Followers

Sunday, May 15, 2011

ரசிகன்னா எப்படி இருக்கணும்....! r

வணக்கம் நண்பர்களே......


இந்த ரசிகன் அப்படிங்கற விஷயம் ரொம்ப நாளா விவாதிக்க நெனச்சேன்......இப்பதான் அதுக்கு ஒரு விடிவு வந்துது......நான் ஒரு அடிப்படை பாமரன் என்ற நினைப்பு என்னை விட்டு சென்று விடாதபடி நகத்திவருகிறேன்.......

விஷயம் என்னன்னா....நானும் ஒரு காலத்தில் தனிப்பட்ட ஒரு நடிகருக்கு பின் நின்ற ரசிகன் என்ற பாத்திரத்தில் உலவியவனே.....அதனால எனக்கும் சிறிது பங்கு உண்டு இதனை பற்றி பேச(!)...........


எவன் நல்லவன்னு பாக்க வேண்டியது இல்ல(!)......அவன் யாரால, அவன் தொழில்ல சம்பாதிக்கரானோ அந்த நன்கொடை கொடுத்தவங்களுக்கு தான் சம்பாதிச்சதிலிருந்து ஒரு பங்காவது செலவு செய்பவனே உயர்ந்தவன்.......அதிலும் தன்னோட தனிப்பட்ட வாழ்கைக்கு தன் நிழல் உருவத்த பயன் படுத்தாதவனே உயர்ந்தவன்.......

நடிகன் என்பது பொது சேவை செய்யும் செயலல்ல......அது ஒரு தொழில்........அந்த தொழிலில் லாபம் ஈட்டும் ஒருவன் அந்த தொழிலுக்கு முதல் போட்ட மனுசங்களுக்கு தன்னால் இயன்ற ஏதாவது ஒரு நல்ல எதிர் வினை செய்தாலே போதுமானது.......


பத்து ரூபாயிலிருந்த கட்டணம் இன்று 200 ரூபாவரை சென்று இருக்கிறது......ஆனாலும் கோடிக்கணக்குல இவனுங்க ஊதியம் வாங்கிட்டு தான் இருக்கானுங்க.........அதுக்காக அவங்க உழைக்காம வாங்குறாங்கன்னு சொல்லல...........இருந்தாலும் ஒரு உழைப்பாளி 12 மணி நேர கடின உழைப்ப செய்ஞ்சாலும் அவனால 250 ரூபா ஒரு நாளைக்கு வீட்டுக்கு கொண்டு போக முடியாத இந்த காலத்துல......

ஏன்யா இப்படி இந்த நடிகனுங்களுக்கு பல்லக்கு தூக்குறோம்.........கொஞ்ச ஆழமா சிந்திச்சா........ஒரு சாதாரண மனிதன் செய்ய முடியாததை சினிமாவில் வரும் கதா நாயகன் செய்வதை மனது மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறது.......அதே அவன நாட்டுக்கு இறங்கி வேல செய்ய வாடான்னா..........அதுக்கு ஆயிரம் பதில் வச்சி இருக்கானுங்க சொல்றதுக்கு..........

ஒருத்தன் சொன்னான்...."எங்க தலைவன் நெனச்சா உடம்ப ஏத்துவான் இறக்குவான் தெரியுமான்னான்"

அட புண்ணாக்கே அது அவன் தொழிலு அவன் வாங்குற அளவு கோடிக்கணக்குல நீ துட்டு வாங்குனா நீயும் அப்படி பண்ண முடியுமே..........தவிர அவன் தொழில்ல அவனுக்கு உடம்பு ரொம்ப முக்கியம்..........கம்யுனிசம் பேசிக்கிட்டு ஊருக்கு உபதேசம் பண்ணிட்டு பத்தோட பதினொன்னு அதோட இது ஒன்னு கணக்கா பொண்ணுங்க கூட ஓடிட்டு இருப்பானுங்க.......இவனுங்க பேச்செல்லாம் நாம எதுக்கு கேட்டுகிட்டு........

