வணக்கம் நண்பர்களே.......
தமிழ் எனும் இளைஞ்சன் பயிற்சி முடித்து எல்லை பாதுகாப்பு படையில இணைந்த நேரம்......பல கனவுகளுடனும், தேசியப்பற்று எனும் வெறியுடனும் தன் வாழ்கையின் அடுத்த அத்தியாயத்தை எடுத்து வைக்க ஆரம்பித்தான்..........அதுவரை வீட்டில் முதல் மகன் அதனால் தாய், தந்தை அவனை இந்த அர்ப்பணிப்பு விஷயத்துக்கு அனுப்ப விரும்பவில்லை....வீட்டில் அனைவரிடம் பெரிய வாக்குவாதம் செய்து இந்த நாட்டு சேவைப்பணிக்கு சேர்ந்தான்.........
இனி ஆரம்பம்..........
காலையில பரேடு முடிந்தது........தினமும் பல கிமி ஓடி வரவேண்டும்......அதுவே உடல் பயிற்ச்சியின் முதல் தகுதி...........அந்த இடம் மிதமான குளிர் நிறைந்த இடம்......மனசை வருடிச்செல்லும் காற்று.........சுற்றுப்புற அமைதியான சூழ்நிலை ஆகியவற்றில் தன்னை மறந்து போனான் அந்த மனிதன்........
ரம்மியமான காலைப்பொழுது..........
டேய்.........உன்ன கூப்பிடுறாங்க.........(நண்பன் சொல்லிவிட்டு சென்றான்)
அந்த அதிகாரிக்கு ஒரு வணக்கத்தை வைத்து விட்டு........அவருடன் ஜீப்பில் செல்லத்துவங்கினான்........
ஜீப் கொஞ்ச நேரம் பயணித்தது........இப்போது நின்ற இடம் ஒரு அழகிய கிராமம்..........அந்த கிராமத்து தேவதைகள் அவ்வளவு அழகு(ஹிஹி!)......அழகான முகங்களா தெரிந்தன......(அமைதியான!)அந்த கிராம மக்கள் எங்களை கண்டவுடன் கலவரமானத்தை புரிந்து கொள்ள முடிந்தது.......
அந்த வீட்டின் முன் ஜீப் நின்றது.......வண்டிச்சத்தம் கேட்டு உள்ளிருந்து ஒரு இளைஞ்சன் வெளியில் வந்தான்..........அதிகாரி அவனிடம் சில பாதுகாப்பு சம்பந்தப்பட்ட கேள்விகளை கேட்டார்.........அவனிடம் எந்த சலனமும் இல்லை........அதிகாரிக்கு கோவம் வந்துடுச்சி.........
உன்னத்தான் கேக்குறேன் சொல்லு..........
அவனிடம் இருந்து பதிலில்லை...........அதிகாரியின் கடைக்கண் பார்வை கவனித்த என்னுடன் வந்த சிப்பாய் தன் நீண்ட துப்பாக்கியின் பின் புற முனையால் அந்த இளைஞ்சனின் வாயில் இடித்தான்.......ரத்தம் கொட்ட ஆரம்பித்தது..........(மனசுக்குள் ஒரு வித கலக்கம்!).............
அவனின் ஓலம் கேட்டு உள்ளிருந்து ஒரு பெண் ஓடிவந்தாள்.........அந்த அதிகாரியின் காலைப்பிடித்துக்கொண்டு அவனை விட்டு விடுமாறு மன்றாடினாள்.........அந்த அதிகாரியின் கண் பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்ட நானும் அந்த இன்னொரு சிப்பாயும்.......அந்த வீட்டின் உள் நுழைந்து ஆராயலானோம்.......ஒரு அகழியின் பள்ளத்தில் இரு AK 47 ரக துப்பாக்கிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தன.......
