வணக்கம் நண்பர்களே டைரி பேசுகிறது தொடர்கிறது,
அந்த மனிதனின் தலையில் கட்டு போடப்பட்டு இருந்தது.........அதற்க்கு காரணமாகிய நான் அவன் எதிரில் நின்று கொண்டு இருந்தேன்..........
அவன் பேசிய பல வார்த்தைகள் புரியவில்லை.....திட்டிக்கொண்டு இருக்கிறான் என்று புரிந்து அமைதியாக இருந்தேன்.........
அந்த மனிதன் வெளியில் சென்றான்........அப்போது நண்பன் என் காதருகே வந்து எதுவும் எதிர்ப்பு காட்டாதே...அமைதியாக இரு இல்லன்னா இங்கயே பொதசிடுவான் என்றான்...........
திரும்பி வந்த அந்த மனிதன்.......உன்னை நான் தொட மாட்டேன்......ஆனா நீ என்னை தொட்டதுக்கான பலன் கிடைக்க வைப்பேன்.......அப்போது உன்கிட்ட உன் உயிர் இருக்காது என்றான்.........(கேட்க்க சினிமா வசனம் மாதிரி இருந்தது!)
நான் என்னுள் சிரித்துக்கொண்டேன்.....எப்பேர்ப்பட்ட நல்லது செய்ய இருந்தான்...அத நான் தடுத்துட்டேன்னு என் மேல கோவமா!....இவன் என்னை என்ன செய்யறான்னு பார்ப்போம் என்று நின்று இருந்தேன்......அவன் என்னை அங்கிருந்து போகச்சொன்னான்......
சிறிது நேரம் கழித்து.......நண்பனிடம் பேசிக்கொண்டு இருந்தேன்......
என்னடா என்னமோ கிழிக்கப்போறான்னு சொன்னே!...என்னடா ஒன்னும் செய்யல என்றேன்..........
எனக்கு என்னமோ அவன் உன்ன வேற ஆபத்தான இடத்துக்கு அனுப்பப்போறான்னு நெனைக்கிறேன்.......என்றான் நண்பன்........
இரண்டு நாட்களில் அவன் சொன்னதை போல நடந்தது...........
(நான் அப்போதும் அசட்டு தைரியத்துடன் அவனிடம் இருந்து விடை பெற்றேன்.......வீட்டில் பேசிய பேச்சுக்கள் நினைவுக்கு வந்து சென்றன......என் நினைவு சிறிது பின்னோக்கி சென்றது.......)
தம்பி ஏன் இந்த வேலைக்கு போவேன்னு பிடிவாதமா இருக்க..அக்கா கேட்டாள்.....
எனக்கு இது பிடிச்சிருக்கு.....இதற்குத்தான் இத்தன நாள் கஷ்ட்டப்பட்டு ட்ரைனிங்ல இருந்தேன்..........
ஏம்பா அந்த சேவையை உள்ளுருல இருந்து செய்யக்கூடாதா.......அந்த அப்பாவித்தந்தை கேட்டார்.........
ஏன்டா இப்படி நாங்க சொல்ற பேச்சே கேக்ககூடாதுன்னு இருக்கியா - அம்மா...
உங்களுக்கு ஒன்னு சொல்லிக்கிறேன்.....நீங்க சொன்னா மாதிரி வராத படிப்ப எப்படியோ கஷ்டப்பட்டு(!) படிச்சி பட்டம் வாங்கிட்டேன்....நீங்க சொன்னா மாதிரி.......இந்த வேலை என் கனவு அத நிறைவேத்த விடுங்க ப்ளீஸ்!
சரிப்பா போயிட்டு வா........ஞாபகம் இருக்கட்டும்......நீ போறது ரொம்ப அபாயகரமான வேலை......எப்பவும் உன் மனச அலை பாய விடாதே.......எப்போ நேரம் கெடைக்குதோ அப்போ எங்கள நெனச்சா போதும்..........எப்போதும் அக்காவையே நெனச்சிட்டு இருக்காதே........எந்த நேரத்திலும் உன் தைரியத்த மட்டும் இழந்திடாதே........அது தான் உன் சொத்து.....நீ முரடனா இருந்த போது நான் ரொம்ப வருத்தப்பட்டு இருக்கேன்......ஆனா அந்த முரட்டுத்தனம் இன்னைக்கு உன்ன பொறுப்பான மனுசனா ஆக்குனத நெனச்சா பெருமையா இருக்கு......- அந்த ஏழை தந்தை அதை விட நாசுக்காக என்ன சொல்லிவிட முடியும்.....