இன்னொரு பக்கம் பாத்தா வயசான காலத்துல வர்ற வலி வந்து சேரும்.......அதுக்காக யாரு தடுத்தாலும் கேக்காது உடல் உபாதைகள!...... அந்த மனுசனே மாத்திக்கிட்டா தான் உண்டு.........இது புரியாம நல்லவன் வல்லவன் நடுவீட்ல உக்காந்தவன்னு சப்போர்ட்டு வேற.........


இதே நடிகைகள் வர்றது நடிக்கறது(!)......இருக்கறது 2 ல இருந்து 5 வருஷம் மட்டுமே........இதில் சிலர் விதி விலக்கு.........அவங்கள இன்னிக்கும் பின்னாடி போயி கொடி பிடிக்க எவனாவது இருக்கானா.......இருந்தா அவனுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்(!)...........

மக்களே நான் சொல்றது இதானுங்க.........துட்டு போட்டு படம் பாத்தியா....புடிச்சிருக்கா சூப்பர் அப்படின்னு சொல்லிட்டு போயி பொழப்ப பாப்போம்.........அத விட்டுட்டு அவன் பாக்குற பொழப்ப நாம பாக்க ஆரம்பிச்சா நம்ம வயித்து பொழப்ப யாரு பாக்குறது.........!

கொசுறு: ஒரு மாக்கானின் பார்வையில் இந்த விஷயங்கள்........தக்காளி பொங்குறவங்க பொங்கலாம்....!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

54 comments:

MANO நாஞ்சில் மனோ said...

வெங்காயம்

சி.பி.செந்தில்குமார் said...

அடேய் முந்திக்கிட்டியா?

MANO நாஞ்சில் மனோ said...

சட்னி

MANO நாஞ்சில் மனோ said...

தக்காளி

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
அடேய் முந்திக்கிட்டியா?//

மரியாதையா என் பதிவுல போயி கமேண்ட்சும் ஓட்டும் போட்ரு, இல்லைன்னா மவனே உன்னை கொன்னேபுடுவேன்...

சி.பி.செந்தில்குமார் said...

தக்க்காளி பதிவு எப்படி போட்டாலும் லே அவுட் பக்காவா இருக்குடா..

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
தக்க்காளி பதிவு எப்படி போட்டாலும் லே அவுட் பக்காவா இருக்குடா..//

லே அவுட் பண்றது அவரோட செக்ரட்டரி ஆச்சே....

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோவந்திருக்கும் கோடான கோடி அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்!

MANO நாஞ்சில் மனோ said...

//வந்திருக்கும் கோடான கோடி அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்!//

என்னய்யா கண்ணு தெரியலையாக்கும்...

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

சிபி அவர்களுக்கு நன்றி!

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

திரு மனோ அவர்களே! தாங்கள் ஒரு கோடியிலும் திரு சிபி அவர்கள் ஒரு கோடியிலும்! நிற்பதால் அப்படி சொன்னேங்க!

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
@சி.பி.செந்தில்குமார்

சிபி அவர்களுக்கு நன்றி!//

அந்த டுபுக்கு பிட்டு படம் பார்க்க ஓடிட்டான்...

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

" MANO நாஞ்சில் மனோ said...
//விக்கி உலகம் said...
@சி.பி.செந்தில்குமார்

சிபி அவர்களுக்கு நன்றி!//

அந்த டுபுக்கு பிட்டு படம் பார்க்க ஓடிட்டான்..."

>>>>>>>>>

சரி விடும்! பாவம்! இப்படியாவது மனச தேத்திக்கட்டும் ஹிஹி!

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Thakkali...pinneteka..

Prabu Krishna said...

உண்மைதான் நண்பா... ரசிக்க மட்டுமே வேண்டும் அதற்கு மேல் இல்லை.

குணசேகரன்... said...

"அவன் பாக்குற பொழப்ப நாம பாக்க ஆரம்பிச்சா நம்ம வயித்து பொழப்ப யாரு பாக்குறது"--உண்மை http://zenguna.blogspot.com/

FOOD said...

லே அவுட் சூப்பர். காண ’கண் கோடி’ வேண்டும்.

நிரூபன் said...