அந்த துப்பாக்கிகளை கொண்டு வந்து அதிகாரியிடம் காட்டினோம்.......அந்த இளைஞ்சனை ஜீப்பில் ஏற்ற சொன்னார் அதிகாரி.......அவன் எந்த எதிர்ப்பும் காட்டாமல் ஏறி அமர்ந்தான்......அந்த பெண் ஓலம் அதிகமானது.....அவள் அவனின் தாய் என்பது புரிந்து நெஞ்சம் பதைத்தது...........
ஜீப் வேகமாக போய் கொண்டு இருந்தது.....நான் அந்த மனிதனின் முகத்தையே பார்த்து கொண்டு இருந்தேன்....எந்த வித பதைப்பும் அந்த முகத்தில் காணப்படவில்லை...........ஜீப் தலைமையிடத்தை நெருங்கியது........
அவன் அந்த இருட்டு அறையில் அடைக்கப்பட்டான்....இப்போது வாயிலிருந்து வந்த ரத்தம் நின்று கட்டி இருந்தது...........அதிகாரி கேள்வி கேக்க துவங்கினார்.......
எங்கிருந்து கிடைத்தது இந்த துப்பாக்கி உனக்கு.......நீ எந்த அமைப்பு உறுப்பினர்.......சொல்லு(பல முறை கேட்டும் பயனில்லை!)
சிறிது நேர சித்ரவதைக்கு பிறகு..........அவன் உதிர்த்த சில வார்த்தைகள் கத்தியை என் நெஞ்சில் இறக்கியது போல் இருந்தது...........அவன் பேசிய மொழி புரியவில்லை என்றாலும் என் சக சிப்பாய் எனக்கு புரிய வைத்தார்...........
"எங்கள் பூமியில் எங்களை அடிக்கவும், சித்ரவதை செய்யவும் உங்களுக்கு யார் அனுமதியளித்தது" - அவன்...........
அரசாங்கம்.......இது அதிகாரியின் பதில்
எந்த அரசாங்கம்.........!........கேட்டுக்கொண்டே மயங்கி விழுந்தான் அந்த இளைஞ்சன்!
கொசுறு: இது ஒரு சீரியஸ் பதிவு என்பதாக நினைக்க வேண்டாம்.......வரும் பகுதிகளில் பல சிரியஸ் விஷயங்களும் வரும்(!)........

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
38 comments:
அட ஆமா வடை!!
வடை???
இந்த முடிவே திரில்லிங்கா இருக்கு...ம்ம் பார்ப்போம் மிகுதியை!!
>>"எங்கள் பூமியில் எங்களை அடிக்கவும், சித்ரவதை செய்யவும் உங்களுக்கு யார் அனுமதியளித்தது" - அவன்...........
sapaash சபாஷ்.. சரியான கேள்வி..
//கொசுறு: இது ஒரு சீரியஸ் பதிவு என்பதாக நினைக்க வேண்டாம்.......வரும் பகுதிகளில் பல சிரியஸ் விஷயங்களும் வரும்(!)........//
எதிர்பார்ப்புகளுடன்! பகிர்வு நன்று.
தொடருங்கள்............
நீங்க மிலிட்டரிலயா இருந்தீங்க?
"எங்கள் பூமியில் எங்களை அடிக்கவும், சித்ரவதை செய்யவும் உங்களுக்கு யார் அனுமதியளித்தது" - அவன்...........//// சபாஷ் சரியான கேள்வி..
அந்த கிராமம் எங்கு இருக்கிறது என்று சொன்னால் நன்றாக இருக்கும்..
மீதி சொல்லியிருக்கலாம். சன் டிவி மெகா தொடரில் வரும் பிரேக் மாதிரி இருக்கிறது.. தொடர்ந்து எழுதுங்கள்...
சுவாரஸ்யம்...
உண்மை சம்பவம் அதனால் வேறெதும் செல்ல வில்லை...
தொடரட்டும்..
சுவராசியமா இருக்கு, நல்ல எழுத்து நடை.....!
அந்த டயலாக் கேட்க திக்குன்னு இருக்கு!
எதிர்பார்ப்புகளுடன் பின் தொடர்கிறேன்.