விடை பெற்று என் பணியிடம் போய் சேர்ந்தேன்.......இப்போது நிகழ்காலம்........
புதியதான இடத்துக்கு வந்து சேர்ந்தேன்..............
நண்பர்கள் சிலர் கிடைத்தார்கள்........அதில் தெற்கத்திய நண்பர்கள் நால்வர் சேர்ந்தோம்...........என்னுடன் ராவ், சத்தியா, ராஜேஷ் என நட்பு வட்டம் கிடைத்தது.........அந்த நட்பு சில காலம் நீடித்து இருந்தது.........அவரவர் பணியில் மிகுந்த கவனத்துடன் ஓடிக்கொண்டு இருந்தோம்..........
அந்தப்பகுதியில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை அதிகமாக மேட்கொள்ளப்பட்டுக்கொண்டு இருந்தது.....
ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஒருவர் இறந்து கொண்டு இருந்தனர்.......அது எதிர் தரப்பு மற்றும் எங்கள் தரப்பிலும் சில நாள்!..என காலம் ஓடிக்கொண்டு இருந்தது........
நாம் கழிக்கும் மலம் 2 நிமிடங்களில் பனிக்கட்டியாக இறுகிவிடும் காலம் அது..........அப்போது தான் அந்த பழைய அரக்கனின் எண்ணம் எனக்கு புரிய ஆரம்பித்தது...........
ஒரு மலைக்கும், அடுத்த மலைக்கும் பயணப்பட மற்றும் கண்காணிக்க ஒரு வாகனம் (வின்ச்) வந்து சென்று கொண்டு இருக்கும்..........
அப்படித்தான் நாங்கள் நால்வரும் ஒரு நாள் அந்த வாகனத்தின் மூலம் அடுத்த பகுதிக்கு பயணப்பட்டுக்கொண்டு இருந்தோம்...........
டுப்..டுப்...டுப்.......என சத்தம் கேட்டது......தூரத்தில் இருந்து யாரோ சுடுகிறார்கள்(snipper shot!)..........என்பது போன்ற உணர்வு........திரும்பி பார்த்தால் முனகல் சத்தத்துடன் ராவ் உடலில் இருந்து ரத்தம் பீரிட்டு வந்து கொண்டு இருந்தது..........அவன் என் கண்ணெதிரே துடிப்பதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாமல் துடித்தேன்....என்ன செய்வது தெரியாமல் தவித்தேன்.........
டேய்............பொட்டபசங்களா.........மறைஞ்சி இருந்தாடா சுடுறீங்க..........!
தொடரும்...........
கொசுறு: படங்களுக்கு உதவிய Google.com க்கு நன்றி........

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
28 comments:
எப்படி இப்படியெல்லாம்..
ராவ், சத்தியா, ராஜேஷ் - இப்ப இவங்கல்லாம் என்ன பண்றாங்க?
I ll read and come..he he..
Present Sir
if i know full story..then u ll become an action hero..he he...But u are capable of that
Interesting anne...
டேய்.. என்னடா என்னன்னமோ சொல்லி பயமுறுத்தறே.. போற போக்கைப்பார்த்தா நீ பெரிய மிலிட்டிரி ஆஃபீசர் போல தெரியுதே.. இத்தனை நாளா உன்னை கலாய்ச்சது தப்போ?
நல்லாப் போகுது..
ரகளை பனுரிங்க தலைவா
ok...ok
நல்லா இருக்கு பாஸ்!
பொய் சொல்லாதப்பா... நான் துளியும் நம்ப மாட்டேன்....... எங்க காதுல பூ சுத்த நெனக்கிறீங்களா...
டைரி எப்படிப்பா பேசும் #டவுட்டு
நல்ல இருக்கு
மிலிட்டரின்னாலே உயிருக்கு உத்தரவாதமில்லை, நாட்டுக்காக ரத்தம் சிந்திய உங்கள் [எங்கள்] நண்பனுக்கு ஒரு ராயல் சல்யூட்....
//சி.பி.செந்தில்குமார் said...