இந்த ரசிகன் அப்படிங்கற விஷயம் ரொம்ப நாளா விவாதிக்க நெனச்சேன்......இப்பதான் அதுக்கு ஒரு விடிவு வந்துது......நான் ஒரு அடிப்படை பாமரன் என்ற நினைப்பு என்னை விட்டு சென்று விடாதபடி நகத்திவருகிறேன்.......//

என்ன ஒரு அபையடக்கம். இவ் வரிகளில் தெரிகிறது. நாம இதனை நம்பனுமாக்கும்;-))

FOOD said...

//நான் ஒரு அடிப்படை பாமரன் என்ற நினைப்பு என்னை விட்டு சென்று விடாதபடி நகத்திவருகிறேன்.......//
நம்புறேன் நண்பா, நம்புறேன்.

நிரூபன் said...

டெம்பிளேட் கலக்கல் சகோ. டுவிட்டர் பறவை பறந்து வந்து ஹாய் சொல்லி வர வேற்கிறது.

நிரூபன் said...

உங்களின் அலசலை அருமை, சினிமாவை மட்டும் ரசிக்கலாம், அதனை விடுத்து அந்த நடிகர்களுக்குப் பின்னாடி போய் கோபுரத்தில் ஏற்றி, கொலு வைத்துக் கும்பிடுவது முறையல்ல எனும் உங்களது கருத்துக்களோடு நானும் உடன்படுகிறேன்.

தமிழ்வாசி - Prakash said...

கொசுறு: ஒரு மாக்கானின் பார்வையில் இந்த விஷயங்கள்........தக்காளி பொங்குறவங்க பொங்கலாம்....!>>>>

என்ன சொல்றிங்க?

தமிழ்வாசி - Prakash said...

உம்ம ப்ளாக் சட்டை ரொம்ப நல்லாயிருக்கு மாம்ஸ்.

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

ரைட்டு ..

விக்கியுலகம் said...

@குணசேகரன்...

வருகைக்கு நன்றி மாப்ள!

விக்கியுலகம் said...

@பலே பிரபு

வருகைக்கு நன்றி மாப்ள!

விக்கியுலகம் said...

@"என் ராஜபாட்டை"- ராஜா

வருகைக்கு நன்றி மாப்ள!

விக்கியுலகம் said...

@FOOD

" FOOD said...
லே அவுட் சூப்பர். காண ’கண் கோடி’ வேண்டும்."

>>>>>>>>>>>

வருகைக்கு நன்றி மாப்ள!

உங்களுக்கு பிடிசிருக்கரதுக்கும் நன்றி!

விக்கியுலகம் said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

வருகைக்கு நன்றி மாப்ள!

விக்கியுலகம் said...

@தமிழ்வாசி - Prakash

வருகைக்கு நன்றி மாப்ள!

விக்கியுலகம் said...

@நிரூபன்

வருகைக்கு நன்றி மாப்ள!

செங்கோவி said...

நல்லவேளை நம்மளை மாதிரி நடிகைக்கு ரசிகரா இருக்குறவங்களைத் திட்டலை..

sathish777 said...

உங்க கருத்துக்கள் சூப்பர்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஏன்யா இப்படி இந்த நடிகனுங்களுக்கு பல்லக்கு தூக்குறோம்.........கொஞ்ச ஆழமா சிந்திச்சா........ஒரு சாதாரண மனிதன் செய்ய முடியாததை சினிமாவில் வரும் கதா நாயகன் செய்வதை மனது மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறது.......அதே அவன நாட்டுக்கு இறங்கி வேல செய்ய வாடான்னா..........அதுக்கு ஆயிரம் பதில் வச்சி இருக்கானுங்க சொல்றதுக்கு..........


அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்! இது நூறு வீத உண்மையும் கூட!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

லே அவுட் அசத்தல் மக்கா!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

தோஸ்துகள் பகுதியில் என்னோட பேர் இல்லையே தக்காளி! அப்டீன்னா நான் உன்னோட தோஸ்த் இல்லையா?

Philosophy Prabhakaran said...

அடிக்கடி தக்காளின்னு சொல்றீங்களே அப்படின்னா என்னண்ணே #டவுட்

ஜீ... said...

