இன்று பதறி துடிக்கிறாயே தன் குழந்தையை சிறைச்சாலைக்கு அனுப்பி விட்டார்கள் என்று(!).......என் சகோதர சகோதரிகளை.......மொத்தமாக வாரி எமனிடம் கொடுத்தேனே அன்று எனக்கு எப்படி இருந்திருக்கும்..........பழி வாங்குவது நல்ல மனிதனுக்கு அழகல்ல...........!.....இருப்பினும்........
ஏனோ என் மனம் உம் குல கொழுந்து சிறையில் அடைக்கப்படும் போதும்.......உம்ம மனைவிகளில் ஒருவர்(!).......புலம்பும் போதும் மனசு சங்கடப்படவில்லையே ஏன்....... ?
கொசுறு: மக்களே இது ஒரு வேதனைபதிவு........கும்மியை தவிர்க்கவும்....நன்றி.

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
27 comments:
m m ம் ம் நடத்து
>>
இன்று பதறி துடிக்கிறாயே தன் குழந்தையை சிறைச்சாலைக்கு அனுப்பி விட்டார்கள் என்று(!).......என் சகோதர சகோதரிகளை.......மொத்தமாக வாரி எமனிடம் கொடுத்தேனே அன்று எனக்கு எப்படி இருந்திருக்கும்..
dit for dot by the fate
சிந்திக்க வைத்த சில நொடிகள்.
மக்களே இது ஒரு வேதனைபதிவு........கும்மியை தவிர்க்கவும்..// அப்ப என்ன பண்ணனும் நீயே சொல்லிடு மாப்ள..
வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
..சிங்கப்பூரில் ஒரு அரசியல் வாதி இருந்தார்........அந்த குட்டி தீவை செதுக்கி உருவாக்கி விட்டு.........தனக்கு வயதாகிவிட்டது என்று ஒதுங்கி கொண்டார்...........
அவர் மனிதர்...........!
டிஸ்கியை பார்க்காமல் தொடங்கிவிட்டேன்..
ம்ம் வேதனையிலும் உண்மை இருக்கிறது தான்!!
//
dit for dot by the fate //
ஆமா அப்பிடீன்னா?
இப்பெல்லாம் இங்கிலீசில கமெண்டு போடுறாங்கப்பா..
ஒண்ணுமே புரியல...
உண்மையாக சொல்ல வேண்டும் என்றால், அந்த ஆள் இறப்புக்குதான் காத்திருக்கிறோம் அனைவரும். துரோகி ஒழியட்டும்.
அரசியல் பதிவா? நமக்கு எதுக்கு வீண் வம்பு. வேடிக்கை மட்டும் பாருடா சிவா!
நடப்புக்களை கவனித்தால் ஒன்று மட்டும் புரிகிறது. நாம் தான் தப்பாக இவரை புரிந்துகொண்டுல்லோமோ என்று. தமிழ் இனம் என்று அவர் கூவி கூவி அலறுவது தன குடும்பத்தை மட்டுமே. தமிழ் நாடு என்பது தானும் தன் குடும்பம் உறவினர்களே அன்றி நீங்களும் நானும் போன்ற வர்கள் அல்ல. அவர் பேசியது, சொல்லியது , எழுதியது ,மேடையில் முழங்கியது எல்லாம் தானும் தன குடும்பமும் பொருட்டே அன்றி வேறு எவருக்கும் அல்ல. மேலும் மேலும் இவரின் நடவடிக்கைகளில் இவர்மீது வெறுப்பும், அருவெருப்பும் மட்டுமே அதிகமாகிறது. மனிதன் பொய் சொல்லவும் ,என்னதான் அரசியல் பிழைபவர்களாக இருந்தாலும் மனசாட்சி இல்லாமல் பேசவும் ஒரு அளவு உள்ளது. தமிழர்கள் என்றால் இவரின் குடும்ப அடிமைகள் என்று இறுமாந்து போயுள்ளார். ஒரு பேரியக்கத்தை தான் தன குடும்பம் பொருட்டு சீரழித்த ........................... வேண்டாம் போதும்.
