Followers

Saturday, May 14, 2011

மாக்கானின் பார்வையில்!

வணக்கம் நண்பர்களே...........


ஊரே இப்படி ஆனந்த கூத்தாடுரத பாத்தா(!)..........தக்காளி ரொம்ப நாளா உக்கார முடியாம மல்லாக்க படுத்து இருந்த மக்களுக்கு திரும்பி உக்கார முடிஞ்சா மாதிரி தெரியுது..........


ஆனா, என்னை பொறுத்தவரைக்கும்......தேவையில்லாத இலவசங்கள அறிவிச்சத செயல் படுத்தறதுக்கு இன்னும் கடன் வாங்க வேண்டாம்னு நெனைக்கிறேன்......எந்த ஒரு கட்சியும் நாங்க ஆட்சிக்கு வந்தா அடுத்த 5 வருசத்துக்கு விலைவாசிய இதே நிலமையில நிறுத்தி வைப்போம்னு சொல்ல முடியல.......


காரணம்........எரிபொருள் விலை ஏற்றம் என்பது அரசு கையில இல்லாம இன்னிக்கி பல நாதாரிகள் கையில மாட்டி இருக்கு.........மீண்டும் அத அரசுக்கைக்கு கொண்டு வந்து.....எரி பொருள் மேல போட்டு இருக்கும் மத்திய மாநில வரிகள குறைச்சிட்டா ரூ 23 க்கு பெட்ரோல் விலைய கொண்டு வர முடியும்.......

"சின்னஞ்சிறிய நாடுகள் இப்போது $ 1 க்கும் கம்மியாதான் பெட்ரோல் விற்ப்பன பண்ணிட்டு இருக்கு........நம்ம நாட்டுல மட்டும் ஏன் இந்த அடங்கா வாதம்....!"

அப்படி கொண்டு வந்தா தானே..எல்லா பொருளுடைய விலைகளும் இறங்கும்......மக்களின் நடை முறை வாழ்கை சிக்கல்கள் குறையும்.........இத செய்ய மத்திய கட்சிய மாநில கட்சிகள் நிர்பந்தப்படுத்தனும்.........அப்போதான் பல விஷயங்கள் கட்டுக்குள்ள வரும்.........


ஆனா, இதுக்கு பைனான்ஸ் பண்ண பார்ட்டிகள் ஒத்து வருமா தெரியல.....ஏன்னா ஆட்சி கிடைச்சிடுச்சி என்றதும்.......மக்கள் பிரச்சனைய மறந்து......நேத்து வரை ஹீரோவா இருந்தவங்கள ஜீரோ ஆக்கி அசிங்கப்படுத்துரதுல நேரத்த செலவு பண்றத........வந்திருக்க ஆட்சியாலினி யோசிக்கறதுல பாதியாவது மக்கள் பணி செய்வாங்களா! கண்டிப்பா செய்யணும்........


ஏற்கனவே இருந்தவங்க ஆடுன ஆட்டத்துக்கு தான் ஆப்பு அடிச்சி மூலைல மக்கள் உக்கார வச்சி இருக்காங்க.......அவங்க சேர்த்து வச்சிருக்க பணத்த பிடுங்கி அரசு கஜானால சேப்பாங்களா என்பதே அனைவரது ஆவல்.....இல்ல ஜெயிச்சவங்களோட கஜானாக்கு கொண்டு போயிருவாங்களோ என்பது தோற்றவர்களின் பார்வை.......


ஜெயிச்சவங்க........கொஞ்சமாவது மக்களை நெனச்சி செயல்படுவாங்க என்கிற உணர்வு எல்லோருக்கும் இருக்கு........அதை நனவாக்க வேண்டும்......

கொசுறு: இனி மக்களின் அடிப்படை விஷயங்களிலும், சட்டம் ஒழுங்கு கட்டப்பஞ்சாயத்து ஒழியும் என்று நம்ம்பிக்கயுடன் ஒரு பாமரனாக.......!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

21 comments:

சி.பி.செந்தில்குமார் said...

பயபுள்ள பொறுப்பாத்தான் பதிவு போட்டிருக்கான்.. கும்ம முடியல..

தமிழ்வாசி - Prakash said...

மிக மிக அருமையான பகிர்வு.

# கவிதை வீதி # சௌந்தர் said...

விலைவாசி பற்றி தங்கள் ஆதங்கம் புரிகிறது...

