Followers

Tuesday, May 17, 2011

ஜெய் ஹிந்த்க்கு பின்னே!

வணக்கம் நண்பர்களே............


ஜெய் ஹிந்த் - ஒவ்வொரு இந்தியனும் முழங்கும் வார்த்தை.........இந்த "ஜெய் ஹிந்த்" வார்த்தைக்கு சரியான பொருள்........"Hail India"...."Victory to India"........"Long live India" என்றும் கொள்ளலாம்........

இதில் முதலில் வரும் "Hail" என்பது "அழைக்கிறது" என்ற பொருள் படும் ஜெர்மானிய வார்த்தை.........இதை "இந்தியா அழைக்கிறது" என்றும் கொள்ளலாம்...."இந்தியாவுக்கு வெற்றி" என்றும் கொள்ளலாம்..........


இந்த வார்த்தையை பிரபல்ய படுத்தியவரை உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்........அவர் பெயர் "செம்பகராமன் பிள்ளை"........இவர் ஒரு தமிழர்.......இவரின் தந்தை அக்காலத்தில் "Head Constable" ஆக திருவனந்தபுரத்தில் இருந்தார்.......அப்போது பள்ளிப்பருவத்தில் "Sir Walter Strickland" எனும் பிரிட்டீஷ் பேராசிரியரை கண்டார்.......அவர் இவரை தன்னுடன் பயணிக்க அழைத்தார்...... இவரும் அவருடன் சென்று விட்டார்......

இவரை அந்த பேராசிரியர் ஜெர்மானிய நாடான ஆஸ்திரியாவில் உள்ள பள்ளிக்கூடத்தில் சேர்த்தார்.........அங்கு இவர் தன் படிப்பை முடித்தார்...........பின்பு  அங்கேயே பொறியியல் படித்து தேர்ந்தார்......அக்டோபர் 1914 இல் இவர் ஜெர்மனில் இருந்த இந்திய சுதந்திர அமைப்பில் சேர்ந்தார்..........

பின்பு அப்போது இருந்த பிரிட்டீஷ் படையில் வேலை பார்த்து கொண்டு இருந்த இந்தியர்களை.....வெளியேறி வருமாறும் தனிப்படை அமைத்து வெள்ளையர்களை இந்தியாவை விட்டு வெளியேற்றுவோம் என்றும் கூறினார்....ஜெர்மானியர்கள் இந்திய சுதந்திரத்துக்கு உதவுவதாக வாக்களித்தனர்.....அப்போது வியன்னா வந்த சுபாஷ் சந்திர போஸிடம் தன் திட்டத்தை விவரித்தார்........அவரும் இதற்க்கு இசைந்தார்..........

ஆனால், விதி வேறுவிதமாக இருந்தது........சுயநலமாக முடிவெடுத்தனர் நாஜிக்கள்........உடன்படிக்கை போட்ட ஹிட்லர் சொன்ன விஷயம் என்னவென்றால்.....


"இந்தியர்களுக்கு தங்கள் நாட்டை ஆளும் திறமை இன்னும் வரவில்லை" 

இந்த விஷயம் பிள்ளையிடம் கொந்தளிப்பை ஏற்ப்படுத்தியது.............ஹிட்லரின் இந்த வார்த்தைக்கு கண்டனம் தெரிவித்து அதை மாற்றிக்கொள்ளுமாறு வற்புறுத்தினார் பிள்ளை..ஒப்பந்தம் என்னவெனில் நாஜிக்கள் இந்திய விடுதலைக்கு உதவுவார்கள்.....இருவருக்கும் பொது எதிரியான பிரிட்டீஷை எதிர்க்க முடிவானது.........இதற்கிடையில் 1931 இல் பெர்லினில்  லக்ஷ்மி பாய் எனும் மணிபுரை சேர்ந்த பெண்மணியை திருமணம் முடித்தார்.......

........ நாஜிக்கள் உலகப்போரில் தோற்றதனால் எதுவும் செய்ய முடியாமல் போனார் பிள்ளை........அதே வேலையில் நாஜிக்கள் இவரை தங்கள் எதிரியாக முடிவு செய்து விட்டனர்......நாஜிக்களின் தலைவர் ஹிட்லரின் ஆணையின்படி மே 26, 1934 இல்.......உணவில் விஷம் வைத்து கொல்லப்பட்டார்.....