//துரோகம் செய்து ஒரு இனத்தையே கருவறுக்க செய்தவனை கூட இருந்து தூக்கி பிடித்த ஒரு தந்தை இன்று சொல்கிறார்........உங்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்தால் நீங்கள் எந்த அளவுக்கு துன்பம் அடைவீர்கள் என்று..........!//
இன்னும் மறைந்திருக்கும் உண்மைகள் பல வெளியானால் இவர்கள் எவ்வளவு கேவலமானவர்கள் என்பது மேலும் தெளிவாகும்
என் மனதில் உள்ளதை நீங்கள் எழுத்தில் சொல்லி விட்டீர்கள் நண்பா...
உங்கள் எழுத்து, நான் எழுதியது பொல் இருக்கிறது...
கருணாநிதியின் தோல்வி, காங்கிரசின் தோல்வி, கனிமொழியின் கைது போன்றவை அவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் வலியைவிட, இரண்டு ஆண்டுகளாக மனதுக்குள் கடுயமையான ஆத்திரத்தையும் , இயலாமையையும் அடக்கிவைத்திருந்த ஈழ ஆதரவு மக்களுக்கு தமது ஆத்திரத்தையும், இயலாமையையும் தணிக்க உதவிய மிகவும் மகிழ்ச்சியான விடயம் என்றால் சரியாக இருக்கும்.
////.சிங்கப்பூரில் ஒரு அரசியல் வாதி இருந்தார்........அந்த குட்டி தீவை செதுக்கி உருவாக்கி விட்டு.........தனக்கு வயதாகிவிட்டது என்று ஒதுங்கி கொண்டார்...........அவர் மனிதர்...........!// உண்மை தான் பாஸ் நம் அரசியல் "வியாதிகளுக்கு "அவர் ஒரு எடுத்துக்காடு
குடும்பத்தோட உள்ள போட்டிருக்கணும் அண்ணே .... என்ன என்ன அட்டகாசம் செய்திருக்காங்க ... பட்டியல் போட்டா போய்க்கிட்டே இருக்கும் அண்ணே ....
காங்கிரஸ் கைப்பாவையாக இருந்த கருணாநிதிக்கு தண்டனைன்னு எல்லோரும் சொல்கிறார்கள்! சரி....மற்றவர்களுக்கு?
தவறு செய்பவர்களை விட இதைச்செய்யத் தூண்டுபவர்களும்
ஒத்துழைப்புக் கொடுப்பவர்களுமே மிகப்பெரிய குற்றவாளிகள்.
"தன்வினை தன்னைச் சுடும்"பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்..
கவலை படாதீர்...கடவுள் இருக்கார்...
பல நாள் திரு(டி)டன்......ஒரு நாள் அகப்படுவா(ள்)ன்.........
இவ்வளவு நடந்தும் இன்னும் தவறே யாரும் செய்யவில்லை என சொல்கிறாரே....கருணாநிதிக்கு என்ன ஒரு நெஞ்சுரம்...
வாழ்கையின் பாதையில் எவ்வளவோ இழக்கிறோம்.........ஆனால் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது என்பார்கள்..........இந்த துரோக நிகழ்வை என்ன சொல்வது........//
என்னய்யா, இருந்தாப் போல தத்துவம் எல்லாம் பேச வெளிக்கிட்டீங்க. இருங்க இருங்க பதிவைப் படித்து விட்டு வருகிறேன்.
மேலே ஒருவன்.....எல்லாவற்றையும் பார்த்து கொண்டு தான் இருக்கிறான்.........//
அது சிலருக்குப் பட்ட பின்னர் தானே புரியும்.
அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்பதன் அர்த்தம் இது தானோ.
நாடே மின்வெட்டில் தத்தளித்தபோது பாராட்டு விழாக்களுக்கு தேவை இல்லாமல் மின்சாரத்தை வாரி இரைத்தது. இதில் கட்சி மாநாட்டுக்கு திருட்டு மின்சாரம் வேறு...
" தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும் " என்று சொல்வார்கள்! இப்போது அதுதான் நடக்கிறது!!
Post a Comment