காய்கறிகளின் விலைவாசியானது அந்தந்த பருவம் மற்றும் காலநிலையை பொருத்துத்தான் அமையும்..

ஆனால் ஆக்கபூர்வமான பணிகளுக்கு தேவைப்புடும் எரிபொருளின் விலையை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தும் கூட அதை சமாளிக்க வழி தெரியாமல் தவிக்கிறது...

மின்சாரம், கச்சா எண்ணெய், நிலக்கரி போன்றவற்றை உள்நாட்டு உற்ப்பத்தியை பெருக்க வழி வகை செய்ய வேண்டும் என்பதே என் ஆதங்கம்..

கக்கு - மாணிக்கம் said...

நல்ல சிந்தனைதான்.அது சரி அந்த மாக்கான் யாரு? என் நண்பன் ஒருத்தன இப்படித்தான் கூப்பிடுவோம்.

FOOD said...

//சி.பி.செந்தில்குமார் said...
பயபுள்ள பொறுப்பாத்தான் பதிவு போட்டிருக்கான்.. கும்ம முடியல..//
ஆமாங்க, விக்கி வெள்ளந்திரிங்க அய்யா!

சசிகுமார் said...

//ரூ 23 க்கு பெட்ரோல் விலைய கொண்டு வர முடியும்.......//

ஐயா நெசமாவா சொல்றீங்க புண்ணியவான் நல்ல ஐடியாவெல்லாம் கொடுக்குறான் செயல் படுத்துனா நல்லா தான் இருக்கும்.

சசிகுமார் said...

//இனி மக்களின் அடிப்படை விஷயங்களிலும், சட்டம் ஒழுங்கு கட்டப்பஞ்சாயத்து ஒழியும் என்று நம்பிக்கயுடன் ஒரு பாமரனாக.......//

தல எத பண்றாங்களோ இல்லையோ இத கண்டிப்பா பண்ணுவாங்க

சசிகுமார் said...

//அவங்க சேர்த்து வச்சிருக்க பணத்த பிடுங்கி அரசு கஜானால சேப்பாங்களா என்பதே அனைவரது ஆவல்//

அரசு காஜானாவா இல்ல அவுங்க கஜனாவா பொருத்து இருந்து பார்ப்போம் மாப்ள

MANO நாஞ்சில் மனோ said...

நீ அசத்து ராஜா....

MANO நாஞ்சில் மனோ said...

பெட்ரோல் விலையை கட்டுக்குள் கொண்டு வந்தாலே, விலைவாசி என்னும் மா அரக்கன் கட்டுக்குள் வந்து விடுவான். நல்ல பதிவு தக்காளி....

நிரூபன் said...

ஆய்....திமுகவிற்கு இப்படியும் அடிக்கலாமா.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தக்காளி நீயே இப்படித் திருந்தும்போது.... அவனுக திருந்த மாட்டானுகளா...? பார்ப்போம்...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ங்கொக்காமக்கா ஒருவாரம் கேப்பு விட்டா இப்படி பதிவா போட்டு தாளிச்சி எடுத்திருக்கே.. ம்ம்ம் படிச்சி முடிக்கவே இன்னும் ஒருவாரம் ஆகும் போல இருக்கே? இதுக்கே இப்படின்னா, இன்னும் சிபி ப்ளாக்லாம் வேற படிக்கனுமே?

sathish777 said...

என்ன ஒரு பருப்பு..ச்சி பொறுப்பு

sathish777 said...

அந்த சிங்கத்தை பார்த்தா பொறாமையா இருக்குண்ணே

பெசொவி said...

//கொசுறு: இனி மக்களின் அடிப்படை விஷயங்களிலும், சட்டம் ஒழுங்கு கட்டப்பஞ்சாயத்து ஒழியும் என்று நம்ம்பிக்கயுடன் ஒரு பாமரனாக.......!//மீ டூ! Same Blood!

ஜீ... said...

அருமை மாம்ஸ்!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

என்னால இப்போதான் வரமுடின்சது மாமு..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

மாம்ஸ் டெம்ப்ளேட் சூபரப்பு

ரஹீம் கஸாலி said...

சரிதான் ரைட்டு

இரவு வானம் said...

என்ன மாம்ஸ் நீங்களா இப்படி பதிவு போட்டு இருக்கீங்க, போங்க மாம்ஸ்