புது டெம்ப்ளேட் கலக்கல்ஸ்! :-)

நா.மணிவண்ணன் said...

அண்ணே நான் இப்பலாம் அப்படி இல்ல

அஞ்சா சிங்கம் said...

தக்காளி பின்றான்யா

சசிகுமார் said...

மாப்ள நீ எது எழுதினாலும் கலக்கல் தான்யா

விக்கியுலகம் said...

@செங்கோவி

"செங்கோவி said...
நல்லவேளை நம்மளை மாதிரி நடிகைக்கு ரசிகரா இருக்குறவங்களைத் திட்டலை.."

>>>>>>>

வேணும்னா சொல்லுய்யா மாப்ள உனக்கும் கொஞ்சம் பார்சல் அனுப்புறேன் ஹிஹி!

விக்கியுலகம் said...

@ஆர்.கே.சதீஷ்குமார்

வருகைக்கு நன்றி நண்பா!

விக்கியுலகம் said...

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

வருகைக்கு நன்றி நண்பா!

............
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
தோஸ்துகள் பகுதியில் என்னோட பேர் இல்லையே தக்காளி! அப்டீன்னா நான் உன்னோட தோஸ்த் இல்லையா?

>>>>>>>>>

வலதுபக்கம் பாருயா எல்லோரோட பதிவுல உம் பேரு மட்டும் இங்க்ளிஷ்காரன் பேருல இருக்கா பாத்தியா ஹிஹி!

விக்கியுலகம் said...

@ஜீ...

வருகைக்கு நன்றி நண்பா!

..........


ஜீ... said...
புது டெம்ப்ளேட் கலக்கல்ஸ்! :-)
.........
நன்றி

விக்கியுலகம் said...

@Philosophy Prabhakaran

" Philosophy Prabhakaran said...
அடிக்கடி தக்காளின்னு சொல்றீங்களே அப்படின்னா என்னண்ணே #டவுட்"

>>>>>>>>>>

வருகைக்கு நன்றி நண்பா!

நான் என்னைத்தான் அப்படி சொல்லிப்பேன்....எனக்கு தக்காளி ரொம்ப பிடிக்கும்.....ஹிஹி!

விக்கியுலகம் said...

@அஞ்சா சிங்கம்

"அஞ்சா சிங்கம் said...
தக்காளி பின்றான்யா"

>>>>>>

வருகைக்கு நன்றி மாப்ள!.........
எதைன்னு சொல்லலையே ஹிஹி!

விக்கியுலகம் said...

@Speed Master

வருகைக்கு நன்றி மாப்ள!

விக்கியுலகம் said...

@சசிகுமார்

"சசிகுமார் said...
மாப்ள நீ எது எழுதினாலும் கலக்கல் தான்யா"

>>>>>>>

வருகைக்கு நன்றி மாப்ள!.........

Jayadev Das said...

//ஆனாலும் கோடிக்கணக்குல இவனுங்க ஊதியம் வாங்கிட்டு தான் இருக்கானுங்க......... ஒரு உழைப்பாளி 12 மணி நேர கடின உழைப்ப செய்ஞ்சாலும் அவனால 250 ரூபா ஒரு நாளைக்கு வீட்டுக்கு கொண்டு போக முடியாத இந்த காலத்துல......\\ ஒன்னு பண்ணுங்க சார், இந்த 250 ரூபா உழைப்பாளிங்க லிஸ்டு ஒன்னு எடுங்க, அவங்களை ஒவ்வொருத்தரா வச்சு படம் எடுத்து அவங்களையும் கோடி கோடியா சம்பாதிக்குமாறு செஞ்சுடுங்களேன், தீர்ந்தது பிரச்சினை!!

Jayadev Das said...

\\பத்து ரூபாயிலிருந்த கட்டணம் இன்று 200 ரூபாவரை சென்று இருக்கிறது.....\\அந்த படத்துக்குரிய விலைக்கு மேல் டிக்கட் விலை அதிகம் என்று எண்ணினால், படத்திற்கே போகாமல் தவிர்க்கலாமே? கொஞ்சம் பொறுத்திருந்தால் "இந்தியத் தொலைக்காட்சிகளிலேயே முதல் முறையாக......" என்று TV-ல எவனாச்சும் போடுவான் அப்போது இலவசமாவே பார்த்துக் கொள்ளலாமே?