அவரின் கடைசி ஆசை தன் உடல் அஸ்தியை.........தான் பிறந்த ஊரில் கரைக்கப்படவேண்டும் என்பதே.........அவர் இறந்த பிறகு அவரின் துணைவி நாஜிக்களின் கொடுமையான அணுகு முறையால் பாதிக்கப்பட்டார்......பல ஆண்டுகளாக பெர்லினிலேயே வாழ்ந்து வந்தார்....ஏனெனில் போஸ் சம்பந்த பட்டவர்கள் சொந்த நாட்டில்(!) தடை செய்யப்பட்டு இருந்தார்கள்(!).........கிட்ட தட்ட 33 ஆண்டுகளுக்கு பிறகு 1966 இல் அன்னாரின் புனித அஸ்தி கொச்சினில் கரைக்கப்பட்டது.....

கொசுறு: நாட்டின் சுதந்திரத்துக்கு போராடிய பலர் இவ்வாறு தன் தாய் நாட்டு மனிதர்களாலேயே புறக்கணிக்கப்படுவதை என்ன சொல்வது......! படங்களுக்கு நன்றி Google.com......தகவல்களுக்கு Wikipedia.com க்கு நன்றி..........
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

17 comments:

FOOD said...

HE HE

சி.பி.செந்தில்குமார் said...

நாட்டில் ஆட்சி மாற்றம்.. தக்காளி பதிவில் சமூக அக்கறை மாற்றம் ம் ம் நடத்து

FOOD said...

எல்லா ஓட்டும் போட்டாச்சு!

FOOD said...

சிபி பாவம் ரொம்ப கவனமா கமெண்ட் போடுறாரு.ஆளில்லாட்டா அவரை வம்புக்கு இழுப்பாரு.

நா.மணிவண்ணன் said...

பகிர்வுக்கு நன்றி அல்லது ரைட்டு

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

"சி.பி.செந்தில்குமார் said...

நாட்டில் ஆட்சி மாற்றம்.. தக்காளி பதிவில் சமூக அக்கறை மாற்றம் ம் ம் நடத்து"

>>>>>>>>>>

மாற்றம் ஒன்று மட்டுமே மாற்றம் இல்லாதது தம்பி!

விக்கியுலகம் said...

@நா.மணிவண்ணன்

வருகைக்கு நன்றி மாப்ள!

விக்கியுலகம் said...

@FOOD

வருகைக்கு நன்றி தல!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

அருமையான கட்டுரை..

# கவிதை வீதி # சௌந்தர் said...

தங்கள் பதிவு வர வர மெருகேறிக் கொண்டே இருக்கிறது...
வாழ்த்துக்கள்..

சசிகுமார் said...

பதிவு சூப்பர் மாப்ள தொடர்ச்சியை விரைவில் எதிர்பார்க்கிறோம்.

கக்கு - மாணிக்கம் said...

"இந்தியர்களுக்கு தங்கள் நாட்டை ஆளும் திறமை இன்னும் வரவில்லை"

இது முழக்க முழுக்க சரிதான் என்று 60 வருடங்களாகவே நிருபித்து வருகிறோமே!
வெளியில் தெரியாத, பள்ளி சரித்திர நூல்களில் மறைக்கப்பட்ட செய்திகள். அதுவும் சுபாஷ் சந்திர போஸ் என்றால் அவரின் தொடர்புடையது என்றால் கேட்கவே வேண்டாம்.
நல்ல பகிர்வு விக்கி

தமிழ்வாசி - Prakash said...

ஜெயஹிந்த்...ஜெயஹிந்த்....

NKS.ஹாஜா மைதீன் said...

நான் அறிந்திராத தகவல்கள்....நன்றி மாம்ஸ்.

MANO நாஞ்சில் மனோ said...

//கொசுறு: நாட்டின் சுதந்திரத்துக்கு போராடிய பலர் இவ்வாறு தன் தாய் நாட்டு மனிதர்களாலேயே புறக்கணிக்கப்படுவதை என்ன சொல்வது.....//

மனசுக்கு வேதனையாகத்தான் இருக்கிறது...

MANO நாஞ்சில் மனோ said...

ஜெயஹிந்த்....

செங்கோவி said...

நல்ல பதிவு விக்கி..அப்பப்போ இது மாதிரி நல்ல பதிவுகளையும் எழுதவும்.