டேய்.. என்னடா என்னன்னமோ சொல்லி பயமுறுத்தறே.. போற போக்கைப்பார்த்தா நீ பெரிய மிலிட்டிரி ஆஃபீசர் போல தெரியுதே.. இத்தனை நாளா உன்னை கலாய்ச்சது தப்போ?////
உம்மகிட்டே ஆரம்பத்துல இருந்தே சொல்லிட்டு இருக்கேன், வாயை குடுத்துட்டு வாயில சூடு வாங்காதீரும்னு...
ஏழாவது தமிழ்மணம் குண்டு என்னுது ஹே ஹே ஹே ஹே....
அந்த மனிதன் வெளியில் சென்றான்........அப்போது நண்பன் என் காதருகே வந்து எதுவும் எதிர்ப்பு காட்டாதே...அமைதியாக இரு இல்லன்னா இங்கயே பொதசிடுவான் என்றான்...........//
ஆனாலும் நம்ம சகோ- இவனுக்கு பந்து நாமளா எனும் தெம்போடு இருந்திருப்பாரே.
திரும்பி வந்த அந்த மனிதன்.......உன்னை நான் தொட மாட்டேன்......ஆனா நீ என்னை தொட்டதுக்கான பலன் கிடைக்க வைப்பேன்.......அப்போது உன்கிட்ட உன் உயிர் இருக்காது என்றான்.........(கேட்க்க சினிமா வசனம் மாதிரி இருந்தது!//
அடிங்...நம்ம சிங்கத்துக்கிட்டவே சவால் வுட்டுட்டானா,.
(நான் அப்போதும் அசட்டு தைரியத்துடன் அவனிடம் இருந்து விடை பெற்றேன்.......வீட்டில் பேசிய பேச்சுக்கள் நினைவுக்கு வந்து சென்றன......என் நினைவு சிறிது பின்னோக்கி சென்றது.......)//
பிளாஷ்பேக்..ஆரம்பம்..
எனக்கு என்னமோ அவன் உன்ன வேற ஆபத்தான இடத்துக்கு அனுப்பப்போறான்னு நெனைக்கிறேன்.......என்றான் நண்பன்........
இரண்டு நாட்களில் அவன் சொன்னதை போல நடந்தது..........//
மேலதிகாரிகள் மீதான தவறுகளைச் சுட்டிக் காட்டினாலோ, இல்லை,
மேலதிகாரியை விட நீங்கள் அறிவில் சிறந்தவராக ஏதாவது முடிவுகள் எடுத்தாலோ
நம்ம ஆட்கள் தண்ணி இல்லா காட்டுக்கு அனுப்பி காயப் பண்ணி, கருவாடு போட்டிடுவாங்க.
நாம் கழிக்கும் மலம் 2 நிமிடங்களில் பனிக்கட்டியாக இறுகிவிடும் காலம் அது..........அப்போது தான் அந்த பழைய அரக்கனின் எண்ணம் எனக்கு புரிய ஆரம்பித்தது...........//
இப்போ கண்டு பிடிச்சிட்டன், எந்த இடத்தில் கதை நிகழ்கிறது என்பதை..
அவ்..........
அது தான் உன் சொத்து.....நீ முரடனா இருந்த போது நான் ரொம்ப வருத்தப்பட்டு இருக்கேன்......ஆனா அந்த முரட்டுத்தனம் இன்னைக்கு உன்ன பொறுப்பான மனுசனா ஆக்குனத நெனச்சா பெருமையா இருக்கு......- அந்த ஏழை தந்தை அதை விட நாசுக்காக என்ன சொல்லிவிட முடியும்....//
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதற்கு....இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.
ஒவ்வோர் அங்கத்திலும், சஸ்பென்ஸ் வைத்து முடிக்கிறீர்கள்.
சுவாரசியமாய் நகர்ந்து செல்லும், அடுத்த பகுதியைப் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
பதிவை வாசிக்கும்பொழுது குண்டுகளின் சத்தத்தை நேரில் பார்த்து அதிர்ந்த ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது தங்களின் எழுத்து நடை
நாங்கலாம் கலவர பூமில காத்து வாங்கறவிங்க.... நெக்ஸ்ட் எப்போ தல
பதிவை வாசிக்கும்போதே நெஞ்சம் பதை பதைக்கிறது.
கதையா? உண்மையான காவியமா?
மூன்று பகுதியையும் படித்து விட்டு நாளை கருத்து சொல்கிறேன் தல!
Post a Comment