Jayadev Das said...

\\ஒரு சாதாரண மனிதன் செய்ய முடியாததை சினிமாவில் வரும் கதா நாயகன் செய்வதை மனது மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறது.\\ டைரக்டர் சொன்னதைத்தான், நடிகன் செய்கிறான், அதைப் போய் உங்களை யார் நிஜம் என்று எடுத்துக் கொள்ளச் சொன்னது? \\அதே அவன நாட்டுக்கு இறங்கி வேல செய்ய வாடான்னா..........அதுக்கு ஆயிரம் பதில் வச்சி இருக்கானுங்க சொல்றதுக்கு.\\ வருவதும் வராததும் தனி மனிதச் சுதந்திரமல்லவா? எப்படி ஒருத்தரை நீங்கள் வலுக்கட்டாயமாக இழுத்து வந்து போராடு என்று வற்ப்புறுத்த முடியும்?

Jayadev Das said...

\\கம்யுனிசம் பேசிக்கிட்டு ஊருக்கு உபதேசம் பண்ணிட்டு பத்தோட பதினொன்னு அதோட இது ஒன்னு கணக்கா பொண்ணுங்க கூட ஓடிட்டு இருப்பானுங்க.\\ஒழுங்கீனம் என்பது நடிகர்களிடம் மட்டுந்தான் உள்ளதா? உங்கள் அக்கம் பக்கம் வீடுகளில், நண்பர் வட்டாரங்களில் எல்லோரும் ஒழுக்கமாகத்தான் இருக்கிறார்களா? செய்திதாட்களைப் பார்த்தால் நாறுகிறது, கள்ளக் காதல் விஷயங்கள். எல்லோருமே அப்படித்தான் என்னும் பொது, நடிகன் பெண்ணோடு ஊர் சுற்றுவதை மட்டும் ஊதிப் பெரிதாக்குவது ஏனோ? ஒரு பெண்ணும், ஆணும் பரஸ்பரம் விருப்பத்துடன் உடல் உறவு கொள்வது தப்பென்று எந்த சட்டமும் சொல்லவில்லை என்று சுப்ரீம் கோர்டே சொல்லிவிட்டதே, பின்னர் அதை ஏன் ஒரு பிரச்சினையக்குகிரீர்கள்?

Jayadev Das said...

\\துட்டு போட்டு படம் பாத்தியா....புடிச்சிருக்கா சூப்பர் அப்படின்னு சொல்லிட்டு போயி பொழப்ப பாப்போம்.........அத விட்டுட்டு அவன் பாக்குற பொழப்ப நாம பாக்க ஆரம்பிச்சா நம்ம வயித்து பொழப்ப யாரு பாக்குறது.........!\\ உங்களுக்கு சினிமா புடிக்காது, ஈசியா சொல்லிட்டீங்க, இப்போ எனக்கு கிரிக்கெட் பிடிக்காது, மேட்ச் பார்க்காதீங்கன்னு நான் சொல்ல முடியுமா? சொல்லிட்டு ஊருக்குள்ள இருந்திட முடியுமா? அவனுங்க மட்டும் என்ன நாட்டுக்கா உழைக்கிரானுங்க? இல்லை நக்மா, லட்சுமி ராய் போன்றவர்களைப் பார்த்தும் கண்ணை மூடிக்கிரானுங்களா? இல்லை சூதாடத்துல ஈடுபடவே இல்லையா? வயிற்றைக் கெடுக்கும் கோலாக்களை அவனுங்க குடிக்காம நம்மை மட்டும் குடிக்கச் சொல்ல வில்லையா? இல்ல உலகக் கோப்பையை வென்றதால் நம் நாட்டின் ஊழல் ஒழிந்து விட்டதா, ஏழைகள் வயிறு நிரம்பிவிட்டதா? அவனுங்களை நாடே தலை மேல தூக்கி வச்சுகிட்டு ஆடுதே அதுக்கென்ன சொல்வீங்க?