தொடருங்கள் பாஸ்! வெய்ட்டிங்!
எவ்வளவு சைலண்டா இருக்காங்கப்பா! சொல்லவே இல்ல பாஸ்!:-)
நன்றாகத்தான் இருக்கிறது ஐயா... தொடருங்கள்.
ஓகே...ஓகே...
தொடருங்க சோல்ஜர் தொடருங்க...
சீரியஸா இருக்கே....!!!
@மைந்தன் சிவா
வாய்யா மாப்ள வா!
@பலே பிரபு
வருகைக்கு நன்றி நண்பா!
@FOOD
வருகைக்கு நன்றி நண்பா!
@சி.பி.செந்தில்குமார்
அண்ணே வந்ததுக்கு நன்றிண்ணே ஹிஹி!
@செங்கோவி
ஆம் என்றோ பாம் என்றோ சொல்வதை நான் விரும்புவதில்லை ஹிஹி!
@டக்கால்டி
ok ok
@பாட்டு ரசிகன்
வருகைக்கு நன்றி நண்பா!
@!* வேடந்தாங்கல் - கருன் *!
இடம் பெயர் மறந்து விட்டது நண்பா ஹிஹி!
@ஜீ...
வருகைக்கு நன்றி நண்பா!
@பாலா
வருகைக்கு நன்றி நண்பா!
@பன்னிக்குட்டி ராம்சாமி
வருகைக்கு நன்றி நண்பா!
@MANO நாஞ்சில் மனோ
அண்ணே வந்ததுக்கு நன்றிண்ணே ஹிஹி!
@ரஹீம் கஸாலி
ஓகே...ஓகே..ஓகே...ஓகே..
@Jana
எனன புதுசா மரியாத யோவ் நக்கலா ஹிஹி!
அதுவரை வீட்டில் முதல் மகன் அதனால் தாய், தந்தை அவனை இந்த அர்ப்பணிப்பு விஷயத்துக்கு அனுப்ப விரும்பவில்லை....வீட்டில் அனைவரிடம் பெரிய வாக்குவாதம் செய்து இந்த நாட்டு சேவைப்பணிக்கு சேர்ந்தான்........//
மனசு வலிக்குது சகோ, நாட்டிற்காக தங்கள் உயிரினையும் பொருட்படுத்தாது, வாழும் உள்ளங்களின் தியாகத்திற்கும், அர்ப்பணிப்பிற்கும் எவையுமே ஈடாகாது.
ஜீப் கொஞ்ச நேரம் பயணித்தது........இப்போது நின்ற இடம் ஒரு அழகிய கிராமம்..........அந்த கிராமத்து தேவதைகள் அவ்வளவு அழகு(ஹிஹி!)......அழகான முகங்களா தெரிந்தன......(அமைதியான!)அந்த கிராம மக்கள் எங்களை கண்டவுடன் கலவரமானத்தை புரிந்து கொள்ள முடிந்தது.......//
காஷ்மீருக்கா சென்று விட்டீர்கள்...
அழகான பெண்கள் இருக்கும் இந்தியாவின் இடங்களில் காஷ்மீரும் ஒன்றல்லவா.
"எங்கள் பூமியில் எங்களை அடிக்கவும், சித்ரவதை செய்யவும் உங்களுக்கு யார் அனுமதியளித்தது" - அவன்...........
அரசாங்கம்.......இது அதிகாரியின் பதில்//
முதல் பகுதியில் திரிலிங் உடன் ஆரம்பம் இடம் பெற்றிருக்கிறது..
கதை நிகழ் களம் எந்த ஊர் என்று போட்டால் இன்னும் சுவாரசியமாக இருக்கும்.
கதையினை, நகர்த்தும் விதம்...அருமை..
அதுவும் விசேடமாக காட்சி வர்ணணைகள், கதையின் போக்கிற்கேற்ப சுவாரசியத்தைக் கூட்டுகின்றன.
Post a Comment